Tuesday, May 9, 2023

SAMIs COME TOGETHER-26

 SAMIs COME TOGETHER-26

சாமிகள் சங்கமம் -26

இப்படி தடாலடி யுத்தத்தில் பிரேமா இறங்குவாள் என்று கனவிலும் நினைக்காத சாராத மனதில் ஒரு புது ,மொழி மின்னலிட்டது . அது "அமைதியான நாய் கடித்தால் ஆழமாக குதறிவிடும்". அப்படி ரணகளம் பண்ணிவிட்டாள் பிரேமா. வேறொன்றுமில்லை செமினார் போன்ற நிகழ்வுகளில் பலரால் மேடை ஏற முடியாது லெக்ச்சரர் தொழில் செய்பவர்கள் உள்பட . அதற்கு ஆழ்ந்த புலமையும் , மொழிஆதிக்கமும் , சொல்லாட்சியும் , அதீத வேகமும் , பல தகவல் முனைகைளை பிசிறில்லாமல் ஒருங்கிணைக்கவும் மாபெரும் ஆளுமை தேவை. இவற்றை புரிந்துகொள்ளாமல் --சாரதா மிகவும் அலட்சியமாக சில மண்டைகள் பேசும் என்று குறிப்பிட்டது இந்த மேடை விற்பன்னர்களை கொச்சைப்படுத்துவதாக உணர்ந்த மறுகணமே அடிபட்ட வேங்கையாக சீறினாள் . உண்மையிலேயே பலரும் ஆசிரியர்களை பைத்தியங்களாக நினைக்கிறார்கள். ஒரு கணம் சிந்தியுங்கள் . ஒரு 10ம் வகுப்பு குழந்தைக்கு [உங்களின் குழந்தை என்பதாகவே இருக்கட்டும்] நம்மில் எத்துணை பேர்களால் ஒரு மொழிப்பாடத்தையோ , கணித வழிமுறைகளையோ , சயின்ஸ் கோட்பாடுகளையோ ஆழமாக போ திக்க இயலுமா? 10 ம் வகுப்புக்கே  இந்த நிலை. +2, B ., A , B .Sc , B.com இவற்றை வீட்டில் கற்பித்துவிடமுடியுமா ?

முடியும் என்று வாதிடலாம். ஆனால் இளம் மனங்களை அடக்கி ஒருங்கிணைக்க ஒரு ஆசிரிய ஆளுமை மிக மிக இன்றியமையாதது . ஆளுமை அற்றவர்கள் பட்டங்களை சுமந்து ஆசிரியப்பணிக்கு வருவதன் விளைவு தான் மாணவர்களின் அலட்சியப்போக்கு, நாட்டமின்மை மற்றும் தவறான நம்பிக்கை தரும் EGO எனும் பொருந்தாத அகம்பாவம். திறமையற்றவர்களின் அகம்பாவம் கொரோனா வை விடக் கொடியது . எனவே அறிவைக்கொச்சை படுத்தும் கூட்டம் இருக்கும் சமுதாயம் மீட்சியில்லா வீழ்ச்சியை நிச்சயம் அடையும் . 

கிடக்கட்டும்   PG வகை பாடத்திட்டங்களை திறம்பட கையாளுதல் மதயானையை  ஒரு எல்லைக்குள் நிறுத்தும் முயற்சி.  எந்த நேரமும் சினம்  கொள்ளும் மனம் மாணவ மனநிலை. , மிக எளிதில் வெடித்துச்சிதறும் ; அவர்கள் மனங்களை சீராக சிந்திக்க வைக்க , கற்பிப்பவன்[ள்] மாபெரும் சிந்தனையாளர் என்ற ஏற்பு செயல் வழியே மாணவர்களின் மனங்களில் [ஆண் / பெண்]  விதைக்கப்பட்ட வேண்டும் . இந்த அடிப்படை தேவைகளை உணராத ஆசிரியப்பணி DISASTROUS எனும் விளைவை மிக எளிதாக அரங்கேற்றிவிடும்.   எனவே தன்  நிலை .   உணராத மக்கள் ஆசிரியர்களை 'மாங்கா   மடையர்களாக ' கருதுவது "தன்னைப்போல் பிறரை நினை "எனும் மனோநிலைக்கு சான்று.     மாங்கா   மடையர் வகை ஆசிரியர்கள் ஏராளம் உண்டு  ஆனால் அவ்வளவு பேரும் இதே ரகம் என்றெண்ணுவது பேதைமை. இந்த உண்மைகளை உணராமல் செமினார் களி ல் அமர்ந்தால்   உடல் அழற்சியும் குழப்பமும் ஏற்படும். . இதை நன்குணர்ந்த பிரேமா , சாரதாவை கூந்தலைப்பிடித்து குலுக்கி உலுக்காமல் விட்டது , பின்னவளுக்கு கிடைத்த ஒரு மன்னிப்பு என்றே  கொள்ளலாம். .

கௌரிக்கு ஒன்று புரிந்தது ; இனிமேல் நான் பெரும் மனங்களோடு உறவாடி , மனம் .மானம் , குணம் , சிந்தனை வலிமை இவற்றை மிகச்சிறப்பாக கட்டமைத்துக்கொள்ள வேண்டும். மேடத்திடம் அறிவு மேம்பாடும்                  அணுகுமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் . பிரேமா மேடத்திடம் கொஞ்சம் தாராளமாகப்பேசி மொழி நுணுக்கங்களை நிச்சயம் கற்பேன் என்று உறுதி கொண்டு "மாரியம்மா வழி விடம்மா "என்று சாலையில் நின்ற இடத்தில் வேண்டுகோள் வைத்தாள்.  

ஆயினும் நட்பின் ஆழம் காரணமாக வன்ம உணர்வு அறவே இல்லாத மனங்களுடன் விடை பெற்றனர் . குறித்த நாளில் இந்திரா காந்தி காலேஜ் முகப்பில் மூவரும் மாலை 2.45 மணி அளவில் சந்தித்தனர் . நோட் பேனா கையில் இருக்கா  என்று கௌரியை கேட்டாள் பிரேமா ?அவற்றை பையில் இருந்து எடுத்துக்காட்டினாள் கௌரி. கண்களை அகல விரித்து வாயை கீழ் நோக்கி வளைத்து தலையை ஒரு பொம்மை போல் ஆட்டினாள் சாரதா [அதாவது பார் ரா இவ லெக்ச்சரர் னு ESTABLISH பண்ணிக்கறா என்பதாக]

 தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...