Tuesday, April 4, 2023

RENGAA RENGAA -9

 ரெங்கா ரெங்கா -9

கோயிலில் இருந்து திரும்பும் போது ராமசாமி சொன்னார் "ரெங்கா அந்த ஆர்டர் லெட்டரை 4 காப்பி xerox எடுத்துக்கொள் . நாளை உங்க செக்ஷன் சுப்பிரின்டெண்டெண்ட்டிடம் ஒரு லெட்டரில் 1 காபியை இணைத்து லீவும் பாஸ் அல்லது கன்ஸெஷன் டிக்கட் கேட்டு லெட்டர் கொடு. மாலையோ மறுநாளோ கிடைக்கும். அந்த லெட்டரை வீட்டில் வைக்காதே உன்னிடமே வைத்துக்கொள்.;அப்போது தான் உனக்கு அது பயன் படும்; நேத்து மாடசாமி சொல்லித்தான் ரிசல்ட் பத்திக்கிட்டேன்; இல்லைன்னா கவனக்குறைவால எல்லாம் வீணாப்போயிருக்கும். சென்னைல திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை சேவிச்சுட்டு வரணும் என்றார் ரா சா.

நீங்களும் வாங்கோ சார் எனக்கும் பார்த்தசாரதிப்பெருமாள் சேவிக்கணும் அவருக்கு மீசை எப்படி இருக்குனு பாக்கணும் என்றான் . ரெ . எதுவா இருந்தாலும் மாடசாமி கூட போனா தான் சரியான படி போயிட்டு வரமுடியும் அதுனால அவனை நம்ம கூடவே இருக்கச்சொல்லணும் . ரெண்டாவது எங்க என்ன சாப்பாடு எப்ப கிடைக்கும் னு சரியா தெரிஞ்சு வெச்சிருப்பான். இதெல்லாத்தையும் விட ஆத்மார்த்தமா உதவி செய்வான். அன்னிக்கு டீ பார்ட்டியை கேப்ரியல் தலையில நாசூக்கா மாத்திவிட்டான் பார்த்தியா அதிலெல்லாம் பலே கில்லாடி அவன். அந்தக்காலத்துல football கேப்டன் -கோல் கீப்பர் ரொம்ப ஈஸியா பந்தைப்பிடிப்பான் அவனைத்தாண்டி ஒரு பந்து போகாது. ரொம்ப நாளா அவனுக்கு ஏதாவது செய்யணும் னு மனசுல தோணும் இப்பதான் மருமாளுக்கு சீட் கேட்டு வந்திருக்கான். ஒனக்கு வேலையும் அவளுக்கு சீட்டும் கெடச்சுட்டா வேற எதுவுமே எனக்கு வேண்டாம். இனிமே எனக்கு என்ன வேணும் . உதவின்னு கேட்டவாளுக்கு செய்யற வாய்ப்பை என்ன மாதிரி யாருக்காவது கிடைச்சிருக்கா னு தெரியல . அதுக்கெல்லாம் சேர் த்து தான் திருவல்லிக்கேணி பெருமாளை சேவிக்கணும். இத்தனை வருஷத்துல மாடசாமியே நேத்திக்கு தான் வாடா கிளம்பு, உச்சிப்பிள்ளையார் மாதிரி ஆணி அடிச்சு ஒக்காராத னு அதிகாரமா சொல்லிப்பிட்டான். இனிமேலு ம்  அவன் சொன்னதை செய்யல்லேன்னா அவனுக்கு நான் வெச்சிருக்கிற மரியாதைக்கே அர்த்தமில்லாம போய்டும். அதுனால நானும் வரேன் போவோம். நீ சோர்ந்து உட்காராத தாயாரை கோவிச்சுக்காத ஏதோ தப்பு பண்ணிட்டா , நீயும் வெறுத்தா அவா பாடு கஷ்டம் . தெம்பா இரு ஒனக்கு பிரமாதமான எதிர்காலம் வரும். அப்ப பலருக்கும் உதவி பண்ணு சுய நலமியா யாரும் வாழமுடியாது வாழக்கூடாது . அது ஒண்ணு தெரிஞ்சாலே பாக்கி எல்லாம் கை கூடும். .. சரி நாளைக்கு பார்ப்போம். சொல்லவேண்டியதை நான் மாடசாமிக்கு சொல்லிடறேன். Good night  என்று விடை பெற்றனர்.

மறுநாள் காலை மாடசாமியிடம் சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கி விட்டார் ராமசாமி. அப்படியா அடுத்த சனி ஞாயர் ரெண்டு நாள் அவனுக்கு வேலை இருக்கும் போல தெரியுது. நீ என்ன பண்ற --சனி லீவ் போட்டுடு , எனக்கு வெள்ளி நைட் ராக்போட் டூட்டி எல்லாரும் போவோம் என்றார் மாடசாமி. ஏண்டா சனிக்கிழமை 2 மணிக்கு தானே இன்டர்வ்யூ காலைல பல்லவன்ல போனா?       போறாதா என்றார் ராமசாமி.

நீ சரியான உச்சிப்பிள்ளையார் ரா எங்கயுமோ போக மாட்டான் -ஒரு ஐடியா சொன்னா ஏன் எதுக்கு னு கேளு -உச்சி உன்னைத்தான் சொல்றே ன்   என்றார் மாடசாமி. ஏண்டா திட்டற சொல்லுடா கேட்டுக்கறேன் என்றார் ராமசாமி.

இத பாரு, வெள்ளிக்கிழமை நைட்ட்ரெயின்  டூட்டி அதுவா வந்தது.. திரும்பி வர்றதை சன்டே நைட் ரா க்போட் க்கு மாத்திக்கிரேன். ஒரு சேன்ஜ் ஸீ , 2-3 மாத்த முடியாது. மேலும் இன்டர்வ்யூக்கு முன்னால பெருமாளை சேவிக்கறது க்கு நல்ல சான்ஸ்  அமைஞ்சிருக்குடா . திருவல்லிக்கேணில ராதா மாமி மெஸ்ல  பொங்கலும் வடையும் சாப்பிட ஒரு க்யூவே நிக்குண்டான்னா , நீ காலம்பற போலாம் னு உச்சிப்பிள்ளையார் மாதிரி நகராம இருக்க வழி தேடாத சொன்னபேச்சு கேளு என்று மிரட்டினார் மாடசாமி. அவரவர் செக்ஷனில் சனிக்கிழமை லீவ் , மற்றும் ரெ வுக்கு கன்செஷன் டிக்கட் விண்ணப்பம் கொடுத்தனர்.

மாடசாமி செக்ஷன் அதிகாரியிடம்  சார் சாட்டர் டே ரி ட்டர்ன் டூட்டி வேணாம் சார் வர மன்டே லிருந்து வரிசையா டூட்டி பாத்துட்டு சாட்டர்டே சன்டே ப்ரேக் எடுத்து சன்டே நைட் ரிட்டர்ன் டூட்டி   ராக்போட் ல்  போட்டுறுங்க சார்  என்றார். மா சா.

அதிகாரி சொன்னார்எல்லாம் சரி ஆனா 2 நாள் பிரேக் விட்டப்புறம் சென்னைலேந்து போட டூட்டி அவங்க [சென்னைஆபீஸ் ]தான்  போட முடியும்.. நான் ஒண்ணு செய்யறேன் week long ஒர்க்  no break till சாட்டர்டே 6.00 am னு லெட்டர் தரேன் அங்க டூட்டி ஆபீசார்ட்ட சொல்லி சன்டே நைட்,  ராக்போட் போட்டு வாங்கிக்குங்க” என்று காலண்டர் பார்த்து தேதிகளைக்குறித்து தெளிவான லெட்டர் கொடுத்துவிட்டார்.

மாடசாமி வேலை யில்  நிபுணன் என்பதால் அனைவரும் ஒத்துழைப்பார்கள். . ஆபீஸ் லெட்டரை மாடசாமி பத்திரப்படுத்தி விட்டு ராமசாமிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து வெள்ளிக்கிழமை நைட் எல்லாரும் கிளம்பறோம் , நீ சாக்கு போக்கு சொல்லாம வந்து சேர் -அதுவும் ஜுங்க்ஷனிலேருந்து கிளம்பறோம். no excuses என்றார் மா  சா                                                              தொடரும் அன்பன்  ராமன்

1 comment:

  1. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் மீசையை பார்த்துட்டு ராதாமாமி மெஸ்ல பொங்கல் வடைசாப்பிட்டுவிட்டு ஆகவேண்டிய காரியத்தைப்பார்ப்போம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...