Wednesday, May 31, 2023

SAMIs COME TOGETHER-37

 SAMIs COME TOGETHER-37

சாமிகள் சங்கமம் -37

Dr .சுபத்திரா   மிகுந்த கவனத்துடன் மோப்பம் பிடித்து VIP பாதுகாப்புடன் எங்கே தங்கப்[போகிறார் என்னும் அளவுக்கு தகவல் சேகரித்து VIP யிடமே Hope you are in receipt of  our mail .Please let me know as to when to pick  you from your suite at xxxx hotel .Without jeopardising security aspects , only I plan calling on you .In 2 minutes we independently move off to function venue in our vehicles ;after the program ,i intend putting you back  to your suite. என்று பேசி பதில் வாங்கி விட்டாள்.

விழா இடத்திற்கு குறித்த நேரத்தில் VIP யுடன் வந்துவிடுவதாகவும் , ஏனையோர் மண்டபத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள தனது உதவியாளர்கள் மூவருக்கும் துல்லியமான ஏற்பாடு குறித்த அறிவுரைகளை சொல்லி , கௌரி குழுவினர் விழா மண்டபத்தின் பின் [GREEN ROOM ]பகுதியில் 10.50 முதல் தயார் நிலையில் இருக்கவும் அறிவுரை வழங்கி இருந்தார்.

வியாழன் காலை நண்பர்களிடையே குழப்பம் இவனுக்கு சொல்வதா இல்லை பேசாமல் போய் வருவதா என்று ராசா மற்றும் மா சா இடையே .மாடசாமியே ஆரம்பித்தார் .டேய் 10.45க்கு யூனிவர்சிட்டி போறேன் நீ வரியா என்றார். உனக்கும் பாஸ் வந்திருக்கா என்று ராமசாமி முழிக்க, ஆமாண்டா  இல்லேன்னா உள்ளேயே போகமுடியாதாமே -top security னு கேள்விப்பட்டேன் என்று மாடசாமி சொல்ல ராமசாமி எனக்கும் ராத்திரி பாஸ் அனுப்பி கண்டிப்பா வாங்க ஒரு சஸ்பென்ஸ் இருக்குனு போன் கால் சொல்லி இப்ப ஒரே டென்ஷன் என்றார் ராம சாமி. உனக்கும் கஸ்தூரி ரெங்கனுக்கும் மாறி மாறி டென்ஷன் ஆறதும் அடுத்தவனை டென்ஷன் ஆக்குறதும் தான் வேலை என்று கிண்டலடித்தார் மாடசாமி.                             சரி போலாம் என்று முடிவெடுத்து செக்க்ஷனில் பெர்மிஷன் சொல்லிவிட்டு யூனிவர்சிட்டி க்கு விரைந்தனர் மாடசாமியின் பைக்கில் .மோட்டார்சைக்கிளை அடுத்த கட்டிட போர்டிகோ வில் வைத்தது விடஅறிவித்திருந்தனர். அங்கே வைத்து மண்டப வாயிலில் வந்தவர் களின் pass VIP ரகம் என்றதும் ஒரு சிப்பந்தி சைடு வழியே கூட்டிச்சென்று 3 வது வரிசையில் அமரவைத்து சென்றார். AC  ஹால் மென்மையாக குளிரூட்டப்பட்டிருந்தது , நம்ம ஆபீசும் இருக்கே என்று புலம்பினார் ரா சா.

குறித்தநேரத்தில் மேடை நிறைந்தது , மைய [VIP ] இருக்கை நீங்கலாக. . ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவியை  காம்பியர் எனும் தொகுப்பாளினி யாக  டாக்டர் சுபத்திரா அறிவித்தார். அந்தப்பெண் மிருணாளினி .ஒல்லி உருவம்  , இரு காதிலும் பக்கத்திற்கு ஒரு கிளி உட்காருமளவிற்கு பெரிய வளையம் , பளபளக்கும் லிப்ஸ்டிக்: ஆள் தான் பட்டினி ஜீவன்,   குரலோ ராவண கம்பீரம் ஆனால் அதியற்புதமான ஆங்கில உச்சரிப்பு .                      குரலின் வேகத்தில் அந்நாளைய ரினி சைமன் /  ரினி கன்னா வை  நினைவூட்டும் விறுவிறுப்பு .

வெல்கம் எவ்ழி பாடி டு திஸ் க்ழாண் ட் ஓப்னிங் செஷ்ன் ஆப் அக் காடமிக்  ப்ழொக்ழாம்ஸ் -ட் வெ ன் டி த் ழீ -ட்வெ ன்டி  f போ ழ் அண்டழ்    ஸ்டிவட்ஷிப் ஆப் அவழ் பிலவட்  வைஸ் ச்சன்ஸ்லழ் டாக்ட்ர் விக்ட்ழ் அண்ட் நௌ ஹவ் ப்லெசன்ட் ப்ரிவிலெஜ் ஆப் இன்வை டிங் அவழ் chief guest  டாக்டழ் வித்யா வேதாந்தம் -HEAD -DEFENCE TECHNOLOGY / COORDINATOR EDUCATION PROGRAMMES OF DEFENCE MINISTRY DELHI TO YOUR THUNDEROUS OVATION என்று மிருணாளினி அறிவித்ததும் பலத்த கர ஒலிக்கிடையே நெடிதுயர்ந்த உருவமாக கூப்பிய கரங்களுடன் கம்பீரமாக மேடையின் பின் பகுதியில் கறுப்புப்பூனை காவலர்களிடையே நடந்து வந்து அனைத்து மேடை பிரமுகர்களுக்கும் சபையினருக்கும் முறையே சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவித்தார் வித்யா [வேறு யார் லேசர் வித்யா வே தான் ]. இத்துணை அறிவிப்பும் சுபத்திரா வின் கண்ணசைவில் இயங்கியதென்பது மிருணாளினி க்கு மட்டுமே தெரியும். 11.23.AM என்ன டைமிங் அம்மாடி என்று சாமிகள் திகைத்தனர். [தொகுப்பாளினியின்பெச்சு அவரின் ஆங்கில ஒலி க்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது அன்பர்கள் பொருத்தருளவும் ]

தொடரும்   அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...