SAMIs COME TOGETHER-40
சாமிகள் சங்கமம் – 40
VIP ஐ தேனீர் உபசரிப்புக்குப்பின் , மிகுந்த பாதுகாப்புடன் சுபத்திரா , அவர் தங்கியிருந்த அறை வரை சென்று நன்றி தெரிவித்து மிகுந்த நெகிழ்ச்சியை வெளிப்படுத்த ---வித்யா சொன்னார். "பாதுகாப்பு காரணம் கருதி பொது விழாக்களுக்கு போக முறையான அனுமதி பெற வேண்டும். அதனால் தான் எந்த அறிவிப்பும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். பின்னர் என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து G 20 க்கு உதவியவர்கள் என்றால் அவர்களுக்கு நாம் ஆதரவு தரவேண்டும் என்று PRINCIPAL SECRETARY அவர்களே உயர் மட்டத்தில் கலந்து வழங்கிய அனுமதியின் பேரில் க;லந்து கொண்டேன் . நீங்களும் நேரம் வீணாகாமல் நிகழ்ச்சி அமைத்திருந்தீர்கள் , மீன் குஞ்சுக்கு நீச்சல் பயிற்சிதேவையா என்ன"? என்று சிரித்தார் வித்யா.
ராமசாமி சார், அம்புஜம் மேடம், மாடசாமி சார் [கௌரியின் மாமா] அனைவரையும் பின்னர் சந்திக்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம் என்று மெய்யான அன்புடன் பேசினார் வித்யா. அங்கே பல்கைலையில் சுபத்திரா மேடம் நினைத்ததை வெகு அழகாக நிறைவேற்றுவதையும், நிகழ்ச்சிகளை குறித்த நேரத்தில் நடத்துவதையும் பலரும் பாராட்டினார்.
அலுவலகம் வந்த பிறகும் , மாடசாமி
மற்றும் ராமசாமி இருவர் மனங்களும்
பல்கலை துவக்க விழா குறித்தே
சுற்றிச்சுற்றி வந்தன. ஏதோ ஒரு
பந்தம் ஏற்பட்டுவிட்டதாக இருவரும் தனித்தனியே உணர்ந்தனர். என்னை ஏன் அழைத்தார்
மேடம்? என்ற பொதுவான கேள்வி
அவரவர் மனதில் உழன்றது. வெவ்வேறு
சமாதானங்கள் இருவர் மனதிலும் . மாடசாமிக்கு
ஒரு சிறு ஏக்கம் , கௌரியின்
தகப்பன் இருந்து , குழந்தையின் திறமை, அகில இந்திய
அங்கீகாரம், சிறப்பான ஊக்கத்தொகை , VIP அவர்களின் நேரடிப்பாராட்டு அதுவும் மேடையில் பலர்
முன்னிலையில் -இதெல்லாம்காண இல்லையே--- இறை அருள் மற்றும்
நல்லோர் ஆசி இன்றி இவை
கிடைக்குமா ?. சரியான தருணத்தில் மாரியம்மா
வை வணங்கி ஆசி பெற்றாள்
என்பது அவளது கல்வி முயற்சியில்
ஒரு திருப்பு முனை ஐயோ மறந்துவிட்டேனே
அதே நிகழ்வில் மேடம் அவளை கூட்டிச்சென்று
, அர்ச்சனை செய்வித்து , காபி அருந்தச்செய்து வீட்டில் கொண்டு
வந்து விட்டு --அப்பப்பா எவ்வளவு பெருந்தன்மை. மேன்மக்கள்
எவ்வளவு இயற்கையாக செயல் படுகின்றனர் . மேடை
நாகரிகம், பேச்சு , மொழி ஆளுமை , அனைத்தையும்
மேடம் வழியே கௌரி பெற
இருக்கிறாள் என்று ஆனந்தக்கண்ணீர் வழிய
முகத்தை துடைத்துக்கொண்டார் மாடசாமி
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment