Tuesday, May 2, 2023

SAMIGAL SANGAMAM 23

 SAMIGAL SANGAMAM 23

சாமிகள் சங்கமம் -23

இந்தத்தலைப்புக்கு பொருத்தமேயில்லாத ஒரு சங்கமம் இது . சரி அது இருக்கட்டும் . கௌரிக்கு பெரிய நிம்மதி அப்பாடா மேடம் வீட்டுக்கு தனியா போகும்படி ஆகிவிடுமோ , மாமா வரமாட்டார் என்று குழம்பிக்கிடந்தவளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இறைவனின் அருள் என்றே ஏற்றுக்கொண்டாள் . சாரதா, மேடத்துடன்  தொடர்பு கொண்டு சந்திப்புக்கு சனி /ஞாயிறு வைத்துக்கொள்ளலாமா என்ற போது , மேடம் சொன்ன தகவல். சனிக்கிழமை களை  நம்பி பிளான் போடடாதே; திடீரென்று செமினார், மீட்டிங் இல்லையென்றால் கல்ச்சுரல் மீட் என்று ஏதாவது வந்து விடும் அதனால் ஞாயிறு தான் எப்போதும் உகந்தது என்ன? என்றார் மேடம். சரி மேடம் 11.00 மணி காலை சரிப்படுமா?  என்றாள் சாரதா . OK -சாப்பிட வரியா? என்றார் மேடம் அப்படி கேக்காதீங்க என்றாள் சாரதா . ஓ பெரிய மனுஷி நீ உன்னை எப்படி கேக்கணும் சொல்லிக்கொடு அப்படியே கேக்கறேன் என்றார் சுபத்ரா. இல்ல மேடம் என்னோட பிரேமா வும் புது ஸ்டுடென்ட் கௌரியும் வருவ தாக பிளான் அதுனால சாப்பிட வரீங்களா னு கேளுங்க , எல்லார் சார்பிலே யும் நானே ஓ என்று பலகுரலில் சொல்லிடறேன், அதுனால 3 பேர் வரலாம் னு இருக்கோம் என்றாள்  சாரதா . சரி வாங்க என்றார் மேடம் .

மேடம் சூப்பர் மெனு போடுங்க என்றாள் சாரதா . சூப்பர்  மெனு வேணும்னா புதுசா அச்சகடிச்சு வழ வழ அட்டைல தான் போடணும். சாப்பிட வாடின்னா என்னமோ கண்டிஷன் லாம் போடுறயே ;உனக்கு மட்டும் உப்புமா பாக்கி பேருக்கு வெரைட்டீஸ் போட்டு ஒன்ன நோகடிக்கறேன் பார் என்று மிரட்டினார் சுபத்ரா மேடம். ஐயோ தெரியாம சொல்லிட்டேன் மேடம் , உப்புமாவைப்போட்டுறாதீங்க என்று கெஞ்சினாள். என்னிக்கு நான் உனக்கு மோசமான ட்ரீட் கொடுத்திருக்கேன் சொல்லு பாப்போம் ; இப்படி ஏதாவது வம்பு பண்ணின --அப்புறம் உப்புமாதான் அதுவும் அரிசி உப்புமா என்று மிரட்டினாள் சுபத்ரா.

