Wednesday, May 31, 2023

Rengaa Rengaa -38

 Rengaa Rengaa -38

ரெங்கா ரெங்கா -38

சுப்பிரமணி , ரெ ஏதோ துன்பத்தில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டான் . பேச்சு கொடுத்தான். என்ன சார் ஏதோ குழப்பத்தில் இருக்கீங்க ஊர்ல ஏதாவது என்று இழுத்தான் . ரெ வுக்கு சொல்வதா , என்ன சொல்வது எப்படி சொல்வது , நம்ம வீட்டு கிறுக்குத்தனத்தை வெளியில சொல்வதா என்று உள்ளூர குழம்பியநிலையில் சுப்பிரமணி ஆரம்பித்தான்.

என்ன சார் அம்மா ஏதாவது சொல்றாங்களா இல்ல சொல்லமாட்டேங்கறாங்களா அல்லது சொல்றத கேக்கமாட்டேங்கறாங்களா” என்று கொக்கியை போட்டான். சுப்பிரமணி யமாகாதகன் , எல்லா option களையும் கொடுத்து விடை சொல்ல வைத்துவிட்டான். 

ரெஆமாம் சொல்றத கேக்காம ஏதோ தேவையில்லாம பேச்சை வளக்கறாங்க .உதவி செய்ய வர்றவங்களையும் நோகடிக்கிறாங்க , அப்புறம் யார் உதவி செய்வாங்கஎன்று ரெ பரிதவித்தான் .

சார் உங்களுக்கு அப்பா இல்லையில்ல ? என்று அடுத்த கொக்கியைப்போட்டான். ஆமாம் அவரை யார் பார்த்தா என்று சுருங்க சொல்லி நிலைமையை உணர்த்தினான். ரெ

ஆள் இருக்காரா இல்லையா னு தெரியாத நிலைமையோ என்று 3 வது கொக்கியைப்போட்டான் சுப்பிரமணி. .ஆமாம் என்றான் ரெ . அப்ப அவரு சீட்டு ரேஸுனு , காசைத்தொலைச்சிட்டு அப்புறம் அவரும் தொலஞ்சுட்டாரா என்று 4 வது கொக்கியைபோட்டான் சுப்பிரமணி. அவரு தொலஞ்சுட்டாரா இல்ல தப்பிச்சுட்டாரா னு சொல்லத்தெரியல என்றான் ரெ .

சுப்பிரமணி பேசினான் , ஓடிப்போன தகப்பன் வீடு ஒக்காந்துரும் ஆனா அந்த குடும்பத்தில ரெண்டு பசங்க , ஆண்கள் அல்லது பெண்கள் அல்லது ஒரு ஆண் , ஒரு பெண் இருந்தால் ஒருத்தங்க தலை எடுத்து குடும்பத்தை காப்பாத்திருவாங்க. ஒரே பெண்ணோ , பையனோ இருந்தா அம்மாக்காரி  அந்தகொளந்தைய கோழிக்குஞ்சு மாதிரி மூடி மூடி வெச்சு வளர்த்து அப்புறம் வேலைக்குக்கூட போக விடாம இடைஞ்சல் பண்ணுவாங்க ;ஏதாவது சொன்னா நான் உனைக்காப்பாத்தறேன் பாங்க . நீ போய்ட்டா அப்புறம் என்னை யார் காப்பாத்துவா ங்க னு பசங்க கேக்கறதுல்ல அதுனால அந்த பையனோ பொண்ணோ கவனிக்க ஆளில்லாம தான்தோன்றியா போயிருவாங்க . இதை சொன்னா கெளவிகளுக்கு பயங்கரமா கோவம் வரும்

அதுனால வீட்டுக்கு friends வந்தாக்கூட எரிஞ்சு விழுவா ங்க . இத்தனை வகைகளையும் பஞ்சாபகேசன் சார் மனைவி எனக்கு சொல்லிக்கொடுத்து, அந்த மாதிரி கெளவிகளை finance cut பண்ணிவிட்டா அப்புறம் சொன்ன பேச்சு கேப்பாங்க னு அந்த மேடம் சொன்னாங்க . நீங்களும் கொஞ்சம் பண ஓட்டத்தை கம்மி பண்ணுங்க அம்மாவுக்கு.   அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு என்றான் சுப்பிரமணி..இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ?என்றான் ரெ

அட நீங்க ஒண்ணு --இதெல்லாம் நான் சந்திச்சிருக்கேன் சார் என் வாழ்க்கையில என்றான் சுப்பிரமணி.. கொஞ்சம் சில்லறையைக்கண்ட தும் பெரியம்மா னு ஒருத்தி எங்கம்மாகிட்ட ஒட்டிக்கிட்டு பையன் கிட்ட நெறைய பணம் கேட்டு வாங்கு இல்லேன்னா அவன் செலவாளியா மாறிருவான் அது இது னு பத்தவெச்சு எங்கம்மா அவங்க பேச்சைக்கேட்டுகிட்டு மேல மேல பணத்தை வாங்கி சினிமா ஓட்டல் னு கெளம்பிருச்சுங்க , என் தங்கச்சியை தனியா விட்டுட்டு இதுங்க போகுதுங்க னு கேள்விப்பட்டேன். நான் போஸ்டர் ஒட்டி 5/-ரூவா கொண்டாந்தப்ப இந்த பெரியம்மா எங்க இருந்தானு கூட தெரியல.

 பார்த்தேன் இருங்கடி உங்களுக்கு பணம் தந்தாதானே ஆடறீங்க னு 250/-ரூவாயோட நிறுத்தி , அந்த பெரியம்மா தானே கழந்துருச்சு . நேர போய் அம்மாவை நல்ல காச்சு காச்சு னு காச்சுனேன் இப்ப ஒழுங்கா இருக்காங்க இல்லேன்னா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணியிருக்க முடியுமா சார் என்று உணர்ச்சிபொங்க குமுறினான் சுப்பிரமணி.

வருத்தப்படாதீங்க என்றான் ரெ . சார் நீங்கதான் சோகமா இருக்கீங்க; பயப்படாதீங்க சில்லறையை கட் பண்ணுங்க அப்பதான் வழிக்குவருவாங்க ;  ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன், தப்பா இருந்தா மன்னிச்சுருங்க என்று கை கூப்பினான் .

பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கோ என்றான் ரெ. மனதிற்குள் திடமாக முடிவெடுத்தான் , ரா சா , மா சா சொல்வதை முற்றிலும் பின்பற்றி இந்த அம்மாவை முறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தான்.

சுப்பிரமணி சொன்னான் சார் டவுன் போய் ஆஞ்சநேயர் கும்பிட்டுட்டு ,அபுபக்கர் கடையில நல்ல BAG  வாங்கி கிட்டு வருவோம் இன்னிக்கு சாயந்திரம்;  சம்பளம் வந்தப்புறம் ஊருக்கு போயிட்டு வாங்க என்று க ரெ வை ஊக்கப்படுத்தினார் சுப்பிரமணி

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-39

  TM SOUNDARARAJAN-39 டி எம் சௌந்தரராஜன் -39 ஒருவர் வாழும் ஆலயம் [ நெஞ்சில் ஓர் ஆலயம்-1962 ] கண்ணதாசன் , வி , ரா , டி எம் எஸ்...