Tuesday, May 16, 2023

RENGAA RENGAA -29

 RENGAA RENGAA -29

ரெங்கா ரெங்கா 29.

இந்தப்பதிவு நேற்றே வந்திருக்க வேண்டியது . கம்பயூட்டர் திடீரென்று cut and paste என்ற ஆணையின் முன்பகுதியை [CUT ]மாத்திரம் செய்து விட்டு , எனது 2 மணி நேர உழைப்பை நொடியில் வீணாக்கி விட்டது. அதுவும் வெய்யிலின் புழுக்கத்தில் இரவு சென்னையில்  மீண்டும் எழுத தோன்றுமா ? எனவே மிகுந்த சலிப்புடன் சாமிகள் சங்கமம் இடம்பெறச்செய்தேன்

நமது நிலைமை கஸ்தூரி ரெங்கனுக்கு சற்றும் குறைந்ததல்ல , சாண் ஏற   முழம் சறுக்கல் இது போன்ற சூழல்களில் இந்த தலை வேதனை தேவையா என்றே தோன்றுகிறது.

சரி கதைக்கு வருவோம்.

நேற்றைய நிகழ்வுகளை ராமசாமி சாரிடம் சொல்ல வேண்டுமே என துடித்தான் கஸ்தூரிரெங்கன். என்ன துடித்து என்ன / போனில்லாதவன் பேச நினைப்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைகொள்வதற்கு இணையானது . அனால் நமது முடவனுக்கு [ ரெ வுக்கு] நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் .மிகுந்த உளைச்சலுடன் இருந்தான் ரெ . மதியம் சுப்ரமணியிடம் புலம்பினான் எங்க ஊருக்கு போன் பேசணும் என்கிட்டே போன் இல்ல என்றான். சுப்ரமணி சொன்னான் -சாயங்காலம் டவுன்ல போய் ஒரு செல் போன் வாங்குவோம் ;நான் சரவணனை வரச்சொல்றேன். சரவணனா --யாரு என்றான் ரெ . இங்க தான் வேலை செய்றார் செல் போன்லாம் சூப்பரா செக் பண்ணி சொல்வார் இங்க சிக்னல் ரூம் இருக்கார் கூட்டிகிட்டு வரேன் என்று சுப்பிரமணி சொன்னார். அதே போல் மாலை4.30 க்கு  சரவணன் வந்தார். போவோமா என மூவரும் கிளம்ப "எங்க போகணும் ?"  என்று குரல் . திரும்பிப்பார்த்தால் நெடிது உயர்ந்த பஞ்சாபகேசன் சார்

சுப்பிரமணி பேசினார் "நம்ப சாருக்கு செல் போன் இல்ல அதுதான் வாங்க போலாமா” னு என்று இழுத்தார் சுப்பிரமணி.

அப்ப ஒண்ணு செய்ங்க நேர NTR ஸ்கொயர் போய் ஸ்டேஷன் பார்த்து ஒரு சர்தார்ஜி போன் ஷாப் ஒரு 4000/-ரூவாய்க்கு ஒரு மீடியம் சைஸ் கலர் /டச் ஸ்க்ரீன் வந்திருக்கு. நல்லா இருக்கு . அத வாங்கி SIM போட்டு உடனே நம்பர் வாங்கி இப்போதே உபயோகிக்கலாம் GOOD LUCK என்றார்   கே . மூவரும் ஒரே ஆட்டோவில் பயணித்து சர்தார்ஜீ கடையை அடைந்தனர். இவர்கள் தேடிய புது மாடலை சர்தார்  எடுத்து கொண்டுவந்தார் .சரவணன் பலவாறாக சோதித்து 2 போன்களில் ஒன்றை வாங்கிக்குங்க என்று விளக்கினார். உடனே ஒரு சிம் கார்ட் பொருத்தி இன்னும் 2 மணி நேரத்தில் அக்டி வேட் ஆகும் 40 நாளுக்கு 180/- ரூபாய் ஸ்கீம் இருக்கு என்றார் சர்தார் ஜீ. .

 பின்னர் சாப் கீ சொல்ங்கோ --தன்யவாத் என்று கை கூப்பி விடை கொடுத்தார். ரூமில் வந்ததும் அதை எப்படி இயக்குவது என சரவண னிடம் கேட்டு குறித்துக்கொண்டான் ரெ . சிறிது நேரம் அரட்டை அடித்து, ஆக்டிவேட் ஆனதும் எல்லாம் சரியா இருக்கா என்று செக் பண்ணி சொல்லுங்கோ சார் என்று சரவணனிடம் கோரிக்கை வைத்தான் ரெ . சரி என்று சரவணன் அங்கேயே இருந்தார். சுமார் 7 .40 க்கு டிடை டை ய்ங் என்று ஒளியும் ஒலியுமாக உயிர்த்தெழுந்து செல்போன். உடனே welcome to AIRTEL FAMILY , ENJOY OUR QUALITY SERVICE என்று மீண்டும் டிடை டை ய்ங் என்று கூவி மடிந்தது . ஐய்யயோ அதுக்குள்ள போன் இருட்டா இருக்கே என்று புலம்பினான் ரெ .

அது ஒன்னும் இல்லீங்க என்று பட்டனை அழுத்தி இப்ப பாருங்க என்றார் சரவணன் நீல ஸ்க்ரீனில் 2 கொக்கு பறக்க  நம்பர் சொல்லுங்க என்றார் சரவணன். சிறிய நோட்டிலிருந்து ராமசாமி நம்பர் எடுத்து போன் போட்டனர் . ராமசாமி போன் கௌசல்யா சுப்ரஜா என்று ஒலித்தது . ஹலோ ராமசாமி ஹியர் என்றார் ரா சா. சார் நான் கஸ்தூரிரெங்கன் --நீங்க சௌக்கியமா , மாமி சௌக்கியமா ஒங்கள எப்பவும் நெனச்சுக்கறேன் என்று குரல் கம்மினான் . பெரியவர்கள் வாழ்த்தியபின் டே உங்க அம்மா இங்கே இருக்கா பேசு என்று போனை கொடுத்தார் . அம்மா "டேய் சௌக்கியமா இருக்கியா ? வேளா வேளைக்கு சாப்பிடு வெய்யில்ல அலையாத . சரி ஊரார் போனை பத்திரமா திருப்பிக்குடுத்துடுப்பா என்றார் தாய். உடனே ரா சா டேய் யார் போன்ல டா பேசற ? என்றார். நானே ஒரு போன் வாங்கியிருக்கேன் , முதல் உங்களோட தான் பேசியிருக்கேன் மாடசாமி சார் நம்பர் இல்ல நீங்க குடுங்கோ அவர்கிட்டயும் பேசறேன் என்றான் ரே.

டே , மா சா ஸ்பெஷல் டூட்டில பெங்களூர் போயிருக்கான் இன்னி ராத்திரி /காலை வந்துடுவான் அப்புறம் பேசு நான்  நம்பர் அனுப்பறேன் என்றார் ரா சா

ப்லிங் என்று ஒலியுடன் மெசேஜ் வந்தது. அந்த நம்பரை சேவ் பண்ண கற்றுக்கொடுத்தார் சரவணன் அதோடு மாடசாமி பெயரையும் இணைத்துக்கொடுத்தார் சரவணன். ரொம்ப தேங்க்ஸ் சார் --நீங்க மெட்ராசா  என்றான் ரெ . இல்லீங்க அம்முளு க்கு மதுரைப்பக்கம் ராஜாக்கூருங்க .        அப்பிடி ஒரு ஊரா? என்றான் ரெ                     என்ன அப்புடி கேட்டுப்புட்டீய ? சினிமா நடிகரு சூரி அம்ம ஊர் தேங் , எங்க கூட கபடி ஆடிக்கிருந்தாரு இப்ப என்னடான்னா சினிமாவுல பெரிய்ய ஆளா வந்துட்டாரு. எல்லாம் நேரந்தேன் என்று சொல்லி , சிக்னல் ரூம்பு பக்கம் வந்தா வாங்க இங்ஙண தேன் என்று மதுரை தமிழில் முழங்கினார் சரவணன் .

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...