 மெய்ன் காட் கேட்டில் பழங்கள் வாங்கிக்கொண்டனர் .ஒரு ஆட்டோ பிடித்து உறையூர் சாலையில் ஒரு திருப்பத்தில் பெரிய கேட் போட்ட வீட்டில் இறங்கினர். கேட்டை திறந்து மெல்ல பூனை மாதிரி உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்தினாள் சாரதா [மணி 10.45], பின்னால் பிரேமா சற்று தள்ளி கௌரி பவ்யமாக நின்றிருக்க, மேடம் வந்து வாங்க என்று கை கூப்பி வரவேற்றார் . இவர்களனைவரும் GOOD MORNING MADAM என்று கோரஸ் பாடினர் . உள்ளே ஹாலில் சோபா செட்டில் இவர்களை அமரவைத்து உள்ளே சென்று 4 டவரா  செட் கம கம காபியுடன் கொண்டு வந்தார் மேடம். சாரதா பழங்களை கௌரியிடம் கொடுத்து மேடத்திடம் கொடு என்றாள் . கௌரி கூச்சத்துடன் மேடம் கைகளில் தந்து வணக்கம் சொன்னாள் . மேடம் : She is overwhelmed by  fear என்று கௌரியை விவரித்தார் . Actually  she is not afraid ; but fear overwhelms her என்றார் மேடம் . ரெண்டும் ஒண்ணு  தானே மேடம் என்றாள் பிரேமா . மேடம்: overwhelmed என்றால் ஒருவரை மீறி நடப்பது ; afraid என்றால் உண்மையிலேயே பயப்படுவது. overwhelmed என்றால் அவளை மீறி கொள்ளும் பதட்டம் ;அது பிறர் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிக்கொடுத்து பிறரை அச்சுறுத்திவைப்பது சொல்லிக்கொண்டே சாரதாவின் காதைப்பிடித்து நன்றாக திருகி , இவ தான்     மேடம் அடிப்பாங்க ,கடிப்பாங்க அப்பிடி திட்டுவாங்க இப்பிடி கொட்டுவாங்க என்று நீட்டி முழக்கி இவளை பயத்தில்  அமிழ்த்தி வைத்திருக்கிறாள் . ஒன்னத்தாண்டி உதைக்கணும் ; என்று சாரதாவை கடிந்து கொண்டாள்     மேடத்துகிட்ட என்னைப்பத்தி என்ன சொல்லிருக்க என்றுசாரதா கௌரியை முறைக்க மேடம் அவளை ஏன் அதட்டற அவ வாயே தெறக்கல  பாவம்  . இவ சொல்லாட்டி எனக்கு உன்னைத்தெரியாதா , நீ எப்பிடியெல்லாம் எல்லாரையும் ஏச்சுக்கட்டுவனு எனக்கு நல்லா தெரியும் . அவ எங்கிட்ட பேசவே பயமா இருக்குன் றா அவ உன்ன பத்தி புகார் சொல்லுவாளா ? சும்மா எல்லாரையும் அரட்டறது உருட்டறது இதெல்லாம் விட்டுடு என்று சாரதாவைக்கடிந்து கொண்டாள் . ok மேடம் என்று தலை கவிழ்ந்தாள் சாரதா. இப்படியாக சாரதாவை கொஞ்சம் அடக்கி வைத்து கௌரி பற்றி கேட்டாள் . எனக்கு மாமா தான் ஆதரவு எங்க அப்பாவை நான் பார்த்ததில்லை. மாமா கல்யாணம் பண்ணிக்கல , எங்க பாட்டி, தயார் , மாமா நான் எல்லாரும் ஒரே வீட்டில தான் இருக்கோம். எங்க மா மாவும் ராமசாமி சாரும் க்ளாஸ் மேட்ஸ் ; அந்த சார நான் சமீபத்துல தான் பார்த்தேன். என்றாள்  கௌரி.

ஏ சாரதா எவ்வளோ cogent ஆ பேசறா பார் . அவளுக்கு பயம் கிடையாது , ஆனா தப்பு பண்ணிடுவோமோ என்று கவலை அதுனால தான் வாய் திறக்க மாட்டேங்கறா என்று சரியாக கணித்துவிட்டாள் சுபத்திரா . இடை இடையே உள்ளே போய் மதிய உணவு ஏற்பாடுகளையும் கவனித்தார் மேடம். . ஒரு பரத நாட்டிய CD யை ஓட்டி கௌரியை நாட்டியம் ஆடச்சொன்னாள் . கௌரி அற்புதமாக நாட்டியம் ஆடினாள் . உங்களுக்கு அவளை  முன்னாலேயே தெரியுமா என்றாள்  சாரதா . ஹுஹும் இப்ப அவ அப்பிளிக்கேஷன் பாத்து தெரிஞ்சதுதான் என்றார் மேடம்.. பிரேமாவின் டெல்லி வாழ்க்கை குறித்து தெரிந்துகொண்டார் மேடம்.

மெல்ல வாய் திறந்தாள் பிரேமா டெல்லில ஏதோ ப்ரோக்ராம் பண்ணினீங்களாமே என்றாள்  பிரேமா.

அது ஜி 20 மீட்ல CULTURAL PRESENTATION . கிராண்ட் சக்ஸஸ் என்றார் மேடம். சாரதா சொல்லி தான் தெரியும் என்றாள் பிரேமா .

சூப் பர் VEG PULAV மற்றும் CAULI FLOWER மசாலா FRY , பொட்டடோ FINGER சிப்ஸ , மிளகு ரஸம் , MIXED  VEGETABLE FRY +தயிர் சாதம் +ஆவக்காய் . சாரதா வெளுத்துக்கட்டினாள் , பிறரும் நன்கு உண்டனர். சிறிது நேரம் அரசியல் பேசினர் . பின்னர் 3.30 வரை அரட்டை பின்னர் சாரதா அவளை பயமுறுத்தாத பாவம் என்றார் மேடம். நான் மேடம் ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்கன்னு தான் சொன்னேன் அவ ரொம்ப பயந்துட்டா.  மேடம் என்னை மன்னிச்சுருங்க என்றாள் சாரதா . ச்சீ அதெல்லாம் பெரிய வார்த்தை உன்னை எனக்கு தெரியும் ரொம்ப ENTHUSIASTIC

ADVCE  வேண்டியதில்லை என்றதும் சாரதா சிரித்துவிட்டாள் -கௌரியும் கூடத்தான் இனிமேல் கௌரிக்கு வேறு வகை செயல் பாடு வந்துவிடும் என்று மேடம் புரிந்து கொண்டார். அன்புடன் அனைவரும் .விடை பெற்றனர்.

தொடரும்    அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...