SAMIs COME TOGETHER-41
சாமிகள் சங்கமம் – 41
ராமசாமிக்கோ ஏன் வித்யா தான் CHIEF GUEST என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்தார் சுபத்திரா ? நமக்கு வித்யா நன்கு அறிந்தவர் தானே -இதில் என்ன. மூடு மந்திரம் -இன்றிரவு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான். என்று நினைத்தார். ஆனாலும் அவர் [சுபத்திரா ]மாபெரும் ஆளுமை உள்ளவர். நிகழ்ச்சியில் எதுவும் நேரம் பிசகாமல் துவங்கியதே [7.00 மணி அளவில் என்று போட்டு விட்டு 9.30க்குப்பின் துவங்குவார்கள் ]ஆனால் இந்த நிகழ்ச்சியில் நேரம் வீணாகாமல் நடத்தினரே -நல்ல கட்டுப்பாடு , கம்பீரம் , அனாசய மேடைப்பேச்சு இதெல்லாம் உயர் கல்வியை சரியாக பயன் படுத்தினால் வந்து விடும் போலிருக்கிறது. ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கும் போலிருக்கு அதுதான் எனக்கு அழைப்பு -VIP பாஸில். .
ரா சா போனில் பேச ,இரவு சுபத்திரா ஒரே நொடியில் விளக்கினார் "சார் மூடு மந்திரம் எதுவும் இல்லை ;அப்பிடி நினைத்திருந்தால் மெனக்கெட்டு VIP PASS அனுப்பி இருப்பேனா . நீங்களே பாத்திருப்பீங்களே துப்பாக்கி காவலுடன் தானே வந்தாங்க , ஒரு பேப்பர், டிவி எதுலயும் வரலியே -அவ்வளவு TIGHT SECURITY சார் .
“தெரியாம ஏதோ பேசிட்டேன் மன்னிச்சுக்கோம்மா” என்று ராசா ஜகா வாங்கினார்.
சுபத்திரா
வித்யா பேச்சுலயும் சக்க போடு போடுறாங்க .இங்கிலீஷ் சும்மா பாயுது . அதெல்லாம் இருக்கட்டும் எல்லா ஸ்காலர்ஷிப் பும் சுத்தமான கம்பீர மெரிட்டுக்கு தான் கொடுத்திருக்கு என்று ஊழல்,, சிபாரிசுக்கு இடமே இல்லை னு போட்டு உடைச்சுட்டு கௌரியையும் பாராட்டினங்களே.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு பேசும் கூட்டத்துக்கு மூக்குக்குள்ளயே மிளகாப்பொடியை வெச்சு அடைச்சாங்களே அது நம்ம நேர்மைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், அவங்க சொல்லாமலே போயிருந்தா இவங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டிருப்பா ங்க , இனிமே வாய் இல்ல எதையும் திறக்க முடியாம செஞ்சுட்டாங்க . VC ரொம்ப சந்தோஷப்பட்டார் . மாரியம்மா உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் என்று மானசீகமாக வணங்கினாள் . ஒரே நிகழ்வு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது ? இறைவா ...
கௌரி
மேடம் கறார் ஆனாலும் அழகா பிளான் பண்ணி, குறித்த நேரத்தில் event management துல்யமா செய்யறாங்க. முதல் நாள் லியே மேடை ஏற வெச்சு பலருக்கும் தெரிஞ்ச முகமா ஆக்கிட்டாங்க .அந்த VIP மேடம் என் பேரை முழுசா சொல்லி பாராட்டும் தெரிவிச்சு KEEP IT UP னு வாழ்த்தினாங்க ;மாமா ரொம்ப மகிழ்ந்திருப்பார் என்று தானே அசைபோட்டு மாரியம்மன் உள்பட அனைவருக்கும் மானசீகமாக நன்றி தெரிவித்தாள் மாலையில் வீடு திரும்பிய மாமா யூனிவர்சிட்டி தரம் மற்றும் பேராசிரியர்களின் கண்ணியமான கம்பீரம் , மேடம் அவர்களின் ஆளுமை என அனைத்தையும் சிலாகித்து கௌரியின் கைகளை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டு அம்மா நீ ரொம்ப பெரிய உயரத்துக்கு வளருவ , உங்க மேடம் எவ்வளவு நேர்த்தியா செயல் படறாங்க .அதையெல்லாம் நல்லா கத்துக்கோ , மாரியம்மா மத்ததைப்பாத்துக்குவா என்று வாழ்த்த மா மா என்று மாடசாமியின் உள்ளங்கையில் முகம் புதைத்து அன்பை அழுகையாக வெளிப்படுத்தினாள் . மா மா தட்டிக்கொடுத்து நீ வளர்ந்தா எங்களுக்கு தான்பெருமை அதுனால சந்தோஷமா எல்லாம் கத்துக்கோ. என்று அனைத்து சம்பவங்களையும் வீட்டில் உள்ள வர்களுக்கு சுவை குன்றாமல் விளக்கினார் . நியாய மான மகிழ்ச்சியில் அனைவரும் திளைத்தனர்
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment