SAMIs COME TOGETRHER-35
சம்மிகள் சங்கமம் -35
சரி டிபன் சாப்பிட போலாமா என்றார் மேடம் . இருவரும் விழித்தனர் . கௌரியின் தாயார் "இல்ல வீட்டுல டிபன் செஞ்சு வெச்சுட்டு வந்திருக்கோம் அதுனால என்று இழுத்தார். சரி வாங்க காபி யாவது சாப்பிடுங்க என்று மூவரும் சுபத்ராவின் டொயோட்டா வில் ஏறி அமர ஏதோ ஒரு பெயர் சொன்னார் சுபத்ரா , வண்டி சென்னை சாலையில் திரும்பி ஹோட்டல் முன் நின்றது . சுபத்ராவைக்கண்டதும் ஹோட்டல் ஓனர் வெங்கடேஸ்வரன் ஓடி வந்தார் வாங்கோ வாங்கோ என்று அலறியபடியே . மேடம் சொன்னார் ஒரு பூரி செட் + இவங்களுக்கு நல்ல காபி 2 என்று கை கழுவியமர்ந்தார். இவர்கள் நின்றுகொண்டே இருக்க இங்க வாடி என்று கௌரியை தனக்கு அடுத்த சீட்டில் உட்காரச்சொல்லி , தாயாரை எதிர்ப்புறம் அமர வைத்தார் . ஒரு பெரிய பேராசியர் முன் அமர்வதா என்று இருந்தவர்களை எளிதாக அமைதிப்படுத்திவிட்டார் மேடம். . கௌரிக்கு இப்போது தெம்பு வந்துவிட்டது பிரேமா சொன்னபடி பேசிவிடுவது என்று தீர்மானித்தாள் .மேடம் அர்ச்சனைக்கு முழு பெயர் சொல்லணு மா ? ஆ மாம் வே ற ? என்றார் மேடம்
இத்தனை நாளா சும்மா கௌரினு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன் , இன்னிக்கு தான் இதையே தெரிஞ்சுக்கிட்டேன். எதுக்கு பேரை எல்லாம் சுருக்கி சொல்லணும் அதுவும் தெய்வ சந்நிதானத்துல ?என்றார் மேடம். மேடத்துக்கு புஸ் புஸ் என்று 2 பிரம்மாண்ட பூரிகள் மற்றும் பெரிய கிண்ணத்தில் மசாலா கம கம வென்று --வெங்கடேஸ்வரனே கொண்டு வந்து பவ்யமாக மேடத்தின் முன் வாழை இலை போட்டு வைத்தார் .உடனே ஓடிப்போய் 2 காபி கொண்டு வந்து கௌரி, கமலா இருவருக்கும் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றார். காபியை சுவைத்த இருவரும் ஆ என்று காபியின் சுவையில் திக்குமுக்காடினார்.என்ன காபி சரியாயிருக்கா என்றார் மேடம்.. சூப்பரா இருக்கு மேடம் என்றாள் கௌரி. மேடம் தனக்கு ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அந்த டிரைவர் பில்லை யு ம் இங்க குடுங்க என்று வாங்கி பணம் செலுத்திவிட்டு போலாமா என்று கேட்டு அனைவரும் வண்டி யை நோக்கி நடக்க, கௌரி நாங்க பஸ் ல வீட்டுக்கு போயிர் றோம் என்றாள் . உடனே நகைச்சுவையாக மேடம் சொன்னார் நைசா காப்பிய குடிச்சிட்டு ஓடிடலாம் னு பாக்கறியா அக் ஹ்ம் , நம்ம கிட்ட நடக்காது மரியாதையா வண்டில ஏ று என்று மிரட்டி இருவரையும் அமர வைத்து தானும் கௌரியின் பக்கத்தில் அமர்ந்து மெல்லிய குரலில் கௌரி இன்னிக்கு நைட் போன் பண்ணு ஒரு முக்கியமான தகவல் எதிர் பார்க்கிறேன்,அது இன்னிக்கு தெரிஞ்சுடும் அப்புறம் நான் சொல்ற மாதிரி நீ ஒரு ப்ரோக்ராம் பண்ண வேண்டி இருக்கும் விவரம் பிறகு என்று சொல்லி பேசுமுன்பே வண்டி மெய்ன் காட் கேட் பகுதியில். உங்க வீடு தில்லை நகர் தானே என்று கேட்டு வண்டியை அவர்கள் வீட்டிற்கு போகச்சொன்னாள் . வீட்டின் முன் வண்டி நின்றது அனைவரும் இறங்கினர் மணி 8.55 வாங்க மேடம் என்று வீட்டிற்குள் அழைத்தனர் . மேடம் மணி பார்த்தார் , ட்ரைவரிடம் ஒரு 10 மினிட்ஸ் என்றார்.வீட்டினுள் வந்ததும் சேர் போட்டு அமர சொன்னார்கள். பால் கொண்டு வரவா என்றார் கமலா, அய்யய்யோ இப்பதான் சாப்பிட்டிட்டு வரோம் என்றார் மேடம். உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல ;அவ்வளவு பெரியவங்க வீடு வரைக்கும் வாறீங்கன்னா மாரியம்மா கருணை தான் , இவளை நீங்க தான் நல்லா முன்னுக்கு கொண்டு வரணும் என்று , கமலா கை கூப்பி நிற்க , பாட்டி வந்து வணக்கம் சொன்னார் . உடனே சுபத்ரா எழுந்து பாட்டியை கைத்தாங்கலாக சேரில் அமர்த்தி குனிந்து பவ்யமாக வணக்கம் தெரிவித்தார் .மேடம் இவ்வளவு எளிமையானவங்களா என அனைவரும் வியந்தனர். நேரம் ஆகுது நேர யூனிவெர்சிட்டிக்கு தான் போறேன் அதுதான் உங்கள இங்க வீட்டிலேயே விட்டுட்டுபோலாம் னு வந்தேன் என்று கை கூப்பி விடை பெற்றார் . கௌரி நைட் போன் பண்றேன் இல்லீன்னா நீ கூப்பிடு. என்று சொல்லிவிட்டு கிளம்ப யூனிவர்சிட்டி நோக்கி வண்டி பறந்தது.
தொடரும் அன்பன்
ராமன்
No comments:
Post a Comment