Wednesday, May 31, 2023

Rengaa Rengaa -37

 Rengaa Rengaa -37

ரெங்கா ரெங்கா -37

மாடசாமியும், ராம சாமியும் விரைவாக தெளிவாக போனில் பேசி , கஸ்தூரி ரெங்கன் தாங்கொணாத ஆத்திரம் கொண்டான். மாடசாமி பேசினார். தம்பி பதறின காரியம் சிதறிப்போகும் .ஆற அமர யோசிங்க , நாங்க உங்களுக்கு கெடுதலா நெனப்போம் ? உங்க அம்மாவுக்கு நல்லது கெ ட்டதே தெரியாதா , யாரிடம் என்ன சொல்லலாம் எப்படி சொல்லலாம் எதுவும் தெரியாதா ? ஏன் எங்களுக்கு வேற வேலை எதுவும் இல்லையா ? ஓயாம உங்கவீட்டுக்குப்போய் ஆலோசனை வழங்கணுமா ? ஆனானப்பட்ட யூனிவர்சிட்டி ப்ரொபஸர் மேடம் எவ்வளவு பண்பா பேசறாங்க .அவங்க லெவலுக்கு நாம் யாரும் பக்கத்துல நிக்கக்கூட முடியாது. ஆனா அவுங்க உடன் பிறவா சகோதரிய போல எங்களுக்கு அன்புபாராட்டறாங்க. உங்க தாயார் ஏதோ எகானாமிஸ்ட் மாதிரி உரு ட்ட றாங்க. . உங்கள வருத்தப்பட வெக்க இப்படி பேசல ; அதுனால ராமசாமி என்ன சொல்றாரோ அதன் படி செய்ங்க குட் லக் என்று முடித்தார் மா சா.

டேய் நீ சண்டை போடாதே அம்மாவோட. நான் சொல்றதை செய் எல்லாம் சரி ஆய்டும் என்று முடித்தார்  ராம சாமி. கஸ்தூரி ரெங்கன் சோகத்தில் ஆழ்ந்தான். அதாவது அவன் அம்மா தன்னிடம் பணம் கொட்டிக்கிடக்கவில்லை என்றும் இத்தனை காலம் அக்கவுண்ட் இல்லாமலே வாழவில்லையா என்றெல்லாம் பேசி ராமசாமி உள்ளூர வெந்து போனார்.இனி நான் உங்க வீட்டுக்கு போவதாக இல்லை .உன் தாயார் பேசின தோரணை -நான் ஏதோ திருட வந்தவன் போலவும் , உங்க ஐஸ்வரியத்தை பங்குபோட்டுக்கொள்ள வந்தவன் போலவும் பேசுகிறார் . எனவே நான் உணர்வதை சொல்கிறேன்.கேப்ரியல் 3000/-கொடு என்றார் நான் தான் 4000/- கொடுக்க சொன்னேன் . அதெல்லாம் உங்க தாயாருக்கு தெரியாது. தன்னிடம் பணம் இருப்பது எனக்குத்தெரிந்துவிடக்கூடாதென்று எண்ணுகிறார்கள் போலும் . நல்ல எச்சரிக்கை உணர்வு தான் .ஆனால் அவர்கள் மாதம் ஒன்றுக்கு 2400/- ரூபாய் உள்ளூரிலேயே கிடைத்தால் போதும் என்றிருந்தவருக்கு, இருந்த இடத்திலேயே நீயே தேடிப்போய் 4000/-கொடுத்தது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தந்திருக்க வேண்டும் .மாறாக எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார்..இவர்களிடம் என்போன்றவர்கள் விலகி இருப்பது எங்களுக்கு நல்லது இல்லையேல் திருடன்/ ஏமாற்றுப்பேர்வழி போன்ற பட்டம் சுமக்க நேரிடும். என் ஆயுளில் சீரங்கத்திலேயே அந்நியனாகப்பார்க்கப்பட்டது  உங்கள் வீட்டில் தான்..எனவே நீ உன் தாயாருக்கு தரும் பணத்தை கண்காணிக்க வேண்டி வரலாம் ;ஏனெனில் பேங்க் வேண்டாம் என்றால் சில மாதங்களில் கணிசமான தொகை சேர்ந்துவிடும். அப்போது இவர்போன்ற பெண்களை வசமாக ஏமாற்றி, மூன்று மாதத்தில் 4000/-ரூபாய் முதலீட்டிற்கு 10000/-தருகிறேன் என்று மொத்தமாக சுருட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.இதை நேரடியாக நானே சொன்னால் நம்ப மாட்டார்கள் .நீ வரும்போது SBI இல் உங்கள் இருவர் பெயரிலும் கணக்கு துவங்கி பாஸ்புக் காபி எடுத்துவைத்துக்கொண்டு உங்கள் ஊரிலிருந்து அவ்வப்போது அகவுண்டில்  எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு எடுக்கிறார்கள் என்பதை நீயே தெரிந்துகொள்ளலாம் .இதை சொல்ல எனக்கே அசிங்கமாக இருக்கிறது; வேறு வழி தெரியாமல் இதை சொல்கிறேன் என்று ரெ வின் மனதில் ஆழமாக பதிய வைத்தார் ராமசாமி . கஸ்தூரிரெங்கன் மிகவும் விசனப்பட்டான் .இந்த அம்மா என் நண்பர்களை நோகடித்து அவர்கள் என்னுடன்  பழகுவதையே கெடுத்து விடுவாள் போலிருக்கிறதே என்று மிகவும் சோர்ந்து போனான்.  என்ன செய்யமுடியும் ? படித்துக்கரையேறி முன்னேற நினைத்தால் வேலையே வேண்டாம் என்றார் அதற்கு முன் கடிதம் வந்ததையே மறந்தாளா , மறைத்தாளா -ஐயோ பகவானே ராமசாமி சார் எவ்வளவு வேதனைப்பட்டுவிட்டார் . நல்லவர்களை நோகடித்தால் அழிவுக்கு இட்டுச்செல்லும் னு எங்கோ படித்தேன் அது இப்போது கண் முன்னே நடக்கிறது என்று குறுகிப்போனான்.                                     தொடரும்  அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...