Friday, May 19, 2023

SAMIs COME TOGETHER-32

 SAMIs COME TOGETHER-32

சாமிகள் சங்கமம் -32

பிரேமாவின் சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்ட கௌரி , ஏதோ நேர்த்திக்கடன் ஈடேற்றுபவள் போல் மிகுந்த பக்தியுடன் மானசீகமாக பிரேமாவை ஒரு கடவுள் அந்தஸ்தில் இருத்தி வணங்கி ஆங்கில பயிற்சிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு கிட்டத்தட்ட இனி ஆங்கிலம் ஒரு பொருட்டல்ல எனும் "ஆனாசாய" நிலையை  எட்டிவிட்டாள் ;ஆனால் ஒரு சிறு இடையூறு , இவற்றை எப்படி மறவாமல் நினைவில் கொள்வது என்ற செய் முறை பலவீனம். பிறகென்ன? பிரேமா மேடத்துக்கு ஒரு போன் இரவு 8.30 மணிக்கு . தனது உண்மையான குழப்பம் என்று தயங்காமல் சொல்லி தீர்வு கேட்டாள் கௌரி. ஒரே வினாடியில் பதில் வந்தது ;கற்றலை  விட நிற்றல் அவசியம். நிற்றல் 2 வகை கொண்டது. 1. ஒன்று நம் மனதில் நிற்பது  2 கற்றதன் படி நாம் நிற்பது , இவ்விரண்டும் இல்லையெனில் கற்பது வீண். இதற்கு நெறிப்படுத்திட்டுக்கொள்ள 2 வழிகள்  ஒன்று நம்மை விட மொழி ஆற்றல் மிக்கவர்களுடன் தொடர்ந்து கற்ற மொழியில் உரையாடிக்கொண்டே இருப்பது 2. அவர்கள் எவர் என்று தேடிக்கொண்டிருப்பதில் பாதி சொற்கள் மறந்து விடும் . எனவே சொல், பொருள் , USE எனும் பிரயோகம் என்று பேப்பரில் எழுதி எழுதி தலையில் இண்டு இடுக்கில் என்று எல்லா இடத்திலும் சொருகிக்கொள் . 2 மாதத்தில் நம் தலையில் இவ்வளவு இடம் இருந்ததா என்று வியக்கும் அளவுக்கு உனது நினைவாற்றல் விசாலப்பட்டுக்கொண்டே மேலும் மேலும் ஆர்வத்தை தூண்டும். அந்த  நிலையை நீ எட்டிப்பிடித்ததும் இந்த பிரேமா என்ன அந்த சுபத்ரா மேடமும் உன் பின்னால் நிற்க வேண்டிய நிலை வரும் என்றாள் பிரேமா .

ஐயோ அந்த மாதிரி எண்ணம் வந்தா யாரும் முன்னேறவோ உருப்படவோ முடியாது ;அந்த மாதிரி நன்றி இல்லாம முன்னேறுவதை விட முட்டாளாகவே இருந்துடலாம் மேடம்   என்று குரல் கம்மி போனிலேயே அழுது விட்டாள் கௌரி.

 நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பிரேமா , இதை செய் என்று உன்னை தவறான வழியில் போகச்சொல்லவில்லை ;ஆசான்களை முந்தி முன்னேறுவதும் சாத்தியமே என்று தான் சொன்னேன் ச்சீ அழாதே என்று கௌரியை எளிதாக இயல்புநிலைக்கு கொண்டுவந்து பிரேமா சொன்னார் "எக்காரணம் கொண்டும் மனப்பாடம் செய்யாதே.

தொடரும் அன்பன் ராமன்

 

1 comment:

  1. சொல் ,பொருள்,use Good way to improve memory power

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...