SAMIs COME TOGETHER-24
சாமிகள் சங்கமம் -24
ஆட்டோவில் திரும்பும் போது ஒரு வித அமைதி ; கௌரி இனி அடிக்கடி மேடத்தை சந்திக்கவும் சமாளிக்கவும் வேண்டி வரும். நம்ம இங்கிலீஷை இன்னும் கொஞ்சம் டெவெலப் பண்ணிக்கணும் . அன்னக்கி இன்டர்வ்யூ வில மேடம் அப்புறம் கமிட்டீ ஆஃபீசர்கள் அனாயாசமா பேசறாங்க நம்ப பக்க பக்க னு முழிச்சுக்கிட்டு , சீ எனக்கே அசிங்கமா இருக்கு என்று சுய விமர்சனம் செய்துகொண்டாள் . அக்கா இங்கிலீஷ் நல்லா இம்ப்ரூவ் பண்ண வழி சொல்லுங்கக்கா என்றாள் கௌரி. . இதோ இதை ப்ப்பிடி என்று பிரேமா வை காட்டினாள் , அப்பிடியா என்று வாய் பிளந்தாள் கௌரி. என்ன தெரிஞ்சுக்கணும் என்றாள் பிரேமா . "குவாலிட்டி ஸ்பீச் " என்றாள் கௌரி.
அதுக்கு ஒரு வழி இருக்கு . உன்கிட்ட வாய்ஸ் கமாண்ட் சாப்ட்வேர் உள்ள PC வைத்துக்கொள். . ஒரு நல்ல TEXT எடுத்து வைத்துக்கொண்டு . வாய்ஸ் வழியே நீ படித்து அதை சிஸ்டம் எழுதட்டும். நீ ஒண்ணு படிச்சா அது ஒண்ணு எழுதும். நீ திரும்ப திரும்ப உன் உச்சரிப்பு சரியாகும் வரை படிக்க , உனது PRONUNCIATION சரியாகும் . அடுத்து ஒரே TEXT படிக்கும் நேரத்தை குறைக்க வேகமாக படிக்கவேண்டும் ; அப்படியே செய்து படிக்கும் வேகம் ஆதரிக்கும். ஸ்பீட் PRONUNCIATION ரெண்டும் சரியா ஆனதும் , நல்ல உயர்வான ரைட்டிங் எடுத்து முறையாக படிக்க உனது சொல்லாட்சி VOCABULARY விரிவடையும் . அந்த மாதிரி தயார் பண்ணிக்கிட்டா லெக்சர் பண்றது ரொம்ப ஈஸியா ஆயிடும் என்றாள் பிரேமா . மேடம் தான் சொல்லிக்கொடுத்தாங்க அப்பிடித்தான் நான் டெல்லி இன்டெர்வ்யூ வில ஒரு கலக்கு கலக்கி போஸ்ட் வாங்கிட்டேன்..
சாரதா " எங்களுக்கு சொல்லி தரல? " என்றாள்
நீங்க கேட்டிருந்தா நிச்சயம் சொல்லிருப்பாங்க , நான் கேட்டுதான் தெரிஞ்சுக்கிட்டேன்
என்றாள் பிரேமா உங்கள போன்ல காண்டாக்ட் பண்ணலாமா
என்று பிரேமாவைக் கேட்டு நம்பர் வாங்கிக்கொண்டாள் கௌரி. ஒரு இடத்தில் இறங்கி விடை பெற்று
, கிளம்பு முன் சாரதா சொன்னாள் இந்திரா காந்தி காலேஜ் ல அடுத்தவாரம் ஏதோ செமினார் வருது
மாலை 3--5.00 போலாமா அட்மிஷன் பிரீ
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment