Saturday, May 20, 2023

Rengaa Rengaa -33

 Rengaa Rengaa -33

ரெங்கா ரெங்கா -33

பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும் அதுக்கு என்னவெல்லாமோ கேப்பாங்களே , போட்டோ ஆதார் , தெரிஞ்ச நபர்கள் அடியாளப்படுத்தனணு ம் அது இது னு ஓட விடுவார்களே என்று யோசனையில் ஆழ்ந்தான் ரெ . என்ன சார் நானும் பாக்கிறேன் எங்கோ வானத்த பாத்துக்கிட்டு இருக்கீங்க என்ன ஆச்சு உங்களுக்கு என்றான் சுப்பிரமணி . ரெ பேங்க் குறித்த தேவையை சொன்னதும் சார் இங்க ரயில்வே காலனியிலேயே SBI இருக்கு சார் . போட்டோ ஆதார் , நம்ப கே சார் கிட்ட ஒரு லெட்டர் கேளுங்க அவர் ரெகமெண்டேஷன் பண்ணுவார் , அலறிக்கிட்டு            ஓப்பன் பாண்ணிடுவானுங்க . 12 மணிக்கு க்ளாஸ் முடிஞ்சதும் போவோம்; நீங்க 9.20 க்கு கே சார் கிட்ட சொல்லிட்டு க்ளாஸ் போங்க நீங்க வரும்போது லெட்டர் தயாரா இருக்கும் ; கைல போட்டோ இல்லையா இங்க பக்கத்துல ஷோபா ஸ்டூடியோ  இருக்கு  10 நிமிஷத்துல 8 காபி தருவாங்க , ஜாலியாப்போய் வேலையை முடிப்போம் நான் அப்படியே போய்  சாப்பாடு கொண்டு வறேன் .சாப்பிட்டுட்டு க்ளாஸ் போங்க சாயந்திரம் 6.00 மணிக்கு பேங்க் பாஸ் புக் வாங்கிருவோம் . சார் BAG வாங்கிட்டீங்களா ? கைல பணம் இருக்குல்ல , சாயந்திரம் அபூபக்கர் கடையில போய் நல்ல BAG வாங்குவோம் .400/-ரூவா சொல்வாரு , இல்லை இல்லை னு  200/-க்கு கேட்போம் 250-260 க்கு படியுவாரு . இப்பவே வாங்கிருங்க . சம்பளம் வாங்கி, மெஸ், வாடகை எல்லாம் குடுத்து கடைக்குப்போனா நேரத்துல திரும்ப முடியாது.அதுக்கு பேசாம சம்பளம் வாங்கி பேங்க் பணம் போட்டுட்டு வீட்டுக்கு குடுக்கற பணத்தை மட்டும் கையில கொண்டு போங்க. சாயந்திரம் பேங்க் உண்டா ?- ரெ  உண்டு சார்  காலைல இருக்கிற பேங்க் 11-2.00, மாலை 5.00--7.30 அப்ப காலனி ஜனங்க ஈஸியா BANK  போய் வரலாம். எவ்வளவு எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க என்று க ரெ வியந்தான் சுப்ரமணியை பார்த்து .

என்ன சார் பண்றது விதி கெட்ட குடும்பம் சார் நாங்க வீதிக்கு வரவேண்டியது பஞ்சாபகேசன் சார் தெய்வமா வந்து நாங்களும் கௌரவமா சாப்பிட்டு , தங்கை க்கு கல்யாணம் செஞ்சு வெச்சு தாயார் தன்னையும் என்னையும் பாத்துக்கிறாங்க .வாழ்க்கைல நான் பட்ட அடி நரக வாசிகள் கூட  வாங்கி இருக்க மாட்டாங்க.. எதுக்கு பழைய குப்பையைக்கிளறிக்கிட்டு , முன்னேற வழிய பாப்போம் னு மனஸு சொல்லுது. நண்பனா நீங்க வந்தீங்க பேச்சுக்கும் அன்புக்கும் ஒருத்தர் இருக்கார் னு இப்பதான் 2 மாசமா கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்.என்றான் சுப்பிரமணி. அது சரி பஞ்சாபகேசன் சார் எப்பிடி எங்க உங்கள பார்த்தார்? -க ரெ .

