Monday, May 29, 2023

SAMIs COME TOGETHER-36

 SAMIs COME TOGETHER-36

சாமிகள் சங்கமம் -36

சுபத்ரா கௌரிக்கு போன் செய்ய துவங்கிய மறு  கணமே கௌரி,  மேடம் எண்ணை தொடர்பு கொண்டாள் .கரெக்ட்டா நான் பேச லாம் னு வந்தேன் அதுக்குள்ள நீயே கூப்பிட்டுட்ட என்று சொல்லி விட்டு இன்னும் 5 நாளில் க்ளாஸ் ஆரம்பம் ;கோவிட் கடந்து போய் இந்த அகாடெமிக் year ஒரு welcome கொடுத்து துவங்கலாம் னு VICE -CHANCELLOR நேத்து சொன்னார் . இதற்கிடையில் ஒரு முக்கிய VIP புதுக்கோட்டை மாவட்டத்துல ஒரு  பாதுகாப்பு இன்ஸ்பெக்ஷன் பண்ண வராங்க . அவங்க புதன் கிழமை OFFICIAL DUTY முடிச்சு திருச்சி வழியாதான் போவாங்க .அவங்கள வியாழன் அன்று ஒரு FEW HOURS--SPARE பண்ண ரிக்வஸ்ட் பண்ணி CHIEF  GUEST ஆக குத்துவிளக்கு ஏத்தி விட்டு ஒரு துவக்க உரை 7 -8 மினிட்ஸ் குடுத்தா நம்ம பங்க்ஷன் சிறப்பா இருக்கும் .நீ 5  நிமிஷத்துல முடிக்கற மாதிரி ஒரு பரத நாட்டியம் பீஸ் பண்ணு .அதுக்கு ரெடியா இரு .அப்புறம் அந்த விழாவுக்கு உங்க மாமா , அம்மா எல்லாம் கூப்பிடு நான் VIP GUEST PASS வாங்கித்தரேன் .ஆனா அவங்க அவசியம் வரணும் , ஏன்னா அதுல ஒரு சூப்பர் சஸ்பென்ஸ் இருக்கு. ராமசாமி சாரை நான் சொல்லி வரச்சொல்றேன் என்று முடித்தார் மேடம்

இதற்கிடையில் மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து , VIP வருவது உண்மை தான் பலத்த பாதாகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று மோப்பம் பிடித்தார் சுபத்ரா . வெகு விரைவாக செயல் பட்டு VC அனுமதி பெற்று பல்கலை சார்பில் துவக்க விழாவுக்கு வியாழன் [உங்கள் கள ஆய்வுக்குப்பின் ] வந்தால் நாங்கள் பெருமை கொள்வோம். தயவு செய்து மறுக்க வேண்டாம் என்று VC , ரெஜிஸ்திரார் ஒப்பமிட்டு , தானும் ப்ரோக்ராம் ஆர்கனைசர் என கையெழுத்து இட்டு E-மெயில் மூலம் தகவல் அனுப்பி VIP யும் . ஒப்புக்கொண்டார்.அதுதான் சுபத்திரா . எல்லா தகவல் களும் முற்றிலும் ரகசியமாக வைத்து , விழா  அன்று காலை அறிவித்தால் போதும் என VIP ஆணித்தரமாக சொல்லி விட்டார். Dr.சுபத்திரா துவக்க விழா வியாழன் காலை 11.30 மணி அளவில் VC தலைமையில் ஆர்ட்ஸ் பாடத்திட்ட மாணவர்களுக்கு என்றும் மாலை 2.00 மணி அளவில் அறிவியல் [சயன்ஸ்] மாணவர்களுக்கு துவக்க விழா என்றும் ரெஜிஸ்திரார் தலைமையில்  என்றும் புதன் கிழமை பெரிய தகவல் பலகை களி ல் அறிவித்தார். வியாழன் காலை நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது

 11.20 முக்கிய விருந்தினர் [டெல்லி பாதுகாப்பு கல்வி குழுமம் ] வருகை

11.25 தமிழ்த்தாய் வாழ்த்து

11.30 VC  வரவேற்புரை

11.40 முக்கிய விருந்தினர் மற்றும் பெருந்தகைகள் குத்து விளக்கு ஏற்றுதல்

11.45 முக்கிய விருந்தினர்-வாழ்த்துரை

11.50 கலை நிகழ்ச்சி -நுண்கலை துறை மாணவர்கள்

11. 55 நன்றியுரை -

12.005   தேசிய கீதம் 

12.20 வளாகத்தில் தேனீர் விருந்து

சுபத்திரா ஒரு மாஸ்டர் பிளான் செய்து , கௌரி, சுகன்யா [I PG ], சாம்ப சிவம் [II PG ] என்று நடனக்குழு தயார் செய்து இவர்களை VIP , VC , REGISTRAR , பிற STAFF முன்னையில் முதல் நாளில் மேடை ஏற்றி , யாருக்கும் விசேஷ சலுகை தரப்படவில்லை என்று அழகாக நிறுவினாள் . 3 நாள் பயிற்சியில் நல்ல நடனம் தயார்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...