Monday, May 8, 2023

SAMIs COME TOGETHER -25

SAMIs COME TOGETHER -25

சாமிகள் சங்கமம்-25

ஏ கௌரி அதுக்கெல்லாம் [செமினாருக்கெல்லாம்]  போ . இங்கிலிஷ் பேசறதப்பத்தி கேட்டியே செமினார் ல சில சூப்பர் மண்டை கள் பேசும் நமக்கெல்லாம் --சாரி எனக்கு  தலை சுத்தும் ;ஆனா பொறுமையா உக்காந்தா நெறையா கத்துக்கலாம். சில சமயம் பெங்களூர் ஸ்டூடெண்ட்ஸ் பேசும் அம்மாடியோ பெரிய அத்தாரிட்டி மாதிரி முழங்கும் .

இப்போது மெல்ல வாய் திறந்தாள் பிரேமா ; எனக்கே ஒரு செஷன் வர வியாழன் 3.00 மணிக்கு இருக்கு, மேடம் தான் பிரிசைட் பண்ணறாங் க . என்ன டாபிக் ? என்றாள் சாரதா   "ART -A  GAME OF MOOD DEPICTION " .

 நெஜமாவே தல சுத்துது என்றாள் கௌரி. சுத்தும் சுத்தும் இன்னும் பாரு கோர்ஸ் படிக்கும் போது உடம்பு உலகம் எல்லாம் சுத்தும் "ஆனந்த தாண்டவமோ ஓஒ ஆடுகிறார் ஆண்டவனார் காலங்களெல்லாம் "னு பாட்டு இருக்கில்ல அது உங்களுக்காகவே தான்   டி என்று சாரதா கிண்டலடித்தாள்  பிரேமா "ஏய் காதை அப்பிடிக்கிள்ளி யாரையும் பயமுறுத்தாத னு சொன்னார்களா இல்லையா , பின்ன ஏண்டி உடம்பு சுத்தும் தலை சுத்தும் ஏதோ PREGNANCY மாதிரி பயம் காட்டுறயே -பின்ன ஏன் செமினாருக்கு போலாம் ங்கற என்று குதறிவிட்டாள் பிரேமா.; அட ஒரு தமாஷுக்கு சொல்லக்கூடாதா? என்றாள் சாரதா .ஓ உனக்கு செமினார் சிம்போஸியம் , கன்சார்ஷியம் எல்லாம் தமாஷாத்தெரியுதா ?

என்ன விட்டுத்தள்ளு .அன்னிக்கு மேடம் பேசுவாங்க வந்து கேளு , ஐயோ பைத்தியம் மாதிரி கம்ப்யூட்டர் படிச்சேனே இவ்வளவு நல்ல எக்ஸசைஸ் -பிஸிக்கல் அண்ட் மென்ட்டல் , BESIDES BEING INTELLECTUAL IN PURSUIT அண்ட் இன்டெலிஜெண்ட் IN APPLICATION/ / INTRPRETATION  னு புரிஞ்சு வாயிலும் வயித்திலியும் அடிச்சுப்ப ,

சும்மா இந்த ட க ல் பாச்சா வேலை எல்லாம் இங்க வேணாம். நான் சீரியஸ் ஆ சொல்றேன் மேடம் ஸ்பீச் கேளு , நம்ப எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்க ரேஞ்சுக்கு போகவே முடியாது ; அதனாலே கண்டிப்பா வியாழன் மாலை 3.00 மணிக்கு வாங்க அங்க மீட் பண்ணுவோம் என்றாள்  பிரேமா  .

தொடரும்    அன்பன்   ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...