Saturday, May 20, 2023

SAMIs COME TOGETHER- 34

 

SAMIs COME TOGETHER- 34

சாமிகள் சங்கமம் -34

நாட்கள் உருண்டோடி இப்போது வகுப்புகள் துவங்கும் நேரம் வந்து விட்டது .இன்னும் 5 நாட்கள் போனால் தினமும் பல்கலை வளாகம், வகுப்பு, பயிற்சி, கள ஆய்வு மற்றும் நேரடி தொடர்பு உரிய கலைஞர்களுடன் என்று நீண்ட பயணம் இருக்கிறது மாணவ  மாணவியருக்கு. கௌரிக்கோ மகிழ்ச்சியும் மனஅழுத்தமும் ஒரே நேரத்தில் --முன்னது கல்வி குறித்து , பின்னது ஐயோ ஆங்கிலம் பயிலும் வேகம் தடைப்படுமே , மாரியம்மா நீ தான் கதி என்று புலம்பினாள். இந்த நிலையில் மேடத்தைப்பார்த்து THESAURUS பற்றி மெள்ள ஏற்பாடு செய்துவிட வேண்டும் --மீண்டும் மாரியம்மா நீ தான் கதி என நெக்குருக வேண்டினாள்.  மாமா அடுத்த வாரம் க்ளாஸ் தொடங்கும் அதுக்குள்ள சமயபுரம் போயிட்டு வரணும் என்றாள் கௌரி. சரிம்மா ஆனா எனக்கு இப்ப 10.30 மணி வரை ஒரு அடிஷனல் டூட்டி போட்டிருக்காங்க. அதுனால நீயும் அக்காவும் போயிட்டு வாங்க என்று அக்கா அக்கா என்று கௌரியின் தாயாரை அழைத்து இவகூட சமயபுரம் போயிட்டு வாங்க எனக்கு கொஞ்சம் ஆபிஸ் வேலை அதிகமா இருக்கு ; என்னக்கி போனாலும் அம்மாவுக்கு [கௌரியின் பாட்டிக்கு] ஏதாவது சாப்பாடு செஞ்சு வெச்சுட்டு போங்க அவங்க சாப்பிட்டுக்குவாங்க எனக்கு டைம் ஒதுக்க முடியல அதுனால நீங்க கொஞ்சம் போயிட்டு வாங்கக்கா , கோவிச்சிக்காதீங்க என்றார் மாடசாமி . என்னடா இப்பிடி பேசற , உன்னை யாருடா கோவிக்க முடியும்,  உன்னை மாதிரி தம்பியவாவது கொடுத்தாளே  மாரியம்மா னு நானேநன்றி கலந்த சோகத்துல இருக்கேன் உன்னைப்போய்  கோவி ச்சுக்க முடியுமா , சரி நாளைக்கே போய் மாரியம்மா வைக்கும்பிட்டுட்டு வரோம் என்று சொல்லி மாடசாமிக்கு அமைதி ஏற்பட உதவினர் .

அதிகாலை எழுந்து கௌரியின் தாயார் பொங்கல் வடை தயார் செய்து வைத்து 6.15 மணி அளவில் கிளம்பி 7.10 க்கு சமயபுரம் சென்றனர் .  கௌரிக்கு ஒரு கணம் மூச்சு நின்றது போல் ஆயிற்று . 5 அடி முன்னே மேடம் சுபத்திரா பெரிய மாலை மற்றும் அர்ச்சனைப்பொருட்களுடன் மிகுந்த சிரமப்பட்டு நடக்க, அம்மா சீக்கிரம் வாங்க என்று தாயாரையும் இழுத்துக்கொண்டோடி , மேடம் முன் Good morning என்று கை கூப்பினாள் .உடனே குடுங்க மேடம் என்று அனைத்து சுமையையும் வாங்கிக்கொண்டாள் கௌரி. இவங்க என் அம்மா என்று இவங்க HOD மேடம் என்று அறிமுகம் செய்தாள் [ இவள் மாரியம்மா பக்தை னு பிரேமா சொன்னாளே  என்று நினைவு தோன்றியது மேடம் சுபத்திரா வுக்கு]. எத்தனை பேர் வந்திருக்கீங்க என்றார் மேடம் -நாங்க 2 பேர் தான் என்றாள்  கௌரி . 3 நூறு ரூபாய் டிக்கெட் வாங்கு என்று கௌரியிடம் 500/- ரூபாய் தந்தாள் மேடம். எதுக்கு மேடம் எங்களுக்கும் என்று தயங்கினாள் கௌரி. கோயில் நீ நான் லாம் கிடையாது எல்லாரும் ஒண்ணு  தான் , மரியாதையா நான் சொன்னதை செய் என்று சற்றே குரலை உயர்த்தினாள் .அவ்வளவு தான் கௌரி, அம்மா எல்லாம் கப்ச்சிப் . க்யூ வில் 3 நிமிடங்களில் மாரியம்மன் சன்னிதானம் அடைந்தனர் . சுபத்திரா வைக்கண்டதும் , நான்   நீ என்று பட்டர்கள் ஓடி வர கௌரி அதிர்ந்தாள் , ஐயோ மாரியம்மா வே ஓடி வந்துரும் போல இருக்கே எவ்வளவு செல்வாக்கு மேடத்துக்கு என்று "மாரியாத்தா எல்லாரையும் காப்பாத்து என்று வேண்டினாள். பட்டர் அர்ச்சனைக்கு பெயர் நட்சத்திரம் கேட்க தனது தகவல் முடிந்ததும் , சுபத்ரா  சொன்னார் பெயர் கௌரி கல்யாணி , நட்சத்திரம் சொல்லு என்றார் மேடம்  கௌரி உடனே உத்திரம் என [ஐயோ இவளும் உத்திரமா என்று ஒரு வினாடி யோசித்தார் மேடம் -ஏனென்றால் மேடம் கூட  உத்திரம்  தான் ] அடுத்து கமலா , நட்சத்திரம் ஸ்வாதி என்றுதெரிவிக்க  மிகுந்த அக்கறையுடன் அர்ச்சனை  செய்து, தனித்தனியே மாலை , எலுமிச்சம் பழ சரம் 4-5 பழங்கள் உடையது, விபூதி கொடுத்து,  வெளியே வந்து வழி அனுப்பி வைத்தனர் 2 பட்டர்கள். இவா உங்க சொந்தமா என்றார் சிவ நேச பட்டர் . ஆமா இவா  பெரியம்மா பொண்ணு [கௌரியின் தாய்], அவ எங்க பெரியம்மா பேத்தி என்று கௌரியை அறிமுகம் சொல்லி விடை பெற்றுக்கொண்டனர். அங்கே மாடசாமி ஜங்க்ஷன் நோக்கி விரைந்தார் மணி 8.00

தொடரும்    அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...