Rengaa Rengaa -36
ரெங்கா ரெங்கா -36
ஆடிட்
அதிகாரிகளுக்கு தலைவலி உண்டாக்கி தப்பித்துவிடலாம்
என்று மனக்கோட்டை கட்டுவார்கள்.. அது போன்ற நேரங்களில்
தணிக்கை செய்யும் எவரும் அஞ்சாமல் குறிப்பு
எழுதினால் , ரயில்வே துரையின் உயர்
அதிகாரிகளிடம் ஊழல் கூட்டம் சிக்கிக்கொண்டு
அல்லல் படும். பல நேரங்களில்
தணிக்கை செய்யவேண்டிய துறையினரே லஞ்சம் , பிற -"பலதரப்பட்ட"கவனிப்புகளுக்கு மயங்கி முறையாக தணிக்கை
செய்யாமல் ஏமாற்றுவர் . ஆனால் அவர்கள் எளிதில்
பிடி படுவர் . அது போன்ற இடங்களில்
சூப்பர் ஆடிட் நடத்த
சில பிரபலங்கள் இருக்கின்றனர் -அதில் தலைவர் உங்கள்
அதிகாரி பஞ்சாப கேசன் சார்.என்றார் அம்மையார். மாணவர்கள்
அதிர்ந்தனர். மேலும் தொடர்ந்தார். நிதி
ஒதுக்கீடு குறித்த துறை அனுமதி
காகிதம் இல்லாமல் தணிக்கை மேற்கொள்ளாதீர்கள் என்று
எப்போதும் சொல்வார். இவர்கள் ஏதோ ஒரு
காகிதத்தில் தரும் விவரங்களை ஏற்க
வேண்டிய நிர்ப்பந்தம் எவர்க்கும் இல்லை என்பார். ப
கே சார்.
எந்த ஆடிட்டையும் அல்லாட்மென்ட் எனும் நிதி ஒதுக்கீடு குறித்த புள்ளி விவரங்கள் அளிக்க வில்லை என்றால் திட்டமிட்ட ஊழல் என்று தெளிவாக புகார் அனுப்பிவிடுவார். ஒரு சிலர் மேலதிகாரிகளை சரிக்கட்டுவார்கள். அது போன்ற நபர்களின் துறைகளுக்கு மிகச்சிறந்த நேர்மையாளர்கள் கிடைத்தால் மட்டுமே தணிக்கைக்கு ஒப்புக்கொள்வார்.. அவர் வகுத்த நடை முறை யை அறிவோம்.
முதலில் நிதி ஒதுக்கீடு விவரங்களை .[அவற்றின் வழிகாட்டு நெறிமுறை உட்பட] துல்லியமாக குறித்துக்கொள்வார். பின்னர் தனித்தனியே செலவினங்களை விவரமாக பிரித்து எழுதி, பார்க்கும் போது , தேவையில்லாத செலவுகள் காட்டப்பட்டிருக்கும் அவற்றை "objectionable' என்று குறித்து , அந்த தொகையியை திரும்ப செலுத்தாவிடில் மேலும் நிதி ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் இல்லை என்று "கைப்பட எழுதி" ஸ்கேன் செய்து மேலதிகாரிகள் பார்வைக்கு அனுப்பி விடுவார். இதனால் பெரும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து இரு அதிகாரிகள் சிறை வாசம் அனுபவிக்கின்றனர். ஆனால் தணிக்கை முறைகள் முன்னேற்றம் கண்டு , கணக்கு வழக்குகள் சீரடைந்துள்ளன. இப்போது நீங்கள் இதோ இந்த ஒதுக்கீடு அடிப்படையில் விடை காணுங்கள் என்று சொல்லி அடிப்படை தகவல்களை கொடுத்தார். கி ஜோ . சுமார் 25 நிமிடங்களில் அனைவரும் சரியான விடை அளித்தனர். .இதுவன்றோ செய்முறை பயிற்சி என பயில்வோர் மகிழ்ந்தனர்.
