Tuesday, May 9, 2023

ரெங்கா ரெங்கா -27

 ரெங்கா ரெங்கா -27

                                         ஐயோ ரெங்கா

வகுப்புகள் சீராக நடந்துகொண்டிருக்க திடீரென்று ஒரு பிரசினை வெடித்தது. ஒரு  நாள் காலை 10.10 இரண்டு உயர் அதிகாரிகள் பஞ்சாபகேசன் அலுவலகம் வந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் உரையாடினார் , ஏனெனில் ஒருவர் பெங்கால் , இன்னொருவர் மராட்டியர் . அவர்கள் விவரித்தது : இங்கு நீங்கள் முறைகேடாக தகுதியில்லாத நபர்களுக்கு பயிற்சி கொடுத்து ரயில்வேயில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக ஒரு விண்ணப்பதாரர் புகார் செய்துள்ளார். அவருக்கு அரசியல் தொடர்பு இருக்கும் போல் தெரிகிறது அதனால் தீர விசாரித்து அறிக்கை தரச்சொல்லி எங்களை அனுப்பியுள்ளனர் என்று பூர்வ  பீடிகை போட்டனர். பஞ்சாபகேசன் அசரவே இல்லை . சரி நீங்கள் யார் , உங்கள் ID யைக்காட்டுங்கள் பிறகுதான் நான் பேச முடியும் என்றார். பாவம் இருவரும் உண்மையிலேயே உயர் அதிகாரிகள் தான் . id பார்த்து  சரி செய்துகொண்டபின் பஞ்சாபகேசன் பேசினார். எந்த விசாரணைக்கும் நான் தயார். அவ்வப்போது நான் எழுப்பும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும் then please do not regret ; let me know the allegation என்றார் .கே . உங்க இப்போதைய பாச்சில் ஒரு +2 பையன் இருக்கிறான்ஆனால் B .Com  முடித்த எனக்கு வாய்ப்பு தரவே இல்லை என்று மேலிடம் வரை புகார் அனுப்பியுள்ளார் ஒருவர். உங்கள் விளக்கம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்றனர்

அந்த குற்றச்சாட்டு தவறு . ஒருவர் அல்ல 4 பேர் +2 தகுதிகளுடன் பயிற்சியில் உள்ளனர். மேலும் 1 .M .Com பட்டதாரி ட்ரெய்னிங்கில் இருக்கிறார் .அவரையும் கேஸ் போடச்சொல்லுங்கள் அவருக்கும் பதில் தருகிறேன்.நீங்கள் சொல்லும் அத்துணை பெரும் தேர்வு எழுதி, இன்டர்வ்யூ வில் தேர்வாகி இங்கு பயிற்சி பெறுகின்றனர் . இதில் நான் எப்படி தகுதி குறைவானர்களுக்கு உதவி செயகிறேன் என்று பேசுகின்றனர்? நீங்களும் உயர் அதிகாரிகள் தானே ? யோசித்திருந்தால் உங்களுக்கே புரிந்திருக்குமே இது பொய்யான குற்றச்சாட்டு என்று. சரி குற்றம் சுமத்தியவரை நீங்கள் நேரில் சந்தித்து விளக்கம் பெற்றீர்களா ? அவர் எங்கே இருக்கிறார் ?என்று . கே கேட்டதும் , அவர் வெளியே இருக்கிறார் , உள்ளே கூப்பிடலாமா என்றனர். வேண்டாம் அவரோடு நாம் பேசினா ல் எதோ சமாதானம் செய்யப்பார்க்கிறோம் என்று பலர் நினைப்பார்கள் . இதற்கு மொத்தமாக முடிவு கட்டுவோம் ஒரு அரை மணியில் என்று சொல்லி விட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பினார் வகுப்பை நிறுத்தச்சொல்லி. என்னசார் என்று பயந்துபோய் ஓடி வந்தார் அக்கௌன்ட் ஸ் வித்யாசாகர் . . கே தனது டேபிள் ட்ரா விலிருந்து ஒரு பேப்பர் எடுத்தார் . அதில் ரயில்வே  துறை யின் ஒரு கணக்கு அச்சிடப்பட்டிருந்தது . உடனே 10 ஜெராக்ஸ் காபி எடுத்தார் . கே. உங்கள் புகார் கொடுத்தவரை கூப்பிடுங்கள் என்றார் . கே .

புகாரளித்தவன் தனக்கு இப்போது வேலை தரப்போகிறார்கள் என்று எண்ணியபடி கம்பீரமாக உள்ளே நுழைய , சற்று பொறுங்கள் என்றார் பஞ்சாபகேசன் . உடனே 2, அதிகாரிகள் .கே +புகார்தாரர் அனைவரும் வகுப்பறைக்கு சென்றனர். 4,   +2 , மற்றும் 1 M .Com மாத்திரம் அமருங்கள் என்று சொல்லி விட்டு , ஆசிரியர் இடத்தில் புகார் ஆசாமியை அமர்த்திவிட்டு ஆளுக்கொரு question paper கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு , தேர்வு எழுதும் பேப்பர் double sheet ஆளுக்கு ஒன்று கொடுத்தார் . கே . இப்போது மணி 11.       11.45 மணிக்கு விடைத்தாளை சமர்ப்பிக்கவும் என்று சொல்லி மூவரும் டீ அருந்தினர்.. அடுத்த 17 நிமிடங்களில் விடை எழுதி முடித்தான் .ரெ . எனினும் இரண்டு முறை திருப் பிப்பார் என்று . கே  கண்ணால் தெரிவித்தார் . சுமார் 25 நிமிடங்களில் +2 முடித்தவர்கள் தேர்வை வெற்றி கரமாக நிறைவு செய்தனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் M .Com பட்டதாரியும் விடையை முடித்து  .அனைவரின் பேப்பரும் வாங்கப்பட்டது ,    ஆனால் புகார் தாரர்  இன்னும் திணறிக்கொண்டு அடித்து அடித்து எழுதி இன்னோர் பேப்பர் கேட்டு வாங்கியும் கூட  ஒன்றும் செய்ய இயலவில்லை. இறுதியில் முக்கால் மணி நேரம் கடந்து புகார்தாரர் பேப்பரையும் பிடுங்கி , அனைத்தையும் நீங்களே படித்து பார்த்து மார்க் அளியுங்கள் என்று உயர் அதிகாரிகளிடம் விட்டு விட்டார் . கே.

தொடரும்       அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...