Tuesday, May 2, 2023

Rengaa Rengaa -24

 Rengaa Rengaa -24

ரெங்கா ரெங்கா -24

காலை 7.40க்கு திருச்சி ஜங்க்ஷன்  , இறங்கி ஓடினான் ரெ பஸ்ஸை பிடிக்க .  ஓடினானே  தவிர , பஸ் அங்கங்கே  நின்று உயிரை வாங்கியது .திருச்சியைப்போல வேறெங்கும் பஸ் சேவை உண்டா என மார்தட்டிக்ககொள்ளும் திருச்சி அன்பர்களே , வேறெந்த ஊரிலும் 7 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 1 மணி நேரம் எடுத்துக்கொள்வதில்லை இந்த அழகில் இரண்டு நடத்துனர்கள் , மாறி மாறி காணாமல் போய் பஸ்ஸை நகரவிடாமல் செய்வதில் சமர்த்தர்கள் . இன்று  கஸ்தூரி ரெங்கனுக்கு தனது சொந்த ஊர்  மீதே வெறுப்பு தட்டியது ; இறங்கி நடந்து விடலாமா என்று மனம் பரபரத்தது .அப்பாடா சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கடந்தாயிற்று எனும் போது அடுத்த திருப்பத்தில் நின்று 2 கண்டக்டர்களும் சீர ங்கே சீரங்கே என ஏலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அடுத்த மூலையில் தலையில் 25 கோழிகளை தலைகீழாக தொங்கவிட்டபடி சென்று கொண்டிருந்த கிழவனை ஆஞா , ஊர்ல செல்லம்மா வந்திருச்சா என்று விசாரணையில் ஒரு கண்டக்டர் இறங்க, மற்றவர் இதுதான் தருணம் என்று  குப்பைத்தொட்டியின் பின்னே ஓட ,  ரெ ஒருகொடூர  வில்லன் போல கோபக்கனல் வீசினன் .

எப்பதாண்டா சீரங்கம் போவீங்க என்று கத்தவேண்டும் போல் இருந்தது ரெ வுக்கு .. இத்தனை காலம் திருச்சியில் வாழ்ந்த நாட்களில் இந்த பஸ் அவலங்களை அவன் [அவன் மட்டுமல்ல வேறு எவனும்] உணர்ந்ததே இல்லை . அதனால் தான் திருச்சியில் பஸ் ஒவ்வொரு நிமிடமும் இயங்கிக்கொண்டே இருப்பதாக பெருமை கொள்வர் திருச்சி அன்பர்கள் . ஒவ்வொரு நிமிடமும் இயங்கி ஒவ்வொரு அங்குலமாக நகர்ந்து முக்கிய இடங்களில் இருந்து இடம் பெயர பஸ் ஸின் கிரஹ நிலைகள் மாறவேண்டுமோ என்னவோ?.. முக்கிய இடங்கள் என்பன யாவை எனில் பஸ் நகராமல் முக்கிக்கொண்டேஇருக்கும் இடங்கள். வயிறு சரி இல்லாதவன் போல டுர் டர் என்று ஒலி  எழுப்பி  10 அங்குலம் நகர்ந்து சீரங்கே சீரங்கே என்று அலறி , வேறொரு அரசாங்க பஸ் தென்பட்டதும் ஏறிக்கொண்டிருக்கும் கிழவனின் கதி என்ன என்று நினைக்காமல் விர்ரென்று கிளம்பி திருஆனைக்கா வந்ததும் திருநாவுக்கா ல்லாம் வாங்க என்று இறக்கி விட்டு மீண்டும் டூர் டர் என்று நேரத்தை விழுங்கி பரிபூர்ணமாக 1மணி நேரம் ஆகாமல் சீரங்கே எல்லையை தொடமாட்டார்கள் திருச்சி தனியார் வண்டிகள் .ஒரு வழியாக 8.50க்கு சீரங்கே இறுதி நிறுத்தம் வந்ததும் பெரிய கல்லை சக்கரத்தில் அடியில் வைத்துவிட்டு டிரைவர்/ நடத்துனர்கள் தலை மறைவு ஆவார்கள் . கரெ நடந்து வர வழியில் ஒரே கூட்டம்  முரளி காபி கடையில். சில்லறை இப்போது ரெ யை காப்பி சாப்பிடடா என்று உந்தியது . ஒரு காபி வாங்கி பருகினான் . ஏன் மாடசாமி நல்ல ஹோட்டல்களில் புகுந்து புறப்படுகிறார் என்று புரிந்தது .

தொடரும்   அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

COUSINS -2

  COUSINS -2 சகோதர உறவு முறை -2 கஸின் என்னும் நபர் நமது பெற்றோரின் சகோதர /சகோதரிகளின் குழந்தைகள் அதாவது நாமும் அவர்களும் [அந்த குழந்தைகள...