Friday, May 19, 2023

Rengaa rengaa -32

 Rengaa rengaa -32

ரெங்கா ரெங்கா -32

இரண்டு நாளில் மீண்டும் போன் ரெ விடமிருந்து ராமசாமிக்கு. ஏம்பா பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டியா என்றார் ரா சா .சார் அதுக்கு தான் பேசலாம் னு கூப்பிட்டேன் ,சரி என்ன சொல்லு என்றார் ரா சா. இல்ல எந்த பேங்க் கணக்கு வெக்கலாம் அது சீரங்கத்துலயும் இருக்கற பாங்கா இருந்தா நல்லது னு சொன்னீங்க அதுக்கு தான் கேக்கறேன். சிம்பிள் ஒண்ணு சொல்றேன் கேள் . கவலைப்படாம STATE BANK OF INDIA அக்கௌன்ட் ஆரம்பி ,இந்தியாவுல எல்லா ஊர்லயும் நிச்சயம் SBI இருக்கும். நீ வேற ஊருக்கு போகும்படி ஆனாலும் கவலை இல்ல -அதுனால SBI தான் பெட்டர் என்றார் ராமசாமி . வேற ஊருக்கு போக சொல்லிடுவாங்களா சார் என்றான் ரெ . அப்பிடி நன் சொல்லல போக வேண்டி வந்தாலும் ஒண்ணும் கவலை இல்ல. இப்படி சொல்லிக்கொண்டிருந்த ரா சா க்கு கவலை கேள்வியாக பறந்தது. டேய் போன் வாங்கியாச்சு அண்ணா நகர் , ஓரப்படி ஒண்ணறைப்படி னு ஏதாவது பேச ஆரம்பிச்சுடுவாயோ னு கேக்கிறேன். சார் மாட்டேன் சார். நான் முன்னால சொன்னேன் ஏன்னா எங்களுக்கு னு சொந்தக்காராளே இல்லை இவா  மட்டும் தானே இருக்கா னு நெனச்சேன், ஆனா சீரங்கத்துலயே 2 நாள் இருந்து எங்களை பாக்காம போய்ட்டாங்க னு  தெரிஞ்சப்புறம் நான் ஏன் சார் பேசணும் இல்ல போகணும்? எனக்கும் கொஞ்சம் கௌரவம் இருக்கு சார் அதுவும் கே சார் மாடசாமி சார் நீங்க கேப்ரியல் சார் , வேதாந்தம் சார்னு பெரிய மனிதர்கள் எனக்காக மெனக்கிடும் போது இனிமே இவர்களெல்லாம் நெனச்சுக்கூட பாக்க க்கூடாது னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன் சார். ராமசாமி அழாக்குறையாக டேய் மாடசாமி இப்பிடியே தாண்டா சொன்னான்நம்ப பையன் தப்புப்பண்ண-மாட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு அவன் அவ்வளவு அடிச்சு பேசினான்  நானே கொஞ்சமும் நினைக்கலே உன்னை பத்தி பக்காவா சொன்னான்.  நீ பாரு அவன் ஆபீசர் மாதிரி நடந்துப்பான்னுஎன்று வியந்தார் ராமசாமி . இப்போது ரெ சொன்னான் மாடசாமி சார் பயங்கர அனுபவசாலி, நேர்மையும் நெஞ்சுரமும் -அவர் ஒரு பாரதியார் சார். உங்க தயவால அவர் நட்பு கெடச்சது . கே சார் சொல்றார் மாடசாமி மாதிரி எல்லாரும் இருந்தா இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும் னு அவ்வளவு பேர் வாங்கி இருக்கார் சார்

அவ்வளவு ஏன் சார் , அந்த ஆந்திரா TTE ராகவலு , மாடசாமி சார் சொன்ன வார்த்தைக்கு எனக்கு குன்டூர்ல ரூம் ஏற்பாடு பண்ணி , சுப்பிரமணி கிட்ட சொல்லி இவருக்கு பால் வாங்கி கொடுன்னு பணம் குடுத்துட்டு போயிருந்தார் சார் . இவ்வளவு நல்லவா இருக்கறதுனால தான் சார் மழை பெய்யுது .அடுத்த தரம் சந்திப்போம் என்றான் ரெ . டேய் அடுத்த தடவை ரெண்டாவது சம்பளம் வாங்கியிருப்ப அதுனால நம்ப பிரிஎண்ட்ஸ் க்கு பார்ட்டி குடு. கேப்ரியல்   மறந்து விட்டுடாத , ரொம்ப நல்ல மனுஷன் ;அப்புறம் அந்த செல்லத்துரை யோட பையனுக்கு ரயில்வே ஸ்கூல் சீ ட் வாங்கியாச்சு கேப்ரியல் நெறையா ஹெல்ப் பண்ணினார் .நான் எதிர்பார்த்ததை விட ரொம்பவே ஹெல்ப் பண்ணினார்.                  .4 மோசமானவங்களப்பாத்து உலகமே மோசம் னு நினைக்கிறோம் ஆனா கண்ணுக்குத்தெரியாம நல்லவங்க இருக்கத்தான் இருக்காங்க , நம்ம தான் ஒழுங்கா நடந்துக்கணும் என்றார் ராம சாமி. ஆமாம் சார் சில பேர் தப்பு பண்றாங்க , தப்பு பண்ணாதவங்கள நம்ம நினைக்கறதே இல்லை . என்று முடித்தான் கஸ்தூரிரெங்கன் .

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...