Saturday, May 20, 2023

SAMIs COME TOGETHER-33

 SAMIs COME TOGETHER-33

சாமிகள் சங்கமம் -33 

பிரேமா .-கௌரி உரையாடல் தொடர்கிறது

மனப்பாடம் செய்வது --அது கடன் வாங்கி வாழ்வதை விட ஆபத்தானது.. எனவே நினைவாற்றலை மேம்படுத்தினால் வீட்டில் வளரும் நாய் போல நம் மையே சுற்றி சுற்றி வரும் வேறு எங்கும் ஓடி விடாது.மனப்பாடம் அப்படி அல்ல திருட வந்த குரங்கு போல ஓடி மறைந்து மறந்து விடும்.;இதை உணர்ந்து மனதில் இருத்திக்கொள் என்று உணர்த்தினார் பிரேமா .

மனப்பாடம் செய்தல் கையால் ஆகாதவர்கள் எடுக்கும் முனை மழுங்கிய ஆயுதம் அவசரத்திற்கு பயன் படாது. மனப்பாட கட வித்துவான்கள் ,எளிதாக மார்க் வாங்கி விட்டதாக உவகை கொள்வார்கள் . INTRICATE QUESTIONING , CLOSE SCRUTINY, LOGICAL DEDUCTION , CONCEPT  CONSOLIDATION  போன்ற நுணுக்கமான அறிவுசார் புள்ளிகளில் ஆந்தைகளை விட கோரமாக விழிப்பார்கள்.

2000 / 2000 மார்க் வாங்கி விட்டு B .TECH முதல் செமெஸ்டரில் 3 பேப்பரில் FAIL ஆவதெல்லாம் இந்த கடவித்துவான்கள் தான் . எப்படி படிக்க வேண்டும் என்பதை விடுத்து மார்க் மார்க் என்று அலைந்து இறுதியில் AGMARK மடையர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அதனால் மனப்பாடம் என்பது மரண ப்பாதை என்று உணர்ந்துகொள் என்றார் பிரேமா

அடுத்த முறை நான் வரும் போது ஒரு நல்ல Thesaurus வாங்கி சொல்லித்தருகிறேன் அது வரை சொன்னவை கவனம்” என்றார் பிரேமா மேடம்  thesaurus திருச்சியில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளவா என்று கேட்டாள் கௌரி. உடனே பிரேமா சொன்னார் "புக் ஷாப் ல thesaurus -english -english -tamil காமாட்சி, மீனாக்ஷி, நடராஜன் , சுந்தரேசன் னு தலைக்கு தலை அச்சடிச்சு வித்துக்கிட்டு இருப்பாங்க அது கிட்டையெல்லாம் போயிடாத

ஹௌ வ் டு ரைட் என்று தமிழில் கேட்டு

TO WRITE YOU HAVE TO WRITE 'RIGHT'  என்று  எழுதி சொல் விளையாட்டு காட்டிக்கொண்டு இருப்பார்கள். உண்மையான THESAURUS என்பது TWO -WAY TRANSACTION MEDIUM ; அதாவது சொல்லுக்கு பொருள் தருவது DICTIONARY ;அதே போல தெரிந்த பொருளுக்கு பொருத்தமான சொல் அளிப்பது THESAURUS என்று பொதுவாக சொல்லலாம்.

இந்தக்கவலையெல்லாம் தேவையில்லை. மேடத்துகிட்ட "எனக்கு ஒரு நல்ல THESAURUS வேணும் மேடம் னு சொல்லு .A-CLASS PUBLISHERS இடம் சொல்லி அருமையான மேட்டரில் வாங்கி தந்துருவாங்க .ஆனா லேசா கிண்டல் பண்ணுவாங்க --"என்ன பெரிய இங்கிலிஷ் புலவர் ஆயாச்சு , DICTIONARY எல்லாம் கரை கண்டாச்சு அடுத்தது இது --ம்ம்பாங்க ; பதில் பேசாம இருந்தா  THESAURUS வந்துரும் -குறைந்த விலையிலேயே ! .

நான் சொன்னே ன்னு சொல்லாம கேளு . ஜமாய் குட் லக் வாழ்த்துகள் என்று விடை அளித்தார் பிரேமா மேடம்.

தொடரும் அன்பன் ராமன்

2 comments:

  1. நாங்கள் படிக்கும் காலத்தில் கடம் அடித்தல் என்றால் புரியாமல் மனப்பாடம் செய்வதைக்குறிக்கும்
    இப்போது அந்த வார்த்தை பிரயோகத்தில் இல்லை
    Venkataraman

    ReplyDelete
  2. பொருளறிந்து கற்றல்-வளர்ப்பு நாய்
    மனப்பாடம்/கடம்- குரங்கு
    நல்ல உதாரணம்.
    Dictionary and Thesaurus in
    Prema and Gowri உரையாடல் ஆங்கிலம் கற்கும் அனைவருக்கும் உதவும்
    எனக்கு ஒரு நண்பர் Dictionary, Spelling, Thesaurus அடங்கிய புத்தக தொகுப்பை compliment ஆக வழங்கியிருந்தார்.
    Compliment என்பதற்கு எனக்கு தெரிந்தது சுமார் நான்கு அல்லது ஐந்து thesaurus வார்த்தைகளே . ஆனால்
    அந்த புத்தகத்தில் இருபதுக்கும் மேல் இருப்பது கண்டு வியந்தேன்
    (From the one has sprung into activity from
    dormant state 😄😄)

    ReplyDelete

PATTU IYENGAR –THE LYRICIST-3

  PATTU IYENGAR –THE LYRICIST-3 பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார் -3 கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை   டேபி...