Rengaa Rengaa 40
ரெங்கா ரெங்கா -40
நெருங்கிய நண்பர் பேசவே விரும்பாமல் மேலோட்டமாக பேசி முடிக்கிறார் , அம்மாதான் வேண்டாத வார்த்தைகளை ப்பேசி அவரை ஒதுங்கும்படி செய்து விட்டார். இதைக்கேட்டதும், சுப்பிரமணி "சார் உங்க அம்மாவுக்கு , உங்க நண்பர்களை பிடிக்கவில்லை ; அதாவது உங்களை வெளியூருக்கு அனுப்பிவிட்டனர் ; எனவே அவர்களை உதாசீனம் அல்லது அவமானப்படுத்தி பார்க்கிறார் . இதை நீங்கள் புரிந்து கொண்டு, செலவுக்கு பணம் தருவதை குறைத்து விடுங்கள். அப்போது கையைக்கடிக்கும்,
மேலும் பணம் கேட்பார். கொடுத்த பணத்தை 10 நாளில் காலி செய்து விட்டு , இங்க 500/-ம் 1000ம் கொட்டிக்கிடக்கலைனு சொன்னீங்களாமே ,பணம் எங்கே போயிற்று , இந்தமாதிரி ஊதாரிச்செலவுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை னு ஒரே போடாப்போடுங்க சார் . கணக்குல போட்டிருந்தா பணம் பாங்கிலாவது இருக்கும் இப்ப அதுவும் போச்சு , வெளிஊரில் வேலை பார்த்து பணம் கொடுத்தா கணக்கு வழக்கு எதுவுமில்லை. பேங்க் அக்கவுண்ட் வெக்கலைனா 10/ பைசா தேறாது னு ஓங்கி அடியுங்க. இதைத்தவிர எதுவும் வேலை செய்யும்னு தோணல்ல.
உங்க
அம்மாவால நண்பர்களும் ஒதுங்கி தான் போவாங்க,
அம்மா வை ஒழுங்கு பண்ணாம
நீங்க நண்பர்களை மீட்க முடியாது சார்
ஏன்னா அவங்களுக்கு உங்க தயவு தேவை
இல்ல -ஆனா உங்களுக்கு ? என்று
மிக எளிதாக ஒரு வழி
சொல்லியிருக்கிறார் சுப்பிரமணி.
பார்ப்போம்
சரி இப்போதைக்கு ராமசாமி சார் கோபம் தணியாது . அடுத்த வாரம் சம்பளம் வாங்கி ஊருக்கு போய் மொதல்ல அம்மாவை யாரையும் புண்படுத்தாம பேசு னு சொல்லணும் . சரி கோவிலுக்கு போலாம் பெருமாள் சேவிக்கலாம் , கேப்ரியல் சாரக்கூட பாக்க;லாம். ஆனா ராமசாமி சாரும் மாடசாமி சாரும் சரியா பேசலைனா ரொம்ப வேதனையா இருக்குமே என்று யோசனையில் ஆழ்ந்தான். சுப்பிரமணி கணித்துவிட்டான்
என்ன சார் நண்பர்களை எப்படி சமாதானப்படுத்தறது னு தானே யோசிக்கறீங்க. ஒரே வழிதான் அவங்களை மன்னிப்புகேக்கும் விதமா காலில் விழுந்து மன்னிச்சா தான் எழுந்திருப்பேன் னு சொல்லுங்க. பிளாட்பாரமா இருந்தாலும் தயங்காம கால் ல விழுங்க
என்ன இருந்தாலும் உங்க முன்னேற்றத்துல அக்கறை உள்ளவங்க இப்பிடியெல்லாம் வஞ்சம் தீக்கணும் னு நெனைக்க மாட்டாங்க. நெகிழ்ந்துருவாங்க ஆனா கொஞ்சம் விலகியே தான் இருப்பாங்க ;
ஏன்னா பையன் நல்லா சம்பாதிக்கறான் ரொம்ப பழைய நிலையில இல்ல அதுனால தள்ளி இருப்பது நல்லது னு தான் எண்ணம் ஓடும் .எல்லாம் உங்க அம்மாவின் கைங்கரியம் தான் , அதுனால நீங்க சிலுவை சுமந்து தான் ஆகணும் . க ரெ க்கு புரியவில்லை.
அதைப்புரிந்துகொண்ட சுப்பிரமணி , கர்மவினையை சுமந்து தான் ஆகணும்; பெரியவங்க கடன், பொய் , பித்தலாட்டம், அவங்க மேல விழுந்த சாபம் எல்லாம் பிள்ளைங்கள பாதிக்கும் னு கேட்டதில்லையா அது தான் சிலுவ சுமக்கிறது னு வெச்சுக்குங்க
இவன் என்ன படிக்காதவனா பரந்தாமனின் அவதாரமா எந்த குழப்பத்திற்கும் தீர்வு சொல்றானே அப்பா இவன் படிச்சிருந்தான்னா எல்லாரையும் ஊதித்தள்ளிடுவான் போலிருக்கிறதே என்று வியந்தான் க ரெ இப்போது தான் டவுனுக்கு போய் வருவது நல்ல மாறுதல் என்று உணர்ந்து சுப்ரமணியிடம் மாலையில் பை வாங்க போவோமா என்றான் .
அவன் வேண்டாம் என்றான். சார் மனம் அமைதியா இல்லைனா எந்த பொருளையும் வாங்காதீங்க -அது சரியா அமையாது. அதுக்கு பதிலா ஆஞ்சநேயரை கும்பிட்டு அமைதியை தேடுங்க எல்லாம் சரியாகும் என்று ஆறுதல் சொன்னான். எங்கிருந்தோ வந்தான் என்ற பாடலின் உயிர் வடிவம் சுப்பிரமணி -மிகை இல்லை. தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment