Thursday, May 18, 2023

RENGAA RENGAA -- 30

 RENGAA RENGAA -- 30

ரெங்கா ரெங்கா -30

சொன்னபடி காலை 8.00 மணிக்கு மாடசாமி க்கு போன் செய்தான் ரெ . ஹலோ யாரு என்றார் மாசா. சார் கஸ்தூரீரெங்கன் பேசறேன் சவுக்கியமா என்றான். ஓஒ தம்பி நீங்களா நல்ல இருக்கீங்களா ?இங்க ஊருக்கு வந்திருக்கீங்களா நல்லா இருக்கீங்கல்ல என்று நலம் விசாரித்தார் மா சா. வேலைல நல்ல கவனமா இருங்க, ட்ரெயினிங் லேயே எவ்வளவு தெரிஞ்சுக்க முடியுமோ ஒன்னு விடாம கத்துக்குங்க ; இப்ப சந்தேகம் கேட்டா சொல்லித்தருவாங்க வேலை னு போய் உக்காந்துட்டா சந்தேகம் கேட்டா மரியாதை இல்லாம உன்னை யார் வேலைல சேர்த்தாங்க அது இது னு என்னமோ எல்லாம் தெரிஞ்சவுனுக மாதிரி ரொம்ப பேசுவானுக. நான் சொல்லி தெரிஞ்சுக்க வேண்டியவங்க இல்ல நீங்க --ஆனாலும் சொல்றேன் வேலைல நேர்மையாவும் , கை சுத்தமாகவும் இருந்துட்டா எந்த கொம்பனாலயும் ஒன்னும் பண்ண முடியாது. உங்க பஞ்சாபகேசன் சார் மாதிரி ஆளுங்க கிட்ட ட்ரைனிங் எடுத்தா வேற எதுவுமே வேண்டியிருக்காது .

அப்போது ரெ-- 3 நாள் முன்பு ஒருத்தன் பஞ்சாப கேசன் சார் மேல ஊழல் பண்றார் னு புகார் குடுத்துட்டான். விசாரணை நடந்து எங்களுக்கெல்லாம் கூ பரீட்சை வெச்சு ஒரு ஊழலும் இல்லை னு நிரூபிச்சுட்டார் சார். ஆனா பாவம் அந்த புகார் குடுத்தவனை கொடஞ்சு எடுத்துட்டாங்க ;அதைவிட செக்ஷன் ஆளுங்க மொத்தமா வந்து அடிச்சு அவனை நார் நாரா கிழிச்சுட்டாங்க, மூக்கு மண்டையெல்லாம் ரத்தம். இவனை எந்த டிவிஷன் லுயும்  தேர்வுக்கு கூட அனுமதிக்காதீங்க னு விசாரணை அதிகாரிங்க மேலிடத்துக்கு ரெகமெண்ட் பண்ணியிருக்காங்க .இப்ப பேசவே எல்லாரும் நடுங்கறாங்க -ஒரே களேபரம் சார். நேத்து ராமசாமி சார்கிட்ட பேசினேன் இவ்வளவும் சொல்ல முடியல நீங்க டைம் கிடைக்கும்போது சார்கிட்ட சொல்லுங்க . ரொம்ப தேங்க்ஸ் சார் என்றான் கஸ்தூரிரெங்கன்.

சொல்றேன் ஆங் இப்ப கொஞ்சம் முன்னால ராமசாமி, கேப்ரியல், செல்லத்துரை 3 பேரும் ஆட்டோ செல்லத்துரை பையனுக்கு ஸ்கூல் சேக்க form , பீஸ் , போட்டோ எல்லாம் கொண்டு போனாங்க அவங்க வந்ததும் சொல்லிடறேன் என்றார் மாடசாமி.

சார் கேப்ரியல் சாரை யும் நான் விசாரித்ததாக சொல்லுங்கோ எவ்வளவு ஹெல்ப் பண்ணிருக்கீங்க எல்லாரும் என்று நன்றிப்பெருக்குடன் பேசினான். இதெல்லாம் ஒண்ணுமே இல்ல தம்பி , உங்கள பஞ்சாபகேசன் சார் குண்டூர் டிவிஷனுக்கு சேத்துக்கிட்டார் பாருங்க அது ரொம்ப பெரிய ஹெல்ப் , முழு ட்ரெயினிங் முடிங்க இங்க வாங்க அங்க வாங்க னு எல்லா டிவிஷன் லியும் கூப்பிடுவாங்க , ஆனா பஞ்சாபகேசன் சார் பார்த்து என்ன சொல்றாரோ அதுபடி செய்ங்க ;ஏன்னா பணத்தை நல்ல தின்னுட்டு அக்கவு ண்ட்ல அப்பிடி எழுதி இப்பிடி எழுதி னு உங்கள ஊழல் பண்ண சொல்வானுங்க . அதுக்கு தான் சொல்றேன் பஞ்சாபகேசன் சாரை கெட்டியா பிடிச்சுக்குங்க . தம்பி நாம நேர்மையா வேலை செய்யறது பெரிசில்லை , நம்ம மேலதிகாரிங்க நல்லவுங்களா இல்லாம இருந்தா அதை விட பெரிய டார்ச்சர் எதுவுமே இல்லை. . ஆனா ஒண்ணு இவன் ஊழலே பண்ண மாட்டான்னு ஒரு பேரை நீங்க உண்டாக்கிக்கிட்டீங்கன்னா மேலதிகாரிங்க உங்கள ரொம்ப மரியாதையா நடத்துவாங்க. ஊழல் மேலதிகாரிங்க உங்க பக்கமே வர மாட்டானுங்க முடிஞ்சா இடைஞ்சல் பண்ணப்பாப்பாங்க. ஆனா நீங்க . கே சார் உதவில எங்கயாவது டிவிஷன் ஹெட் ஆபிஸ் நுழைஞ்சுட்டீகன்னா , சகலத்தையும் பொத்திக்கிட்டு உங்களுக்கு கூழை  கும்பிடு போட்டு  ஹி ஹி  ஹி ஹி -பாத்து பேப்பரை க்ளியர் பண்ணிருங்க சார் னு சொல்லிக்கிட்டே டேபிள் க்கு கீழே 500/- 1000/-னு நோட்டை நீட்டுவானுங்க -எப்ப தெரியுமா ? லஞ்ச் அவர் பிரேக் , இல்லைன்னா  ஹி ஹி வாங்க காபி சாப்புடுவோம்னு குழையுவானுங்க .ரொம்ப கவனமா இருக்கணும் . ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் தப்புன்னா மன்னிச்சுக்குங்க என்றார் மாடசாமி . ஐயோ என்ன சார் நான் ரொம்ப சின்னவன் சார். உங்க அனுபவம் நான் எட்டிப்பிடிக்க எவ்வளவு காலம் ஆகும் ஆனா ஊழல் பேர்வழிங்க கிட்ட எப்பிடி நடந்துக்கணும் னு இதை விட யார் சார் சொல்லித்தருவங்க ரொம்ப நன்றி சார் அப்பப்ப பேசறேன் சார் என்று விடை பெற்றான்.

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...