Friday, May 19, 2023

RENGAA RENGAA -31

 RENGAA RENGAA -31

ரெங்கா ரெங்கா -31

சிறிது நேரத்தில் ராமசாமி, செல்லத்துரை கேப்ரியல் ஆட்டோ வில் வந்து இறங்க செல்லத்துரை ஆட்டோவுக்கு பணம் தர முயன்ற வுடன் நீங்க போங்கோ நான் ஆட்டோக்கி தரேன் POOR  MAN , LOW-PAID EMPLOYEE  ஹஹ் ஹா ஹஹ் ஹா என்று சிரித்தார். ரொம்ப நன்றிங்க இவ்வளவு சுளுவா பையனுக்கு  இடம் புடிச்சு தருவீங்க னு நான் நினைக்கவே இல்லீங்க ;அன்னைக்கு அய்யா வூட்ல பேப்பர் கொண்டாந்தப்ப கோயிலுக்கு போற என்னையும் கூடவே கூட்டிக்கிட்டு போய் சாமி கும்பிட வெச்சதுமே எனக்கு ஒரு எண்ணம் ஆபத்துக்கு உதவுவாங்க னு நெனச்சேன் .அதுக்கு நல்ல பலன் கெடச்சிருச்சு . நான் பையன ஒழுங்கா நடந்துக்கிட்டு நல்லா படிடா னு அறிவு சொல்றேனுங்க .பெரிய மனுசாள் தொடங்கி வெச்ச எதுவும் வீணாகாதுங்க . அந்த டீச்சர் அம்மாவும் நல்ல தெறமையானவுங்க னு நம்ம காங்கி ஆளுக பூராவுமே சொல்றாங்க. ரொம்ப நன்றிங்க என்று வணங்கி விடை பெற்றார்.

மா சா, ரா சா வை வெளியே இரு வருகிறேன் என்று சொல்லி விட்டு ரெ போனில் நலம் விசாரித்ததை           கேப்ரியலிடம் சொன்னதும் ஹஹ் ஹா ஹஹ் ஹா ஹஹ் ஹா என்று சிரித்துவிட்டு , குண்டூர் பையா ஸ்மார்ட் BOY மேன் அவன் அல்லார்க்கும் BALANCE  பண்ணுவான் மேன் .அவனுக்கி தேங்க்ஸ் சொல்லு என்று சொன்னார் கேப்ரியல்.

குண்டூர் ஆபிசில் நடந்த வற்றை ரெ சொன்னவாறே விளக்கமாக சொல்லி , கே கில்லாடி ஆபிசர் னு சொன்னேன்ல அதே மாதிரி வம்பு பண்ணினவுகளை நார் நாரா கிழிச்சுப்பிட்டாராம் , நம்ப பையன் சொல்லச்சொன்னார் உன்கிட்ட என்றார் மாசா.

நேத்து என்கிட்டே சொல்லலியே என்றார் ரா சா . அதுனாலதான் நீங்க சொல்லிடுங்க னு என்கிட்டே காலைல சொன்னார் --ங்கறேன் , புரியுதா  என்றார் மாடசாமி . சரி சரி என்றார் ரா சா . இப்ப புது போன் வாங்கிட்டான் அதுல தான் நேத்து பேசினான்.என்றார் ரா சா

 வருமானம் வருதில்ல படிப்படியா தேவையானதை எல்லாம் வாங்கிக்க வேண்டியது தான் என்றார் மா சா. அது சரி கண்டதையும் வாங்காம இருந்தா சரி என்றார் ராமசாமி.

நீ ஒண்ணு , அவன் பயங்கர கில்லாடி அதெல்லாம் 5 பைசா வேஸ்ட் பண்ணாம இருப்பான். நீ வேணும்னா பாரு என்றார் மா  சா   .

இருப்பாஆஆன் --ராசா                   ஏண் டா இழுக்கற என்றார் மா  சா 

அதுவா? எங்கயாவது அப்பாடா கண் காணாம இருக்கோம் னு அண்ணா நகருக்கு போனை போட்டு --- ராசா 

மா சா --போனை போட்டு --- டூயட் பாடிருவானா ? அதெல்லாம் செய்ய மாட்டாண்டா , டேய் இப்ப இவன் கைல சில்லறை வந்தாச்சுல்ல இனிமே - போடீ ன்ட்டு போயிருவான், நீ கவலையே படாதே .உன் பேச்சுக்கு மரியாதை வெச்சு அம்மாவுக்கு 4000/-ரூவா தந்துட்டு போயிருக்கான், கேப்ரியல் 3 000/-குடு னு சொன்னார் ஆனா நீ சொன்னபடி செஞ்சான் , அதுனால ஏதோ அண்ணா நகர்னு கிளம்பிடுவானோ னு நீ நடுங்கற.

 அன்னக்கி சும்மா அண்ணா நகர்னு முணுமுணுத்ததுக்கு அவனை குரல்வளையை நெரிக்கற மாதிரி நீ நரசிம்மவதாரம் எடுத்து அடையாரே கிடுகிடுன்னு ஆடுனத எனக்கே மறக்கல அவனுக்கு மறந்துருமா இல் லை அவன் அதோட போறவனா நாளை பின்ன நம்மகிட்ட வரத்தாண்டா  வேணும் , அவன் நம்ப பையன் டா      ஒருத்தன் எப்பவுமே  தப்புதான் பண்ணுவான் னு நினைக்காதே  

நீ கெட்டிக்காரன்தான் ஆனா நான் ட்ரைன்ல யே  சுத்தி சுத்தி எவன் எப்ப என்ன பண்ணுவான் னு நல்லா புரிஞ்சுப்பேன் அதுனாலதான்  சொல்றேன் அவன் இனிமே ஆபிசர் மாதிரி behave பண்ணுவான் பாரு,: அவன் பஞ்சாபகேசன் சிஷ்யன் டா , பழைய நிலைக்கு அவன் திரும்ப மாட்டான் நீ பாரேன் அவன் சக்க போடு போடுவாண்டா -எழுதி வெச்சுக்க இந்த மீசைக்காரன் அப்பவே சொன்னானே னு நீ நெனைக்கற காலம் சீக்கிரமே வரும் கவலைய விடு றா நம்ம ஆள் ஒருத்தன் பட்டைய கிளப்ப போறான் அப்ப பேசுவோம் , சந்தோஷமா இருடா இனிமே அவனை எவனாலயும் பிடிக்க முடியாதுடா ரொம்ப நல்ல வெள்ளை  மனசுக்காரன் டா தப்புப்பண்ணை மாட்டான் என்றார் மாடசாமி நீர் நிறைந்த கண்களுடன் ,

ராமசாமிக்கு ஆனந்தக்கண்ணீர் , இருவரும் கலங்கிய கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேசாமறந்து நின்று பின்னர் அலுவலகப்பணிக்கு திரும்பினார்

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...