Saturday, May 6, 2023

Rengaa Rengaa- 25

 Rengaa Rengaa- 25

ரெங்கா ரெங்கா -25 

வீட்டுக்கு ஓடினான் . வீட்டில் மள வென குளித்தான் . ஒரு பர்பி பாக்கெட்டை அம்மாவிடம் தந்து சேவித்தான் . ஏண்டா எளச்சுட்ட என்றார் தாயார் .பொய் சொல்லாதம்மா , சட்டை பாண்ட் இறுக்கி பிடிக்கறது எளச்சுட்டேனா என்று பதில் சொல்லி விட்டு அடையவளஞ்சான் அதிகாரியிடம் 1 பாக்கெட் கொடுத்து சேவித்து நன்றி சொல்லி குண்டூர் நிலவரம் விளக்கி விடை பெற்றான். அடுத்து தலைமைப்பீடாதிபதி ராமசாமி இல்லம் . அங்கே இவனுக்கு வாடா குழந்தே என்று அம்புஜம் வரவேற்க , எப்ப வந்த என ரா. சா கேட்க, ஸ்வீட் கொடுத்து சாஷ்டாங்க நமஸ்காரம்.  சம்பள விவரம் சொன்னான் .

பரவால்லடா பகவான் கண்ணை திறந்துட்டார் னு நினைக்கிறன்.. நீ என்ன பண்ற குண்ட்டூர் போனதும் ஒரு பேங்க் [அதாவது அந்த பேங்க் ஸ்ரீரங்கத்திலியும் இருக்கற பாங்கா பாத்து  அக்கவுண்ட் வெச்சுக்கோ, சம்பளத்துல அதுல போடு , செலவுக்கு கொஞ்சம் கைல வெச்சுக்கோ அம்மா கை ஒரு நாலாயிரம் குடுத்துட்டு போ . நாலாயிரமா என்றான் ரெ , ஆமாம் திவ்யபிரபந்தம் என்றார் ராமசாமி.. ஆஃபீஸ் நண்பர்களை பாக்கணும் என்றான் ரெ   மொதல்ல மாடசாமியைப்பாரு மத்தவனெல்லாம் அப்புறம் பாத்துக்கோ . எப்ப சார் போலாம் என்றான் ரெ . நாளை க்கு [உனக்கு லீவு தானே ?]  ஆஃபீஸ் பாக்கலாம் -ரா சா. மாலை கோயில் விசிட் , பக்கத்துவீட்டு நாய் [இப்போது குட்டி அல்ல] ரெ வைப்பார்த்து உர் உர் லொள் என்றது . பையன் கணேஷ் நாயை அடக்கி வாங்க அங்கிள் என்றான். சிறிது நேரம் பேசி விட்டு வீட்டில் போய் தோசை சாப்பிட்டான் ; பின் உறக்கம். காலை 5.30 ஜன்னலில் கோபுரம் மீண்டும் வந்து விட்டது. . காலை ஜங்க்ஷன் ஆஃபீஸ் . இதோ மாடசாமி எப்போதும் போல் கம்பீரமாக ; என்ன லீவா ? என்றார் ஆமாம் சார் இனிமே செவ்வாய் மத்தியானம் க்ளாஸ் . இன்னிக்கு நைட் கிளம்பனும் . கே மாடசாமி குறித்து விசாரித்ததை விரிவாக சொன்னான் .மாடசாமி உள்ளூர பெருமை கொண்டார். ஸ்வீட் பாக்கெட் தந்து காலை வணங்கினான். கேப்ரியல் பாத்துட்டியா? மா சா

 ஐயோ அவருக்கு ஸ்வீட் வாங்க விட்டுப்போச்சு சார் இங்க எங்கயாவது வாங்கி வரேன் என்றதும்  மாசா இரு இரு எங்கூட வா என்று புல்லெட் வண்டியில் இருவரும் புயல் வேகத்தில் கண்டோன் மென்ட்  LONDON BAKERY 3 நிமிடத்தில் அடைந்தனர். இரு பெட்டிகள் 10 , 10 கேக் கொண்டவை மாடசாமி செலெக்ஷன் 200/-ரூ பில் . ரெ  செலுத்தினான் அடுத்த 4 நிமிடத்தில் மாசா, ரா சா , ரெ மூவரும் கேப்ரியல் ரூமில். வா மேன் குண்டூர் மேன் , லீவா எத்ன சம்பளம் தராங்கோ -கெளவி கிட்டே FULL AMOUNT சொல்லாதே மேன் , ஒரு 3000/-ரூ கெளவிக்கி குத்துடு அது போதும் , சொம்மா வூட்ல இருந்து துன்றதுக்கு பத்தாது ? இத்தினி நாள் அது கூட இல்லையே ; கெளவிக்கி MEGA அதிஷ்டம் . முத்துலக்ஸ்மீ நம்போ மெஸ்சேன்ஜ்ர் BOY கேக் கிப்ட் தர்து எத்க்கோ , அல்லாரும் எத் க்கோ என்று ஒரே மகிழ்ச்சி.

இதே போல் ரெ செக்ஷனிலும் கேக் கொடுத்து விடை பெற்று வீடு வந்தான்            அம்மாவிடம்  4000/ரூ தந்தான் . ஒனக்கு நெறையா சம்பளம்வரதா என்றாள்  அம்மா.  ஆமாம் இவ்வளவு வருது என்று கிரிக்கெட் அம்பயர் WIDE BALL  காட்டுவது போல கைகளை அகல விரித்தான். அம்மாவுக்கு புரியவில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டு ஊருக்கு கிளம்பினான்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...