Wednesday, May 31, 2023

Rengaa Rengaa -39

 Rengaa Rengaa -39

ரெங்கா ரெங்கா -39

அடுத்த நாள் மாலை ரெ , ராமசாமியை தொடர்பு கொண்டான் ராமசாமி வேண்டா வெறுப்பாகப்பேசினார். அவருக்கு ரெ பற்றி த்தான் அக்கறையே தவிர அவன் தாயார் எக்கேடு கேட்டால் என்ன என்ற பற்றற்ற புத்தர் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இனி யார் எது சொன்னாலும் ராமசாமி அசைந்து கொடுப்பதாக இல்லை.. கிட்டத்தட்ட ராமசாமி ஒதுங்கிக்கொண்டார் என்பது பொருத்தமாக இருக்கும் . இது இதோடு நிற்குமா இல்லை மாடசாமிக்கும் பரவி விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மாடசாமிக்கு கஸ்தூரிரெங்கன் என்ன உறவு முறை?  ஒன்றுமில்லை   ஏதோ ராமசாமிக்காக மெனக்கெட்டு தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும்  செய்தான். அவ்வளவு ஏன் ?  மாடசாமி வராவிட்டால் . ரெ குண்டூர் ட்ரெயினிங் வகுப்புகளுக்கு வந்திருக்கவோ, ரயில் வேயில் வேலை வாங்குவதோ பகல் கனவாக போயிருக்கும். கஸ்தூரிரெங்கன் தாயாருக்கு எதுவும் புரியாவிட்டாலும் தான் ஒரு மாபெரும் திறமைசாலி என்பதாக உள்ளூர ஒரு பெருமை இருக்கிறது என்பது பிறரை மதிக்காமல் எதிர் வாதம் செய்வது "சாணி தட்டினாலும் உள்ளூரிலியே 2400/- வருகிறதே என்று ஒரு பைத்தியக்கார EQUATION நினைத்துக்கொண்டு கஸ்தூரிரெங்கன் தன் மானத்திலும்   , தன்னிறைவிலும் ஒரே அடியாக மண்ணைப்போட்டுஇருப்பாள் கிழவி. கஸ்தூரிரெங்கன் தப்பித்துவிட்டான் என்ற நிலையில் கையில் 4000/-த்தைக்கண்டதும் ஏதோ பெரும் செல்வம் குவிந்துவிட்டதைப்போல BANK ACCOUNT தேவையில்லை இவ்வளவு நாள் வாழலியா ? என்று வறட்டு வாதம் பேசி ராமசாமி எரிமலையை போல் அலைகிறார். மங்கிய நிழல் ஒளியில் பார்த்தால் ரா சாவின் காதில் இருந்து புகை வருவது தெரியும் அவ்வளவு சூடேறிப்போய் BOILER PLANT ஆக இருக்கிறார் . அவர் இனி எவனுக்கும் உதவி செய்யக்கூடாது , எவன் எப்படிப்போனால் என்ன உதவி செய்து அவமானத்தைதாங்கிக்கொண்டு , அர்ச்சனை வாங்கிக்கொண்டு எருமை மாடு போல் உலவ வேண்டுமா ?இது தேவையா ? போங்கடா என்று தனிமைப்படுத்திக்கொண்டார்.

மீண்டும் ரே போன் செய்து என்ன சார் பதில் சொல்லவில்லையே என்றான்

உங்க அம்மா வின் அதீத ஆளுமைக்கு முன் நான் என்ன செய்ய முடியும் .? ஒரு சமயம் இப்ப என்ன தரித்திரம் வந்துவிட்டது என்கிறார். பாங்கில் கணக்கு துவங்க இங்க 500/-ம் 1000/-ம் கொட்டிக்கிடக்கலை என்று பாய்கிறார். பாங்கில் கணக்கு இல்லாமல் வாழ முடியாதா என்கிறார். பாவம் நம்ம பிரதமர் ஏழை பாழைக்கெல்லாம் அக்கௌன்ட் வைத்து அதில் பணம் கிடைக்க திட்டங்கள் வைத்தார். அவரே வந்தாலும் இப்[போது என்ன தரித்திரம் வந்து விட்டது , உங்கள் கணக்கு யாருக்கு வேண்டும் மாசம் 2400/- உள்ளூரிலியே கிடைக்கிறதே என்று கதிகலங்கடித்திருப்பார். . பிழைத்தார் PM . அதனால் நீயாச்சு உங்க அம்மா ஆச்சு கணக்கு வைத்தாலும் , அழுக்கு துவைத்தாலும் சாணி தட்டினாலும் வாழ்க நின் கொற்றம் என்று விலகி க்கொண்டார்.திடீரென்று நினைவுக்கு வந்தவராக பார்ட்டி அது இது என்று பணத்தை வீணடிக்காதே , அம்மாவிடம் கொடு அவர்கள் பணத்தை இரட்டிப்பு ஆக்கி தருவார்கள், ஏனைய விவரங்கள் எதுவும் இல்லை அம்புஜம் கேப்ரியல்,மாடசாமி , ரயில்வே உயர் அதிகாரி, லாவண்யா பூக்கார கோவிந்தசாமி உள்ளிட்ட அனைவரும் நலம்  வேதாந்தம் ஐயங்கார் குறித்த தகவல் ஏதும் இல்லை. இனி ஊருக்கு வந்தாலும் நீ யாரையும் பார்க்க வேண்டாம் , பார்டியும் தரவேண்டாம்  ; நீ மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் . என்று பேச்சை முடித்தார் ராமசாமி.

கஸ்தூரி ரெங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒன்று புரிந்தது இந்த அம்மா தன் நிலை மீறி ஏதேதோ பேசி ராமசாமி வெறுத்துப்போய் இருக்கிறார். உதவி செய்பவனை உதாசீனம் செய்வது உதவாக்கரைகளின் இலக்கணம் என்று அடிக்கடி சுப்பிரமணி சொல்வார் , என்ன இருந்தாலும் சரியான அனுபவஸ்தர் அவர்.  இப்போது தான் புரிகிறது. சரி நம்ப சுப்பிரமணி ஏதாவது தீர்வு சொல்வார் கேட்டுப்பார்ப்போம் என்று முடிவு செய்தான் ரெ .  

தொடரும் அன்பன் ராமன் 

1 comment:

  1. காதிலிருந்து புகை வந்தால் Boiler Plant
    சபாஷ்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-39

  TM SOUNDARARAJAN-39 டி எம் சௌந்தரராஜன் -39 ஒருவர் வாழும் ஆலயம் [ நெஞ்சில் ஓர் ஆலயம்-1962 ] கண்ணதாசன் , வி , ரா , டி எம் எஸ்...