இது போன்ற நடை முறைகள் முறையாக பயிற்றுவிக்கும் போது , பயில்வோர் மிகுந்த தன்னம்பிக்கையையும் நேர்மையின் வலிமையையும் ஒரு சேர உணர்வர். அன்றைய மா லை காபி / டீ மிகுந்த சுவைபட இருப்பதை உணர்வர்.
மாலை சுப்ரமணியுடன் பேங்க் போய் பாஸ் புக் பெற்றுக்கொண்டு வந்து உடனே ராமசாமி சாரிடம் அனைத்து விவரங்களையும் பேசினான்.
சார் சீரங்கத்துல SBI ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணு மா என்றான். க. ரெ . ஆமாம்ப்பா உங்க தாயாரும் உன் பேரும் சேத்து E or S அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம் என்றார் ராமசாமி. சரி சார் , நீங்க FORM வாங்கி அம்மா கையெழுத்து +500/-ரூவா அம்மாவிடம் வாங்கி கணக்கு ஆரம்பிக்கலாம். முதல் ல FORM இங்க அனுப்புங்கோ நான் கையெழுத்துப்போட்டு திருப்பி அனுப்பிடறேன் என்றான் க ரெ மறுநாள் காலை ராமாசாமி க ரெ வீட்டிற்கு போய் விவரம் சொல்லி FORM இல் கையெழுத்திட்டு 500/-ரூபாய் கொடுங்கோ கணக்கு ஆரம்பிச்சுக்கலாம் என்றார் ரா சா.
கிழவி தன்னை மாபெரும் திறமைசாலியாக எண்ணிக்கொண்டு அதெல்லாம் இங்க ஒண்ணு ம் 500/-ம் 1000/-ம் கொட்டிக்கிடக்கல அக்கவுண்ட் எல்லாம் வேணாம் இத்தனை நாளா இருந்த மாதிரியே இருந்துக்கறேன் என்று வீர வசனம் பேசினாள் . ராமசாமி தான் கழுகு ஆயிற்றே , அவர் உஷாரானார் . சரி உங்களுக்கு ஏது பணம் பாவம் , அக்கவுண்ட் டிஸ்கவுண்ட் எதுவும் வேண்டாம் நான் வரேன் என்று கிளம்பினார். . ஒரு மாஸ்டர் பிளான் போட்டு இந்த சாணி கிழவியை எப்பிடி படுத்தறேன் பார். என்று பொங்கியெழுந்தார். அன்றே காலை மாடசாமியிடம் தனது திட்டம் பற்றி பேசினார். மாடசாமி ஐடியா தந்தார் . டேய் உன் பிளான் சூப்பர் .ஆனா யாருக்கும் சொல்லாத [உன் WIFE க்கு கூட] சொல்லாத.. நைசா க ரெ க்கு மட்டும் போன்ல சொல்லு. எமோஷன் ஆகாத இல் லேனா நீ பேசும் போது நானும் இருக்கேன் எங்கிட்ட போனை குடு பக்குவமா சொல்லி அவன் நம்ப ஐடியா சரி னு ஏத்துக்கணும் அதுதான் முக்கியம் என்றார் மாடசாமி. .
விநாச காலே விபரீத புத்தி -- சாணி தேவி என்னும் கிழவிக்கு. வேறென்ன சொல்ல? இது போன்ற ஜடங்களுக்கு ஏன் தான் உதவி செய்தோ மோ என்று ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?
ராமசாமி கொந்தளிப்பின் உச்சியில் -இப்போது நிஜம் உச்சி நமது ராமசாமி
பரோபகாரம் -தராதரம் தெரிந்து செய்வது நல்லது என்று ரா சா வை மனம் இறுக வைத்துவிட்டாள் கிழவி சாணி தேவி.
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment