Monday, May 15, 2023

SAMIs COME TOGETHER - 29

 SAMIs COME TOGETHER - 29

சாமிகள் சங்கமம்-29

வீட்டில்   " என்னடி இவ்வளவு நேரமா வா செமார் நடந்துச்சு"என்றாள் பாட்டி. பாட்டி அது செமார் இல்ல செமினார் என்று விளக்கினாள் கௌரி. நான் என்னத்தக்கண்டேன் , வயசுப்பொண்ணு ரொம்ப நேரமா காணுமே ங்கற கவலைல பேசறேன் .செமாரோ  செமினாரோ எதுன்னாலும் காலா  காலத்துல வீடு வந்துட்டா மனசு அலை பாயாது .இதெல்லாம் பெரியவங்க கஷ்டம்

காலம்       கெட்டுக்கிடக்கேன்னு சொல்றேன்; எங்க போனாலும் வந்தாலும் கவனமா இரும்மா. இதற்கிடையில் கௌரியின் தாயார் கடையில் இருந்து திரும்பினார் . செமினார் நல்லா  இருந்துச்சா  ? என்றார் தாயார் . நல்லா இருந்துச்சும்மா -ஆனா நான் இன்னும் நெறைய படிக்கணும் னு புரியுது. என்றாள் கௌரி. இன்னுமா ? என்றார் தாயார். ஆமாம் எப்பவுமே நெறைய தெரிஞ்சுக்கணும் அதுவும் இங்கிலிஷ் எவ்வளவு வேகமா பேசறாங்க ;அம்மாடியோவ் நான் எப்பதான் அப்பிடி பேசப்போறேனோ , தலை சுத்துது என்று ஏக்க பெருமூச்செறிந்தாள் கௌரி. தாயார் சொன்னார் "கவலைப்படாத கௌரி போகப்போக நீயே நல்லா கத்துக்குவ " என்று சொல்லி விட்டு ஆமாம் உங்க மேடம் பேசுனாங்களா என்றார் தாயார் . பேசுனாங்களாவா ? சும்மா பொளந்துகட்டிட்டாங்க -எல்லோருமே அசந்து போய் உக்காந்திருந்தோம்

அவங்க ஒருத்தரா இவ்வளவு நேரம் பேசுனாங்க ? என்றார் தாயார். மொத்தம் ரெண்டு பேர் பேசுனாங்க , மேடம் அப்புறம் அவுங்க ஸ்டூடன்ட் ப்ரேமானு ஒரு அக்கா டெல்லி வேல பாக்கறங்க , மேடத்தோட ஸ்டூடன்ட் என்ன விட 2, 3 வயசுதான் அதிகமிருக்கும் ;ஆனாலும் ரொம்ப நல்லா பேசி கைதட்டு வாங்கிட்டாங்க . இங்கிலிஷ் சூப்பரா பேசறாங்க அவங்க நம்பர் வாங்கி வெச்சிருக்கேன் போன்ல பேசி சந்தேகமெல்லாம் தீர்த்துக்கணும் -எப்பிடி ஆகப்போகுதோ  மாரியம்மா வழி காட்டும்மா என்று சமயபுரம் மாரியம்மனை வேண்டினாள். ஒரு டீயை குடித்துவிட்டு , நோட் புக்கில் குறித்திருந்த புதிய சொற்களை எழுதி , டிக்ஷனரி உதவியுடன் அந்த சொற்களின் பொருள் மற்றும் பிரயோகம் குறித்து குறிப்பெடுத்துக்கொண்டாள் .

மாலை மணி 6.20 பிரேமா வை தொடர்பு கொண்டாள் கௌரி

மேடம் சூப்பரா பேசுனீங்க அதுனால உங்ககிட்ட ஆங்கிலம்  கத்துக்க ஆசயா இருக்கு . கத்துத்தருவீங்களா என்றாள் கௌரி . சரி வீட்டுக்கு வா காலை 7.00-8.00 AM .ஒரு 22 நாள் இங்க இருப்பேன் .டெய்லி வந்தா நெறையா கத்துக்கலாம் முடியுமா ? என்றார் பிரேமா. கண்டிப்பா வரேன் மேடம் அட்ரஸ் குடுங்க. என்றாள் கௌரி. அட்ரஸ் தேவையே இல்ல மேடம் வீட்டுக்கு அடுத்த பில்டிங் கிரௌண்ட் FLOOR என்றார் . ஐயோ மேடம் வீட்டுக்கு அடுத்தவீடா என்று படபடத்தாள் கௌரி. ஏன் பயமா? என்றாள் பிரேமா. ம்ம்ம் என்று முணுமுணுத்தாள் கௌரி. இப்டியெல்லாம் பயந்தா ஒன்னும் செய்யமுடியாது. மேலும் மேடம் படிக்கறதுக்கெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க ;நாம அரட்டை அடிக்கிறோம் னா ரெண்டு பே ரை யும் , நல்லா காச்சிடுவாங்க . அதுனால நீ பாட்டுக்கு வா ஈசி யா கத்துக்கலாம் என்றார் பிரேமா. சரி மேடம் காலைல வரேன் என்று சொன்னாள் .

இரவு மாடசாமி திரும்பியதும் செமினார் விவரங்களை சொல்லி, தனக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள பிரேமா மேடம் வீட்டுக்கு போக இருப்பதாக தெரிவித்தாள் கௌரி  காலைல தானே நான் கொண்டு போய் விட்டுர்றேன் . நீ க்ளாஸ் முடிஞ்சு ஓரமா நடந்து வா வெய்யில் மண்டைய பொள க்குது என்றார் மாடசாமி . 2 நாள் காலை வகுப்புக்குப்பின் 3 ம் நாள் வாசலில் சுபத்திரா நின்று கௌரியை பிடித்துவிட்டாள் . டெய்லி இங்க என்ன பண்ற ? என்றார் மேடம். கௌரி தயங்கினாள் . சுபத்ரா "சொல்லேன் இங்கிலிஷ் கத்துக்கறேன் பிரேமா கிட்ட னு . நீ சொல்லாட்டி எனக்கு தெரியாதா ?. சரி திரும்பி 8.20 க்கு தானே போவ அப்ப இங்க வா என்று மேடம் சொல்லிவிட்டார். ஐயோ என்ன காய்ச்சப்போறாங்களோ , மாரியம்மா என்று உள்ளூர நடுங்கினாள் கௌரி . வகுப்பு முடிந்து சொன்ன படியே மேடம் வீட்டில் கௌரி. மாடிக்கு போ என்றார் மேடம் .ஐயோ  அர்ச்சனை பெரிசா இருக்கும் போலிருக்கே என்று  வியர்த்துக்கொண்டே மாடி ஏறினாள் .

அடுத்த நிமிடம் சுபத்திரா கோடாலி முடிச்சுடன் பார்க்கவே .வேறு மாதிரி  தெரிந்தார் . பெரிய அலமாரி முழுவதும் புத்தகங்கள் . ஒரு புக் எடுத்து இதை நீயே வைத்துக்கொள் யாருக்கும் தராதே , இப்போ இது வர்ரதில்ல என்றார் மேடம் ENGLISH GRAMMAR -- A . S . HORNBY . இந்த பேரே எனக்கு தெரியாதே என்று கவலைப்பட்டாள் கௌரி . அது எங்க பெரியப்பா கொடுத்தது அவர் பெங்களூரு ல ENGLISH PROFESSOR . என்று கைகுலுக்கி GOOD LUCK என வழி அனுப்பினார் மேடம்.

தொடரும் அன்பன்  ராமன்  .

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...