Saturday, May 20, 2023

Rengaa rengaa -34

 Rengaa rengaa -34

ரெங்கா ரெங்கா -34

சண்ட மாருதம் மாதிரி வந்தார் சார்.  பஞ்சாபகேசன் சார் . அடுத்த வினாடி இங்கிலிஷ் ல ஆரம்பிச்சார் , பயங்கரமா எகிறிப்புட்டார் அந்த பணக்காரரை . எனக்கு இங்கிலிஷ் புரியல ஆனா ப கே சார் என் மேல அனுதாபம் வெச்சு பேசினாருங்கறது அவருடைய முகத்தில் வெளிப்பட் ட கசப்பான கோபம் [ [நீ எல்லாம் மனுஷனாய்யா னு கேக்கற மாதிரி ஒரு ஆவேசம்] .அந்தப்பணக்காரர் இன்னும் நின்னா பெரிய திட்டு வாங்க வேண்டியிருக்கும் னு மெல்ல நழுவிட்டார்

இங்க வா என்று கூப்பிட்டு "ஏன் இப்பிடி பிச்சை எடுக்கற ? என்றார்

நான்"சார் நான் பிச்சை எடுக்கல , நல்ல பணக்காரர் னு ஒரு டீ வாங்கித்தாங்க னு தான்  கேட்டேன் , வேற யார் கிட்டயும் எதுவும் கேக்கல , இந்த கூட்டத்தில கேட்டுப்பாருங்க நான் சொன்னது உண்மையா இல்லையா னு தெரியும் . சார் , திருடறது பிச்சை எடுக்கறது ரெண்டும் எனக்கு அறவே பிடிக்காது என்றேன்.

சார்: வீட்டுல யார் யார் இருக்கீங்க ?   நான்: அம்மா , தங்கை , நான் [3 பேர்] ரயில்வே V RR ல சொல்லி 3 சாப்பாடு பார்ஸல் வாங்கி தந்தார். சரி நீ வேலை குடுத்தா செய்வியா னு கேட்டார் ,

நான் :  செய்யறேன் சார் கௌரவமா வாழத் தான் சார் நினைக்கறேன் .    சார் : வெளியூருக்கு கூட்டிக்கிட்டு போனா வருவியா ?.   நான்:வீட்டுல கேட்டு சொல்றேன்

சார் சரி வர சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்த டீ ஸ்டாலில் கிட்ட நில்லு . அப்ப நான் வருவேன்..நீ ஸ்கூல் டீ சி வாங்கி வெச்சுக்க கைல கொண்டு வா உபயோகப்படும்னு சொல்லி வீட்டுல போய்  எல்லாரும் சாப்பிடுங்கனு   சொல்லி தட்டி கொடுத்து அனுப்பினார். நல்ல வேளையா சினிமா ஸ் ட் ரை க் முடிஞ்சு 3-4 நாள் போஸ்டர் ஓட்டினேன் கைல இருந்த காசு போஸ்டர் கூலி எல்லாமா ஒரு 100/- அம்மாகிட்ட குடுத்துட்டு டீ ஸ்டால் கிட்ட வந்தேன் மணி 10.55 , சார் சும்மா மிலிட்டரி மாதிரி 11. 00  மணிக்கு வந்தார் . எப்ப வந்த னு கேட்டார் ஒரு 5 நிமிஷம் இருக்கும் சார் னு சொன்னேன். GOOD னு கை குலுக்கினார்.என்ன ஊருக்கு வரியா னு கேட்டார் , நான் சரி னு சொன்னேன். நைட் 10 மணிக்கு ரயில் , நான் டிக்கெட் போட்டு வெக்கறேன் நீ வீட்டுக்கு போயிட்டு நைட் 8 மணிக்கு இதே இடத்துக்கு வா என்று அனுப்பி நான் நைட் 7.50 க்கே வந்துட்டேன். கரேக்ட்டா டிக்கெட் குடுத்து, வண்டில உக்கார வெச்சு , எங்கயும் இறங்காத குண்ட்டூர் ல நான் வந்து இறங்க சொல்வேன்அப்ப  இறங்கு.னு அதே மாதிரி அன்னிலேருந்து அவர் கூடவே இருக்கேன் சார்.

இங்க வந்து ?என்றான் க ரெ . அது பெரிய கதை சார் என்றான் சுப்பிரமணி நேர சார் வீட்டுக்கு போனோம். சார் WIFE , சின்ன பொண்ணு 10-12 வயசு இருக்கும் . அந்த குவாட்டர்ஸ்  ல ஒரு அவுட் ஹவுஸ் ஒரு ரூம் கிச்சன் , வெளிய டாய்லெட் பாத்ரூம் .அதுல தங்கிக்க , வேலை எதுனாலும் செய்யணும் எல்லா வேலைக்கும் கூலி உண்டு. என்று அவங்க வீட்டு கிட்டயே இருந்தேன். சார் நைட் ல க்ளாஸ் எடுத்துட்டு 9.00-9.30 க்கு வருவார் அது வரையில் நான் தான் காவல் வீட்டுல 2 பேருமே பெண்கள். ஒரு வாரம் முடிஞ்சு நீ சைக்கிள் ஓட்டுவியா என்றார் .ஓட்டுவேன் சார் என்றேன் . காலனி ல 2 வீட்டில் காலை 8.00---9..00 குழந்தைகளை ஸ்கூலில் கொண்டு போய் விட்டு மாலை 3.45-- 4.30 வீட்டில் விட வேண்டும் வீட்டிற்கு 200 ரூபாய் கூலி மொத்தம் 400/- வருமானம் சார் வீட்டிலியே இருந்ததனால் காபி சாப்பாடு எல்லாம் வேளைக்கு குடுத்துடுவாங்க மகாலெட்சுமி அம்மா , அவங்க பேரும் அது தான். இப்பிடி ஒரு 5 அஞ்சறை வருஷம் ஆனதும் டி சி காபி வாங்கி ரயில்வே ல WAITING ROOM  கேர் டேக் கர் வேலை க்கு சேத்து விட்டார். .அடுத்த ஒரு மாசத்துல அம்மா தங்கச்சி எல்லாரையும் இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.

தொடரும்       அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

DIRECTOR-- CHITRALAYA GOPU

  DIRECTOR-- CHITRALAYA GOPU இயக்குனர்: சித்ராலயா கோபு இயக்குனர் ஸ்ரீதரின் தோழன் 5 ம் வகுப்பு முதல் இறுதிவரை . இ யற்பெயர்--     ...