Tuesday, May 9, 2023

Rengaa Rengaa- 26

 Rengaa Rengaa- 26

ரெங்கா ரெங்கா -26 

மறுநாள் பகல் 12.05 க்கு குண்டூர் . இறங்கி வெயிட்டிங் ரூம் பக்கம் ஓட ,சுப்பிரமணி காலில் கட்டுடன் விந்தி விந்தி வந்து வாங்க சார் அம்மா பாத்தீங்களா , நல்ல இருக்காங்களா என்று விசாரித்தான். ம்ம் என்று பதில் சொல்லி விட்டு , கால் என்ன என்றான் .சண்டே அன்னிக்கு கால்ல கண்ணாடி குத்தி  ப்ரா ப் ளம்ஆச்சு . இப்பபரவல்லை  இன்னும் 10 நாள் கட்டுபோட்டுக்கிட்டே  இருங்கனு DR சாம்பசிவ ராவ் சொல்லிருக்கார். யார் அவர் என்றன் ரெ .

 ரயில்வே டாக்டர் நல்ல மனுஷன் , 3 நாளும் ஊசி மாத்திரை குடுத்து, இனிமே வலி இருந்தா வரச்சொல்லி இருக்கார்.இப்ப வரை வலி  இல்ல; நீங்ககுளிங்க நான் போய் சாப்பாடு கொண்டு வரேன் .யோ, இந்தக்காலோ சைக்கிள் ஒட்டி   , வேணாம் என்றான் ரெ   சார்,    சைக்கிள் இல்ல ஸ்கூட்டர் உங்க . கே சார் காலைலே குடுத்து பகல்ல  யூஸ் பண்ணு , 7.45 க்கு கொடு னு சொல்லிருக்கார்.

அதுனால சாப்பாடு கொண்டு வரேன் , நானும் அங்கதான் வாங்கி சாப்பிடுவேன் வீட்டுக்கு போகல அம்மாட்ட சொல்லிட்டேன் தேட மா ட்டாங்க என்று ஸ்கூட்டரில் பறந்தான் . ரே குளித்து விட்டு வரும் சமயம் சுட சுட சாப்பாடு வந்தது ,சுப்பிரமணி சொன்னான் ஸ்கூட்டர்ல வந்ததால் இன்னும் ஆறல , என்று 2 தட்டுகளை +தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து வைத்து வாங்க சாப்பிடுவோம் என்று இருவரும் சாப்பிட்டனர். உண்மையி லயே மாமி சாப்பாடு cheap and best என்று ரெ  மகிழ்ந்தான் .

மதியம் 2.30 க்கு க்ளாஸ் . அக்கௌன்ட்ஸ் வித்யாசாகர் அக்கௌ ண்டிங் PROCEDURE விரிவாக அலசினார்.. ரெ , மகிழ்ச்சியாக கற்றுக்கொண்டான் . மாலை பஞ்சாபகேசன் நலம் விசாரித்தார் ன். மாடசாமி எப்படி இருக்கார் , இன்னமும் அதே மீசை தானா இல்ல தாடியும் சேந்துக்கிச்சா என்று நலம் விசாரித்தார். தெரிந்ததை  சொன்னான். சரி கவனமாக படி என்று அறிவுரை கூறினார் . சரி அடுத்த சண்டே அமாவாசை , எங்க குவாட்டர்ஸ் க்கு வா என்றார்  .கே

மாம் அமாவாசைக்கு நீ தர்ப்பணம் பண்றதில்லையா என்றார். ரெ விழித்தான். உங்க அப்பா இல்லனு சொன்னியே. அதான் கேட்டேன் என்றார். அவருக்கு அப்பவே பண்ணிருக்கணும் விட்டுட்டோம் ; என்னப்பா சொல்ற  ஏன் தர்ப்பணம் கூட பண்ண மாட்டியா என்றார். சார் அதைத்தான் சொன்னேன் . அவர் ஓடிப்போயிட்டார் .இருக்காரா இல்லையானே தெரியல நல்ல வேளை  அந்த செலவு இல்ல பொழைச்சேன் என்றான் கஸ்தூரி ரெங்கன் .

அப்பாவப்பத்தி இப்பிடியா பேசறது தப்புப்பா என்றார் கே . என்ன தப்பு  சீ ட்டு விளையாடி ஊர் பூரா கடன் வாங்கி ராத்திரியே ஒரே ஓட்டம் எனக்கு 2 வயசு எங்கம்மா எப்பிடி திண்டாடி இருப்பா சொல்லுங்கோ சார் என்று முறை இட்டான் . இவன் நிலை புரிந்து ஆழ்ந்த இரக்கம் கொண்டார் . சரிப்பா நீ முடிஞ்சா வா இலேன்னா நான் தப்பா எடுத்து க்கல என்றார்.

உங்க வீட்டுக்கு வரேன் சார் .

சாப்பிட்டுட்டு போ என்றார். இல்ல சார் நன் ஒரு மெஸ்ஸி  சாப்பிடறேன் சுப்பிரமணி என்கூட தான் சாப்புடுவார் அவரை எப்பிடி விட்டுட்டு வரது , சும்மா வரேன் என்று விளக்க   கே அசந்து போனார்-எவ்வளவு ஆழமாகப் பேசுகிறான் அதான் சுந்தரம் இவனை செலெக்ட் பண்ணிட்டார் என்று உணர்ந்தார்

இப்படியே அன்றாடம் முன்னேற்றப்பாதையில் பயணிக்கிறான் ரே .

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...