Friday, May 19, 2023

SAMIs COME TOGETHER -31

 SAMIs COME TOGETHER -31

சாமிகள் சங்கமம்-31

சில புரியாத புதிர்களில் இந்த சாரதாவும் ஒன்று. எல்லா திறமையும், எளிதாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் உள்ளவள் ஆனா இந்த சாரதா   இங்கிலீஷ க்கண்டா ஏதோ கோவில் மாட்டை பார்த்தது மாதிரி ஓரமா ஒதுங்கிப்போவா இல்லேன்னா பதுங்கி பதுங்கி , கூட வர வங்களையும் பயங்காட்டுவா . அது ஒண்ணுதான் எனக்கு அவகிட்ட பிடிக்காதது , மிச்ச்கப்படி நல்ல இன்டெலிஜெண்ட் , ஹெல்பிங் டென்டென்சி எல்லாம் உண்டு , எல்லாரையும் டாமினேட் பண்ணனும் னு நெனப்பா . நான் போடீன்றுவேன் ,அதுனால எங்கிட்ட பயப்படுவா ஆனா கொஞ்சம் இடம் கெடச்சா குதிரையேறுவா; அடிக்கடி மேடத்துகிட்ட கடி வாங்கி  3 நாளைக்கு மௌன விரதம் மாதிரி கம்முனு இருப்பா ;அப்புறம் நான் தான் அவளை நீயா வலிய போய்  திட்டு வாங்கிட்டு , திட்றாங்க னு பொலம்புறது சரியில்ல னு அவளை நார்மலுக்கு கொண்டு வருவேன். சரி இத்தனை சொன்னே  னே அதை சுருக்கமா இங்கிலிஷ்  சொல்லு..

கௌரி : "HOW WE LEARN IS MORE  IMPORTANT THAN WHERE WE LEARN " என்றதும் பிரேமா ஒரு திருத்தம் செய்தாள் ; அதாவது WHERE WE LEARN FROM என்பது முழுமையை காட்டுவது . லேர்ன் அண்ட் லேர்ன் from இரண்டையும் ஆழ்ந்து கவனி from என்பது நமக்கு யார் கற்றுத்தந்தார்கள் என்பதையும் உணர்த்துகிறது. . மேலும் கௌரி சொன்னாள் "சாரதா மேடம் இஸ் இன்டெலிஜென்ட் and fond of frightening others என்று அழகாக வருணித்தாள் . பிரேமா "பார்த்தாயா எவ்வளவு ஈஸியா பேசற ; இதைவிட ஈஸியா இன்னும் நல்லா கத்துக்கலாம் என்று ஊக்கம் சொன்னாள் . கௌரி மகிழ்ந்தாள் .

பிரேமா மனதில் இவளை சூப்பர் லெவல் லுக்கு கொண்டு போகணும் ; மேடத்தின் காதுல போட்டுடறேன் அவங்க இவள சரியான பந்தயக்குதிரையா மாத்திருவாங்க என்று மனதில் முடிவெடுத்து விட்டு, கௌரியிடம் தினமும் ரெண்டு தடவை வா கத்துத்த றேன் என்றாள் பிரேமா.

கௌரி மனதிற்குள் "மாரியம்மா எவ்வளவு நல்ல எடத்துல என்ன கொண்டுவந்து நிறுத்தி இருக்க , உனக்கு கோடானு கோடி  வந்தனம் என்று வணங்கி , we 'll meet tomorrow என்று பிரேமாவிடம் சொல்லி கைகுலுக்கி விடை பெற்றாள் . பிரேமா மனதில் நினைத்தாள் "இது நிச்சயம் பந்தயக்குதிரையே தான், மேடத்துக்கு இன்னும் புகழ் வாங்கிக்கொடுக்கும் , கொடுக்கணும் "என்று மனதார வாழ்த்தினாள் பிரேமா ஒரு செயல் வீராங்கனை ; உடனே மேடத்திடம் பேசி , கௌரி விரைவாகக்கற்றுக்கொள்கிறாள் ஆனால் அதிக அனுபவம் இல்லாததால் தயக்கம் இருக்கிறது நீங்க மனசு வெச்சா அவளை நல்ல ரேஸ் குதிரையா மாத்தி பெரிய சாதனையே பண்ணிடுவீ ங்க கொஞ்சம் மனசு வெய்யுங்க மேடம் என்று கௌரிக்காக வாதாடினாள் . கௌரி அப்பிடி உன் உள்ளத்தை க்கொள்ளை கொண்டுட்டாளா என்று சீண்டினார் மேடம் . இவளை ரொம்ப ஈசியா உயரம் தொட வெக்கலாம் , இந்த 19-20 நாள் எவ்வளவு பிக் -அப் பண்ணியிருக்கா தெரியுமா? நெஜம்மா இந்த மாதிரி பசங்க படிக்க வராதா னு எல்லா டிபாட்மெண்ட்லயும் ஒரு ஏக்கம் இருக்குனு உங்களுக்கே தெரியுமே மேடம்.. அந்த ஏக்கத்துக்கு சரியான விடையா இருப்பா இவ என்றாள் பிரேமா.  . அப்பிடியா சொல்ற அவ ஸ்லோவா இருப்பாளோ னு நெனச்சேன் , நீ சொல்றதைப்பார்த்தா IMMENSE POTENTIAL னு தெரியுது. அப்ப நீ கவலையை விடு அவளை சூப்பரா தயார் பண்ணி எல்லா ப்ரோக்ராம் லியும் ஈடுபடுத்தி நல்லா ஜொலிக்கவெச்சுரலாம் மாரியம்மன் கொஞ்சம் கண்ணத்தெறந்தா போதும் என்றார் மேடம்.

மேடம் உங்கள மாதிரியே அவளும் ஒரு மாரியம்மா பக்தை , WELL  MANNERED ASSET  TO  YOUR DEPARTMENT , அடுத்த ரெண்டு வருஷத்துக்கும் ஆல் இண்டியா மீட் மேடம் அண்ட் கோ தான் என்று ஆருடம் சொன்னாள் பிரேமா .

அப்ப கௌரி நல்ல சாய்ஸ் ங்கிற என்றார் மேடம் . OBVIOUSLY and  UNDOUBTEDLY என்று ஆணித்தரமாக சொன்னாள்  பிரேமா. . OK மேடம் நாளை மறுநாள் ஊருக்கு போகிறேன் அப்புறம் பேசறேன் கௌரி மேட்டர் நினைவுல வெச்சுக்குங்க என்று பரிந்துரைத்தாள் . மேடம் உள்ளூர மகிழ்ந்தாள் , எனக்கென்ன னு போகாம எவ்வளவு அழுத்தமா கௌரிக்கு உதவி செய்யணும் னு மனசு வெக்கறா . GREAT . நானும் நல்ல ஸ்டூடெண்ட்ஸ தான் உருவாக்கி இருக்கிறேன் போலிருக்கு , எல்லாம் மாரியம்மா ஆசி என்று சுய விமரிசனம் செய்து கொண்டாள்

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...