அப்ப எனக்கு 11-12 வயசு இருக்கும் 8ம் க்ளாஸ் லீவு விட்ட சமயம் . நாங்க சேலத்துல , குகை ங்குற பகுத்தியில ஒரு சின்ன வீட்டுல குடியிருந்தோம் தங்கச்சி 5- 6 வயசு, ரொம்ப வறுமை .சினிமா போஸ்டர் ஓட்டுனா 500 போஸ்டருக்கு 5 ரூவா தருவாங்க , போஸ்டர் கிழிஞ்சா சம்பளத்துல பிடிச்சுடுவாங்க. , கவனமா ஒட்டணும் , தினம் சம்பாரிக்கணும் னா ஏரியா மாறி மாறி போனா டெய்லி வேல கிடைக்கும் காலை ல 4 .00 லிலிருந்து 7.00மணிக்குள்ள ஒட்டிட்டு ஓடிப்போயிருவோம் , இல்லன்னா ஒட்ட விடமாட்டாங்க சம்பளம் கிடைக்காது. சில ஏஜென்ட் கொஞ்சம் இரக்கப்பட்டு வடையும் டீயும் வாங்கித்தருவங்க ;இப்படி காலை டிபன் ஆச்சுங்களா ,                     5/- ரூவாயை அம்மாகிட்ட தருவேன் அழுகையை அடக்கிட்டு கை நீட்டி வாங்கிக்குவாங்க ,

 எனக்கே பாவமா இருக்கும் , நம்ம உணர்வுக்கெல்லாம் எங்க மரியாதை என்ன மரியாதை னு நமக்கு தெரியாதா ; பல்லைக்கடிச்சுக்கிட்டு ஒரு நாளும் திருடக்கூடாதுங்கறதுல ரொம்ப கவனமா இருந்தேன் . அப்ப சினிமா தியேட்டர்லாம் ஸ்ட்ரைக் -ஏதோ வரி அதிகம் போடறாங்க னு . SO , போஸ்டர் ஒட்டற வேலையில மண்ணு . போஸ்டர் இல்லாட்டியும் வயிறு இருக்குதே. ஒரு 2 நாள் பஸ்டாண்ட் ல மூட்ட தூக்க போனேன் ஒரு 10, 10 ரூவா கெடச்சுது ஆனா பெரிய போர்ட்டரெல்லாம் போடா இங்க வராதே னு விரட்டி அடிச்சாங்க. 3 வது நாள் போஸ்டரும் இல்ல மூட்டையும் இல்ல   கொடூர பசி 11.00 மணி இருக்கும் .ரயில்வே ஜங்க்ஷன்ல மூட்டை தூக்கலாமா னு போனேன் ,அது பஸ் ஸ்டாண்டை விட மோசம் லைசென்ஸ் எடுக்கணுமாம் 18 வயசுக்கு மேல இருக்கணுமாம் . ஒன்னும் சரியில்ல. டீஸ்டால் ல ஒரு பணக்காரர் டீ சாப்பிட்டுக்கிட்டு இருந்தார் . பசி பொறுக்காம சார் ஒரு டீ வாங்கித்தாங்க னு கேட்டேன் . அவருக்கு ரொம்ப கோபம் வந்து பூட்ஸ் காலைத்தூக்கி மூஞ்சில உதைச்சார் , நான் ஒரு அடி  பின் வாங்கிக்கிட்டேன் , முகம் தப்பிச்சது. அவ்வளவு தான்  சார் சண்ட மாருதம் மாதிரி வந்தார் சார்.

தொடரும்    அன்பன் ராமன்

1 comment:

  1. அப்புறம் என்ன ஆச்சு,
    சுப்பிரமணிக்கு?
    சஸ்பென்ஸ் தாங்க முடியல!
    😀😀

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...