Wednesday, May 17, 2023

SAMIs COME TOGETHER-30

 SAMIs COME TOGETHER-30

சாமிகள் சங்கமம் -30

கௌரிக்கு , பிரேமா ஆங்கில இலக்கணத்தின் நெளிவு சுளிவுகளை மிக எளிதாக விளக்கினாள் . சில பகுதிகளை சோதித்த போது , கௌரி மிக்க அக்கறையுடன் கேட்டு புரிந்துகொள்கிறாள் என்பதை புரிந்துகொண்டபிரேமா ,இவளை மிகச்சிறப்பாக தயார் செய்யவேண்டும் என்று தீர்மானித்தாள் . எனவே  " கௌரி மீதி இன்னும் 13 நாள் இருக்கு நீ சாயங்காலமும் வந்தா இன்னும் வேகமா சொல்லித்தரமுடியும் என்ன சொல்ற? என்றாள் பிரேமா . உள்ளம் குதூகலிக்க கௌரி சரி அக்கா என்று சொன்ன மறுவினாடியே சாரி வாய் தவறி அக்கானு சொல்லிட்டேன் மன்னிச்சுக்குங்க என்று நமஸ்கரித்து விட்டு தொடர்ந்து சொன்னாள் " ஒழுங்கா பேச கத்துக்காம வளந்துட்டேன் , பழக்க தோஷத்துல "அக்கானு " வந்திடுது . இதை எப்படியாவது சரிப்படுத்தலேன்னா என்னைக்காவது HOD மேடத்தையும் "அக்கா" னு சொல்லி பெரிய சிக்கல் வந்துருமோ னு பயமா இருக்கு. மன்னிச்சுக்குங்க மேடம் என்று கெஞ்சினாள்..

மிகுந்த பண்புள்ளவள் கௌரி என புரிந்துகொண்டாள் பிரேமா

பிரேமா ஒரு வழிமுறை சொன்னாள். இங்க பாரு, எதையும் பேசும் முன் நீ சொல்ல நினைப்பதை ஆங்கிலத்தில் சொல்வது எப்படி என்று மனதில் உருவாக்கிக்கொள் அதை அப்படியே இலக்கண மரபுடன் இருக்கிறதா என்று சரிபார்த்து , சரியான அமைப்பில் பேசி விடு,. இதை ஒரு 4 நாள் செய்து பார் , ஆங்கிலம் அலறிக்கொண்டு "கூப்பிட்டீங்களா அக்கா " என்று உன் காலடியில் கிடக்கும் , உன் தேவைக்கு வெகு எளிதாக வசப்படும் என்று ஊக்கம் தெரிவித்தாள் . கௌரிக்கு தாங்க முடியாத சிரிப்பு வந்து புரை ஏறிவிட்டது , இருமல் இடை விடாது கிளம்பியது. ஓடிப்போய் குளிர்ந்த நீர் தந்து மூக்கை அழுத்தி மூடிக்கொண்டு நீர் குடி, இருமல் அடங்கி விடும் என்றாள் பிரேமா. அதையே ஆங்கிலத்தில், "COME ON , TAKE A QUICK GULP OF COLD WATER , HOLDING YOUR BREATH -PINCHING YOUR NOSTRILS " என்று தனது மூக்கை அழுத்தி மூச்சடக்கி காட்டி விளக்கினாள் . இப்படியெல்லாம் கூட ஆங்கிலம் சொல்லித்தர இவங்க எங்க படிச்சாங்க என்று கௌரி வியந்தாள் .

சரி கேட்டு தெரிந்துகொள்வோம் என்று கௌரி " மேடம் நீங்க எந்த கான்வென்ட்ல படிச்சீங்க ? அப்புறம் காலேஜ்,, PG எல்லாம் என்று அடுக்கினாள் .

பிரேமா : என்னது கான்வென்ட்டா ? சீசீ நான் ஸ்கூல் படிச்சது "சாவித்ரி வித்யாசாலாவுல , UG -பிசிக்ஸ் SRC ,PG  நம்ம மேடம் டிபார்ட்மெண்ட்ல யூனிவெர்சிட்டில என்று மூச்சு  விடாமல் சொன்னாள்.

கௌரிக்கு [சந்தேக சங்கீதாவுக்கு] இன்னும் ஐயம் தீரவில்லை. "இல்ல , SV சாலா வில படிச்சு எப்படி இவ்வளவு ஈஸியா பேசறீங்க என்று அதே சந்தேகம் எழ விழித்தாள். பிரேமா விளக்கினாள் "எங்க படிக்கிறோம் ங்கறத விட , எப்பிடிப்படிக்கிறோம் என்பது தான் நம்முடைய பலம்/ பலவீனம் இரண்டுக்கும் அடிப்படை. டீச்சர்ஸ் பேசிக் ரூல்ஸ் சொல்லித்தருவங்க ஆனா அதையேதான் சொல்லித்தருவங்க , நம்ம தான் நல்ல வாயாடிங்களாப்பார்த்து தேர்ந்தெடுத்து பேசி, பழகி, திட்டு வாங்கி வேகமாக கத்துக்கணும். அப்பிடி ஒரு வாயாடிதான் இந்த சாரதா

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...