Rengaa Rengaa -35
ரெங்கா ரெங்கா -35
சொன்னபடி க ரெ , ப.கே சாரிடம் பேங்க் கணக்கு துவங்க ஒரு அறிமுக லெட்டர் கேட்க அவர் க்ளாஸ் முடிஞ்சதும் 12. 30 க்கு வாங்கிக்கொள் என்றார். இந்த சுப்பிரமணி எவ்வளவு கணக்காக சொல்றார் , படிச்சிருந்தார்னா பஞ்சாபகேசன் சார் மாதிரியே ஆயிருப்பார் என்று மனதில் நினைத்துக்கொண்டே வகுப்பிற்கு போனான். இரண்டு ஆசிரியர்கள் ஒன்றரை மணி நேர அளவில் வகுப்புகளை நிறைவு செய்தனர் ஒருவர் அக்கவுண்ட்ஸ் வித்யாசாகர் இன்னொருவர் ஒரு பெண்மணி -ஆந்திரா மாநிலம் ரயில்வே அதிகாரி ஆடிட்டிங் துறை தலைவி பெயர் க்ரிஷ்ணஜ்யோதி ;சிறப்பாக இருவரும் பாடம் சொல்லித்தர க ரெ --ஆஹா ஆஹா என்று நன்கு புரிந்து கொண்டான். இதை நிச்சயம் ராமசாமி சாரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வெளியே வந்தவனை "சார் கூப்பிட்டார்" என்று பியூன் பத்ரய்யா தெரிவித்ததும் அலறிப்புடைத்துக்கொண்டு கரெ ஓட , சாப் சாப் ,தீரே தீரே என்று பத்ரய்யா ஓடிவர இதோ ஏதோ ஓட்டப்பந்தயம் போலிருக்கே என்று சுப்பிரமணி கீழிருந்து மாடியைப்பார்த்தான். அதற்குள் ப கே வெளியே வந்து "ஏன் இப்படி தலை தெறிக்க ஓடி வர? என்றார். மூச்சிரைக்க ஹி ஹீ என்று, க ரெ , நீங்க கூப்பிட்டீங்கனு பியூன் சொன்னார் என்றான். உன் லெட்டர் டேபிள் மேல இருக்கு, ராமையா [கிளார்க்] இடம் கேள் எடுத்து தருவார் என்று கீழே இறங்கிப்போனார். எவ்வளவு துல்லியமா வேலை செய்யறார் ? 1000 வேலையில மறக்காம லெட்டர் எழுதுவது எவ்வளவு கவனமான வேலை என்று ப கே வை ஒரு பெரும் ஆளுமை என புரிந்துகொண்டான்.
ரேஸ்
ல ஜெயிச்சுட்டீங்களா என்று
கேட்டுக்கொண்டே மாடி ஏறி வந்தான்
சுப்பிரமணி. வாங்க பேங்க் போய்
கணக்கு தொடங்குவோம் ஒரு 500/- ரூபா யாவது கொண்
டுவாங்க . இல்லைனா அந்த முசுடு
பொம்பள முனணு முணுத்துக்கிட்டே இருக்கும்.
. யாரு ? அதுதான் சார் விஜயா
-அது ஒரு கெழவி , கல்யாணம்
நடக்கல. இந்த கல்யாணம் ஆவாத
பொம்பளைங்க ரொம்ப சட்டம் பேசுவாளுக
, 5.30க்கு தானே வரச்சொன்னேன் நீ
ஏன் 5.28க்கே வந்துட்ட அது
இதுனு எரிச்சலூட்டும். ஒரு நாளு நான்
கோவம் வந்து ஏ கெழவி
ரொம்ப அலட்டாதனு சொல்லிட்டேன் ;அது தமிழ்க்காரபொம்பள னு
தெரியாம சொல்லிப்பிட்டேன். என்ன ப்பாத்தாலே ஒரே
கடுப்பு ஆயிரும். அதுனால நான் வெளிய
நிக்கறேன் நீங்க போய் பஞ்சாபகேசன்
சார் செக்ஷன் லேர்ந்து வரேன்
னு சொல்லி லெட்டர் குடுங்க
, மினி மம் 500/- யாவது போட்டு தான் கணக்கு
வெக்கலாம் னு ரூல் பேசும்.
நீங்க ஒண்ணும் பேசாம பார்ம்ல
கையெழுத்துப்போட்டு ஆபிஸ் அட்ரஸ் +500/-
குடுத்து, ஈவினிங் பாஸ் புக்
வாங்கிக்கிறேன் னு சொல்லிட்டு வந்திடுங்க
, சாயங்காலம் இந்த கிழவி வராது,
ராம ராவ் வருவார், ஏதாவது
குறை இருந்தா கூட எல்லாம்
சரிபண்ணி பாஸ் புக் ரெடி
பண்ணி குடுத்துடுவாரு என்று ம ள
ம ள வென
சொல்லி முடித்தான் சுப்பிரமணி.
இப்போது
க ரெ கேட்டான் "சரி நீங்க பேங்க் ல பணம் எடுக்கணும் னா?” நான் போகவே மாட்டேன்
, பத்ரய்யா கிட்ட செக் தந்தா அவர் ரூபாயை வாங்கிகிட்டு வந்துடுவார். அந்த அக்கவுண்ட்
என்னு துனு கிழவிக்கு தெரியாது. மேலும் பத்ரய்யா தான் அவங்களுக்கு பால் சப்ளை அதுனால
ஒண்ணும் பேசாம பணத்தைக்கொடுத்திடும்.
கொறஞ்ச
சம்பளத்துக்கு மாடா உழைக்க வேண்டி இருக்கு, இந்த கிழவிக்கு ஆபீஸே AC அதுனால நம்மள கடுப்படிக்குது
ஆனா ப. கே சார் வரார் னாலே ஐயோ ஐயோ னு நடுங்கும் ஏன்னா சாலரி அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்
சரியா இல்லைன்னா ஹெட் ஆபிஸ்க்கு கம்பளைண்ட் அனுப்பிருவார் சார்; அவர் கிட்ட சிக்கினா
ஜூஸ் புழிஞ்சிருவார் , மூக்கு வாயெல்லாம் ரத்தம் வந்துரும் , ஒரு தடவ ஏதோ திமிரா பதில்
சொல்லி ரொம்ப தூரம் நாறடிச்சிட்டார் சார். அதான் அவர் பேரைக்கேட்டாலே கதறிக்கிட்டு
கணக்கு ஓபன் பண்ணிரும் . இந்த நெளிவு சுளிவு எனக்கும் தெரியும் னு கிழவிக்கு தெரியாது
, சரியா சிக்கட்டும்னு காத்துக்கிட்டு இருக்கேன் என்றான் சுப்பிரமணி. போனாப்போறா விடுங்க
என்றான் க ரெ . சார் நீங்க நல்ல மனசு வெச்சு சொல்றீங்க ஆனா அவளுக்கு தான் ரொம்ப அழகி
னு நெனப்பு , அழுகி னு புரியல அதுதான் ரொம்ப ஆடுது -அவளும், அவ கழுத்து சதையும் ரெண்டுமே கொட கொட னு ஆடுது..க ரெ வுக்கு சிரிப்பு
தாஙகல;ஆனாலும் பல்லைக்கடித்துக்கொண்டு பாங்கில் 7 நிமிடங்களில் செய்யவேண்டியதை செய்து
விட்டு வெளியே வந்தான். சுப்பிரமணி மெஸ்ஸுக்கு
ப் போய் சாப்பாடு கொண்டு வந்தான்..
மதியம் வகுப்பில் ஒரு புது வகை சிக்கல் அதை சரி செய்வது எப்படி என்று 30-45 நிமிடங்களில் வழி சொல்லுங்கள் என்று க்ரிஷ்ணஜ்யோதி மேடம் அனைவருக்கும் கேள்வித்தாள் போல கையில் கொடுத்தார். கிட்டத்தட்ட அனைவருமே -க ரெ உள்பட தடுமாறினர்.. அப்போது மேடம் சொன்னார் ஒரு துறை யின் அக்கவுண்ட் என்பது முறையாக வரிசைப்படுத்தி எழுத மாட்டார்கள் . மேலும் அதில் திட்டமிட்ட ஊழலும் இருக்கும்.. சொல்லப்போனால் ஊழல் அதிகாரிகளும் ஊழியர்களும் கை கோர்த்து அனைத்து வரவு செலவுகளையும் தாறுமாறாக எழுதி தணிக்கை [ஆடிட்] அதிகாரிகளுக்கு தலைவலி உண்டாக்கி தப்பித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுவார்கள்..
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment