Wednesday, May 31, 2023

RENGAA RENGAA- 41

 RENGAA RENGAA- 41

ரெங்கா ரெங்கா -41

சுப்ரமணியின் இயக்கத்தில் இயங்குகிறான் ரெ . ஆம் 5.40க்கே அனுமார் சேவித்தாயிற்று . சிறிது நேரம் குளக்கரையில் அமர்ந்து காற்றாட நினைத்தனர். தெற்கே வானில் மேகக்கூட்டம், ஒயிலாக தலைவரிக்கொள்ளும் ராமசாமியின் முகம் போல் தோன்றியது ரெ வுக்கு.

ராமசாமி வெகுதூரம் விலகிப்போய்விட்டார் போல் ஒரு உருவ விளக்கம் இது என்று மனதில் பட்டது. தனக்குத்தானே பேசிக்கொண்டான் ரெ . என்னசார் மேலிருந்து கண்காணிக்கறீங்களா என்றான். . மேகம் லேசாக கலைந்து , உங்களால் என் உருவம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று பதில் சொல்வதாக உணர்ந்தான். மேலும் என்னைக்காப்பாற்றிக்கொள்ளவே வழியின்றி தடுமாறுகிறேன் , உன்னை கண் காணிப்பதா என்று சொல்லிக்கொண்டே மேகம் உருவம் கலைந்து சிதறியது . ரெ மனதில் குழப்பம் -இதென்ன உணர்த்த வந்த மேகமா , இல்லை தற்செயல் நிகழ்வா -தலை வெடித்துவிடும் போல் இருந்தது. மீண்டும் அனுமார் சேவிக்க சற்று அமைதி வந்தது. ஆனால் தன் மீதே வெறுப்பு வந்தது கஸ்தூரிரெங்கனுக்கு.

ஐயோ ஊருக்குப்போக இன்னும் டிக்கெட் வாங்கலியே என்று பதற்றம் . டிக்கெட் கவுண்டர் 8 மணி வரை இருக்கும் இல்ல என்றான்  சுப்பிரமணிஇடம். . .இருக்கும் சார் ஊருக்கு தானே , நீங்க சார் கிட்ட பணம் கொடுத்து கொஞ்சம் ஏற்பாடு பண்ணித்தாங்கனு  கேளுங்க . கோவிச்சுக்க மாட்டார் ஈசியா முடிஞ்சுடும் . நம்ப போனா பிகு பண்ணுவானுங்க டிக்கெட் இல்லைம்பானுங்க ,ac இல் இடம் full அப்பிடி இப்பிடி னு அலைய விடுவானுக.

சார் பியூன் போய் வாங்கிக்கொடுக்க வெச்சுருவார். நீங்க தைரியமா கேளுங்க இல்லைனா எப்பவுமே கூட்டமா இருக்கு னு    சொlல்லிக்கேளுங்க கண்டிப்பா செய்வார் . கே வை அங்குலம் அங்குலமா அளந்து வெச்சிருக்கார் இந்த சுப்பிரமணி என்று மலைத்தான் ரெ

சுப்பிரமணி சொன்னபடி கே வை சந்தித்து , சார் ஒரு உதவி என்றான் ரெ . என்னப்பா? என்றார் . கே சார் ஊருக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போனா ரொம்ப கூட்டமா இருக்கு க்யூ வில நின் னா க்ளாஸ் மிஸ் ஆகும்போல இருக்கு என்று இழுத்தான். சரி போன தரம் போன ட்ரெயின் சரியா இருந்ததா ? அதே மாதிரி பண்ணிடலாமா என்று --ஆங் இந்த மாசம் உங்களுக்கு ஒரு 4 நாள் லீவ் கொடுக்கவேண்டி வருது. அதாவது டெல்லியில ஒரு 2 நாள் கான்பரன்ஸ் வருது ,எல்லா ஸ்டாப் ம் போயிடுவோம் .அதுனால சம்பளம் கொடுத்துட்டு அடுத்தநாள் முதல் 4 நாள் லீவ். சம்பள அன்னிக்கு நைட் திருச்சி ட்ரெயின் , அங்கிருந்து 4 வது நாள் மாலை ரிட்டர்ன் -டிக்கெட் வாங்கிடலாமா ? என்றார் சரி சார் என்றான் ரெ . நான் வாங்கிடவா இல்ல நீ பணம் தரயா என்றார் கே. இதோ தரேன் சார் என்று 2000/- ரூபாய் தந்தான் ரெ . நீ க்ளாஸ் க்கு போ நைட் க்குள்ள டிக்கெட் வந்துரும் என்றார் . கே . நீ ஊருக்கு போற  நாள் மாலை என்ன பாத்துட்டு போ . மாடசாமி க்கு ஒரு பாக்கெட் தரேன் பத்திரமா கொண்டு போ , திரும்பி வரும்போது அவர் ஏதாவது பேப்பர் கொடுத்தா கவனமா கொண்டு வா , மூச்சு விடாத போய்வா  முக்கியமான விஷயம் என்று எச்சரித்தார்  சரி சார் என்று பவ்யமாக நின்றான்        . ரெ உன்கிட்ட மாடசாமி போன் நம்பர் இருக்கா என்று கேட்டு வாங்கி நம்பர் அருகில் IHCURIT IMASADAM என்று தலைகீழாக டைரியில் குறித்துக்கொண்டார். இந்த மாதிரி நுணுக்கங்களில் பஞ்சாபகேசன் ஒரு பீஷ்மர். சட்டென்று எந்த நபர்பெயர்  அல்லது நம்பர் அவரிடமிருந்து அபகரிக்க முடியாது . ரெ வுக்கு தலையோ வாலோ  புரியவில்லை நமக்கேன் வம்பு அவர் சொன்னதை செய்வோம் என்று வகுப்புக்கு போனான் . .

மாசா வுக்கு போன் போட்டு கே பேச , மாசா ஆடிப்போனார் -என்னவோ ஏதோ என்று.. நான் ஒரு பாக்கெட் அனுப்பறேன் அவனிடம் [ ரெ விடம் ] இருந்து ஸ்டேஷனிலேயே வாங்கிக்கொண்டு , எனக்கு வேண்டிய தகவல்களை உங்கள் பைலில் இருந்து தொகுத்துத்தந்தால் உங்கள் தரப்பு நியாயத்தை வெற்றிபெறச்செய்து விடலாம் . என்னால் ஆனதை கண்டிப்பாக செய்கிறேன்    -குட் லக் என்றார் கே. மிக்க நன்றி சார் என்று அன்புடன் வணக்கம் சொன்னார் மாடசாமி.

சொன்னபடி டிக்கெட் வாங்கித்தந்தார் . கே .                                  சார் பாக்கெட் ஏதோ தரேன்னீங்களே என்றான் ரெ . கே பயங்கர பீஷ்மர் . அவரிடம் பாக்கெட் இப்போதே தயார். ஆனால் இவன் பொது  இடத்தில் தங்குகிறான். அதுவோ ஒரு பூகம்ப பேப்பர் . ஏதாவது கசிந்தது என்றால் ,மா சா , கே உள்ளிட்ட அனைவருக்கும் பயங்கர இடைஞ்சல் ஏற்படும் ;அதனால் , நீ ஊருக்கு போகும் முன் ட்ரைனில் உன்கையில் நானே தருகிறேன் மூச்சு விடாதே. அதே போல் நீ வீட்டிற்கு போகு முன் மாடசாமியை ஸ்டேஷனில் வரச்சொல்லி , கொடுத்துவிட்டு தான் வீட்டிற்கு போக வேண்டும் .இதில் எந்த தளர்வும் வரக்கூடாது கவனம் என்றார் . கரெக்ட்டா நீங்க சொன்னபடி கொடுத்து விட்டு அப்புறம் வீட்டிற்கு போகிறேன் என்று அவருக்கு உறுதியளித்தான்  ரெ

சம்பளம் வாங்கியதும் முதலில் ரூம் வாடகை , மாமி மெஸ் கணக்கு முடித்துவிட்டு பாங்கில் கணிசமான தொகையை கணக்கில் சேர்த்து விட்டு ஒரு 6000/-ரூபாய் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ரெ . ரெ வின் புதிய பெட்டியை சுப்பிரமணி சுமந்து வந்து நிற்க ரயில் மெல்ல நின்றது குண்டூரில் . உரிய பெட்டியில் ஏறியதும் இந்தா கவர் என்று ஜன்னல் வழியே தந்தார் .கே . பெட்டிக்குள் வை என்றார் அவ்வாறே உள்ளே வைத்துக்கொண்டான் ரெ . கவனம் என மீண்டும் எச்சரித்தார் கே . ரெ தலை ஆட்டினான் , அதே சமயம் சுப்பிரமணி கை அசைத்து விடை கொடுத்தார் கஸ்தூரி ரெங்கனுக்கு..        காலை 7.30க்கு திருச்சி ஜங்க்ஷனில் ரெடியாக மாடசாமி நின்றிருந்தார் . கே வின் பாக்கெட் நினைவுக்கு வர அதை கவனமாக மா சாவிடம் தந்தான் ரெ . அவர் கை குலுக்கி பின்னர் பார்ப்போம் என்று விடை பெற்றார்.

வெளியே வந்த ரெ இந்த சீரங்கே சீரங்கே என்று கூவும் பஸ்சில் போகக்கூட்ட்து என்று காத்திருக்க 5 நிமிட இடைவெளிக்குப்பின்  அரசாங்க பஸ் வந்தது அதில் பயணித்தான் .சரியாக 40 நிமிடங்களில் வந்திறங்கி வீட்டுக்கு  சென்றான் கஸ்தூரி ரெங்கன்.

தொடரும் அன்பன் ராமன்

SAMIs COME TOGETHER-41

 SAMIs COME TOGETHER-41

சாமிகள் சங்கமம் – 41

ராமசாமிக்கோ ஏன் வித்யா தான் CHIEF GUEST என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்தார் சுபத்திரா ?  நமக்கு வித்யா நன்கு அறிந்தவர் தானே -இதில் என்ன. மூடு  மந்திரம் -இன்றிரவு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான். என்று நினைத்தார். ஆனாலும் அவர் [சுபத்திரா ]மாபெரும் ஆளுமை உள்ளவர். நிகழ்ச்சியில் எதுவும் நேரம் பிசகாமல் துவங்கியதே [7.00 மணி அளவில் என்று போட்டு விட்டு 9.30க்குப்பின் துவங்குவார்கள் ]ஆனால் இந்த நிகழ்ச்சியில் நேரம் வீணாகாமல் நடத்தினரே -நல்ல கட்டுப்பாடு , கம்பீரம் , அனாசய  மேடைப்பேச்சு இதெல்லாம் உயர் கல்வியை சரியாக பயன் படுத்தினால் வந்து விடும் போலிருக்கிறது. ஏதோ விட்ட குறை தொட்ட குறை  இருக்கும் போலிருக்கு அதுதான் எனக்கு அழைப்பு -VIP பாஸில். .   

ரா சா போனில் பேச ,இரவு சுபத்திரா ஒரே நொடியில் விளக்கினார் "சார் மூடு மந்திரம் எதுவும் இல்லை ;அப்பிடி நினைத்திருந்தால் மெனக்கெட்டு VIP PASS அனுப்பி இருப்பேனா . நீங்களே பாத்திருப்பீங்களே துப்பாக்கி காவலுடன் தானே வந்தாங்க , ஒரு பேப்பர், டிவி  எதுலயும் வரலியே -அவ்வளவு TIGHT SECURITY சார் .

“தெரியாம  ஏதோ பேசிட்டேன் மன்னிச்சுக்கோம்மா” என்று ராசா  ஜகா வாங்கினார்.

சுபத்திரா

வித்யா பேச்சுலயும் சக்க போடு போடுறாங்க .இங்கிலீஷ் சும்மா பாயுது . அதெல்லாம் இருக்கட்டும் எல்லா ஸ்காலர்ஷிப் பும் சுத்தமான கம்பீர மெரிட்டுக்கு தான் கொடுத்திருக்கு என்று ஊழல்,, சிபாரிசுக்கு இடமே இல்லை னு போட்டு உடைச்சுட்டு கௌரியையும் பாராட்டினங்களே.

எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு பேசும் கூட்டத்துக்கு மூக்குக்குள்ளயே மிளகாப்பொடியை வெச்சு அடைச்சாங்களே அது நம்ம நேர்மைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், அவங்க சொல்லாமலே போயிருந்தா இவங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டிருப்பா ங்க , இனிமே வாய் இல்ல எதையும் திறக்க முடியாம செஞ்சுட்டாங்க . VC ரொம்ப சந்தோஷப்பட்டார் . மாரியம்மா உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் என்று மானசீகமாக வணங்கினாள் . ஒரே நிகழ்வு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது ? இறைவா ...

கௌரி

மேடம் கறார் ஆனாலும் அழகா பிளான் பண்ணி, குறித்த நேரத்தில் event management துல்யமா செய்யறாங்க. முதல் நாள் லியே மேடை ஏற  வெச்சு பலருக்கும் தெரிஞ்ச முகமா ஆக்கிட்டாங்க .அந்த VIP மேடம் என் பேரை முழுசா சொல்லி பாராட்டும் தெரிவிச்சு KEEP IT UP  னு வாழ்த்தினாங்க ;மாமா ரொம்ப மகிழ்ந்திருப்பார் என்று தானே அசைபோட்டு மாரியம்மன் உள்பட அனைவருக்கும் மானசீகமாக நன்றி  தெரிவித்தாள் மாலையில் வீடு திரும்பிய மாமா யூனிவர்சிட்டி தரம் மற்றும் பேராசிரியர்களின் கண்ணியமான கம்பீரம் , மேடம் அவர்களின் ஆளுமை என அனைத்தையும் சிலாகித்து கௌரியின் கைகளை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டு அம்மா நீ ரொம்ப பெரிய உயரத்துக்கு வளருவ , உங்க மேடம் எவ்வளவு நேர்த்தியா செயல் படறாங்க .அதையெல்லாம் நல்லா கத்துக்கோ , மாரியம்மா மத்ததைப்பாத்துக்குவா என்று வாழ்த்த மா மா என்று மாடசாமியின் உள்ளங்கையில் முகம் புதைத்து அன்பை அழுகையாக வெளிப்படுத்தினாள் . மா மா தட்டிக்கொடுத்து நீ வளர்ந்தா எங்களுக்கு தான்பெருமை அதுனால சந்தோஷமா எல்லாம் கத்துக்கோ. என்று  அனைத்து சம்பவங்களையும் வீட்டில் உள்ள வர்களுக்கு சுவை குன்றாமல் விளக்கினார் . நியாய மான மகிழ்ச்சியில் அனைவரும் திளைத்தனர்

தொடரும் அன்பன் ராமன்

Rengaa Rengaa 40

 Rengaa Rengaa 40

ரெங்கா ரெங்கா -40

நெருங்கிய நண்பர் பேசவே விரும்பாமல் மேலோட்டமாக பேசி முடிக்கிறார் , அம்மாதான் வேண்டாத வார்த்தைகளை ப்பேசி அவரை ஒதுங்கும்படி செய்து விட்டார். இதைக்கேட்டதும், சுப்பிரமணி "சார் உங்க அம்மாவுக்கு , உங்க நண்பர்களை பிடிக்கவில்லை ; அதாவது உங்களை வெளியூருக்கு அனுப்பிவிட்டனர் ; எனவே அவர்களை உதாசீனம் அல்லது அவமானப்படுத்தி பார்க்கிறார் . இதை நீங்கள் புரிந்து கொண்டு, செலவுக்கு பணம் தருவதை குறைத்து விடுங்கள். அப்போது கையைக்கடிக்கும்,

மேலும் பணம் கேட்பார். கொடுத்த பணத்தை 10 நாளில் காலி செய்து விட்டு , இங்க 500/-ம் 1000ம் கொட்டிக்கிடக்கலைனு சொன்னீங்களாமே ,பணம் எங்கே போயிற்று , இந்தமாதிரி ஊதாரிச்செலவுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை னு ஒரே போடாப்போடுங்க சார் . கணக்குல போட்டிருந்தா பணம் பாங்கிலாவது இருக்கும் இப்ப அதுவும் போச்சு , வெளிஊரில் வேலை பார்த்து பணம் கொடுத்தா கணக்கு வழக்கு எதுவுமில்லை. பேங்க் அக்கவுண்ட் வெக்கலைனா 10/ பைசா தேறாது னு ஓங்கி அடியுங்க. இதைத்தவிர எதுவும் வேலை செய்யும்னு தோணல்ல.

உங்க அம்மாவால நண்பர்களும் ஒதுங்கி தான் போவாங்க, அம்மா வை ஒழுங்கு பண்ணாம நீங்க நண்பர்களை மீட்க முடியாது சார் ஏன்னா அவங்களுக்கு உங்க தயவு தேவை இல்ல -ஆனா உங்களுக்கு ? என்று மிக எளிதாக ஒரு வழி சொல்லியிருக்கிறார்  சுப்பிரமணி. பார்ப்போம்

சரி இப்போதைக்கு ராமசாமி சார் கோபம் தணியாது . அடுத்த வாரம் சம்பளம் வாங்கி ஊருக்கு போய் மொதல்ல அம்மாவை யாரையும் புண்படுத்தாம பேசு னு சொல்லணும் . சரி கோவிலுக்கு போலாம் பெருமாள் சேவிக்கலாம் , கேப்ரியல் சாரக்கூட பாக்க;லாம். ஆனா ராமசாமி சாரும் மாடசாமி சாரும் சரியா பேசலைனா ரொம்ப வேதனையா இருக்குமே என்று யோசனையில் ஆழ்ந்தான். சுப்பிரமணி கணித்துவிட்டான்

என்ன சார் நண்பர்களை எப்படி சமாதானப்படுத்தறது னு தானே யோசிக்கறீங்க. ஒரே வழிதான் அவங்களை மன்னிப்புகேக்கும் விதமா காலில் விழுந்து மன்னிச்சா தான் எழுந்திருப்பேன் னு சொல்லுங்க. பிளாட்பாரமா இருந்தாலும் தயங்காம   கால் விழுங்க  

என்ன இருந்தாலும் உங்க முன்னேற்றத்துல அக்கறை உள்ளவங்க இப்பிடியெல்லாம் வஞ்சம் தீக்கணும் னு நெனைக்க மாட்டாங்க. நெகிழ்ந்துருவாங்க ஆனா கொஞ்சம் விலகியே தான் இருப்பாங்க ;

ஏன்னா பையன் நல்லா சம்பாதிக்கறான் ரொம்ப பழைய நிலையில இல்ல அதுனால தள்ளி இருப்பது நல்லது னு தான் எண்ணம் ஓடும் .எல்லாம் உங்க அம்மாவின் கைங்கரியம் தான் , அதுனால நீங்க சிலுவை சுமந்து தான் ஆகணும் . ரெ க்கு புரியவில்லை.

அதைப்புரிந்துகொண்ட சுப்பிரமணி , கர்மவினையை சுமந்து தான் ஆகணும்; பெரியவங்க கடன், பொய் , பித்தலாட்டம், அவங்க மேல விழுந்த சாபம் எல்லாம் பிள்ளைங்கள பாதிக்கும் னு கேட்டதில்லையா அது தான் சிலுவ சுமக்கிறது னு வெச்சுக்குங்க 

இவன் என்ன படிக்காதவனா பரந்தாமனின் அவதாரமா  எந்த குழப்பத்திற்கும் தீர்வு சொல்றானே அப்பா இவன் படிச்சிருந்தான்னா எல்லாரையும் ஊதித்தள்ளிடுவான் போலிருக்கிறதே என்று வியந்தான் ரெ இப்போது தான் டவுனுக்கு போய் வருவது நல்ல மாறுதல் என்று உணர்ந்து சுப்ரமணியிடம் மாலையில் பை வாங்க போவோமா என்றான் .

அவன் வேண்டாம் என்றான். சார் மனம் அமைதியா இல்லைனா எந்த பொருளையும் வாங்காதீங்க -அது சரியா அமையாது. அதுக்கு பதிலா ஆஞ்சநேயரை கும்பிட்டு அமைதியை தேடுங்க எல்லாம் சரியாகும் என்று ஆறுதல் சொன்னான். எங்கிருந்தோ வந்தான் என்ற பாடலின் உயிர் வடிவம் சுப்பிரமணி -மிகை இல்லை.              தொடரும் அன்பன் ராமன் 

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...