Wednesday, July 19, 2023

RAAMAAYANA MAHABHAARATHAM -2

 RAAMAAYANA MAHABHAARATHAM -2

இராமாயண மஹாபாரதம் -2

அனுமனும் அவனே அர்ஜுனனும் அவனே

வேறு யார்   திரு மாடசாமியே  தான் . கஸ்தூரி ரெங்கனை தோளில்சுமக்காத குறையாக கரை சேர்த்த பெருந்தகை . உருவில் ராவணன் , உள்ளத்தில் மென்மையும் எண்ணத்தில் மேன்மையும் , தொழிலில் நேர்மையும் சேர்ந்த கலவை . தீமையை எதிர்க்க தயங்காத நெஞ்சுரம் படைத்த வீரன்.. பேச்சில் நயமும் கருத்தில் நியாயமும் மாடசாமியை பெரும் போர் வீரனாக பார்க்கத் தோன்றுகிறது. ராமசாமிக்கு வாய்த்த அனுமன்; அதெல்லாம் சரி கஸ்தூரிரெங்கன் யார் என்றே தெரியாத போதிலும், ராமசாமியின் நட்பிற்கு அளித்த மிக உயர்ந்த முக்கியத்துவம் , க ரெ யை சென்னைக்கு அழைத்துசென்றதும் , நல்ல உணவகங்களில் வகை வகையான உணவு இலவச தங்குமிடம் /கல்யாண ரி செப்ஷ ன் விருந்து , அனைத்தும் க ரெ  யின் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டவை. மாடசாமி செய்த உதவி ஞாலத்தின் மாணப்பெரிது , ஒரு கட்டத்தில் கஸ்தூரி ரெங்கனே மா சா வை,  பார்த்தசாரதிப்பெருமாள் என்று சிலாகித்ததை நினைவு கூரத்தான் வேண்டும்.  பஞ்சாபகேசனுக்கு களத்தில் நின்ற அர்ஜுனன் . அவருக்கென அனைத்து ஆயுதங்களையும் வலுவாக பிரயோகித்த குருட்சேத்திர [கோர்ட்] யுத்தத்தில் முதன்மை தளபதி .மிகத்துல்லியமாக இயங்கி எதிரிகளை வீழ்த்தி , அமைதிப்புரட்சி  செய்தவன் .

குகன்   

குகன்  பாத்திரத்தில்  எளிதில் பொறுத்திபார்க்க க்கூடிய நபர் கேப்ரியல் .  ஆம் ஏற்றத் தாழ்வு பாராட்டாதவர் , மனம்   ஒன்றி  பழகக்கூடியவர் , நன்றாக உதவி செய்பவர் , ரெ மற்றும் செல்லத்துரை இருவருக்கும் எளிதில் உதவினார் .வாய் விட்டு சிரித்து மகிழ்பவர்.                                                              ரெ பாஸ் ஆனதும் பெரிதும் மகிழ்ந்தவர்.இப்போதும் ரெ குண்டூரில் இருப்பதே அவனுக்கு நல்லது என்று ஆத்மார்த்தமாக நினைக்கிறார் ,அதை வலியுறுத்துகிறார் .உயர்ந்த உள்ளம் மற்றும் வெளிப்படையாக கருத்தை சொல்லி விடும் தன்மை கொண்டவர்.

பீஷ்மர்

வேறு யார் ? திருவாளர் பஞ்சாபகேசன் தான் . பழுத்த அனுபவசாலி ,தர்மம் தெரிந்தவர் ,நேர்மையின் காவலர் .அவர் சொல்லுக்கு கட்டுப்படாதவர் யார் ? பலர் வாழ்வில் விளக்கேற்றியவர் , கீழ் நிலை மாந்தர்க்கு தயங்காமல் உதவிக்கரம் நீட்டும் கம்பீர ஆளுமை. மிகத்துல்லியமான மதிப்பீடு செய்யும் ஆற்றல் இவரது சிறப்பு.அவரது துறையில் அவரை அறியாதவர் எவரும் இலர்.  அர்ஜுனன்எனும்  மாடசாமி க்கு அறிவுரைத்த பார்த்தசாரதி இவரே. ஊழலை குழிதோண்டி புதைக்கும் அதீத ஆற்றல் உடையவர் .அப்பண்பு  இவர்மீது   மாடசாமிக்கு ஈர்ப்பு ஏற்படுத்த, அவர்  [மா சா] அர்ஜுனன் ஆனார்.

கர்ணன்[1964] திரைப்படத்தில் அர்ஜுனன் பேசும் வசனம் "பரந்தாமா உனக்கு எல்லாம் தெரியும் , எனக்கு உன்னைத்தான் தெரியும் ". கே -மா சா நட்பில் அந்த  வசனம் முற்றிலும் பொருத்தும் .. 

விதுரன்

பீஷ்மர் அழைத்துவந்த சிறுவன் , இன்று இளைஞன் ;அறிவில் முதிர்ச்சி என்பது இவனுக்கு  அனுபவத்தில் விளைந்தது. வாழ்வின் விளிம்பில் இருந்து வீழ்ந்துவிடாமல் பத்திரமாக அழைத்துவரப்பட்டவன் --ஆம் சுப்பிரமணியே  தான்  கஸ்தூரிரெங்கனுக்கு இவனே கொழுகொம்பு எனில் மிகை அல்ல. கல்வி நீங்கலாக அனைத்து வாழ்வியல் தத்துவங்களையும் பட்டறிவினால் கற்றவன் . கஸ்தூரிரெங்கன் வெளியூரில் கால் பதித்த நாள் முதல்அன்னைக்கு அன்னையாய், அண்ணனுக்கு தம்பியாய்,செயல்படஇறைவனால் அனுப்பப்பட்டவன்

                                   "எங்கிருந்தோ வந்தான் , இங்கிவனை யான் பெறவே

                     என்ன தவம்செய்து விட்டேன் "

 

என்ற பாரதியின் கவிதையின் உயிர் வடிவம் இவனே.             SOFT WARE SOLUTIONS என்று தொழில் செய்து பணம் குவிக்கிறார்கள் ; இவன் தரும் SOLUTIONS எனும் தீர்வுகள் இவனே சோதித்து    உணர்ந்தவை , அடி  மேல் அடி வாங்கி அங்குலம் அங்குலமாக வளர்ந்தவன்; தோல்வியே வாழ்வு என்று பால பாடம் அறிந்தவன், மனத்தின் ரணங்களுக்கு சொல்லால் மருந்திடுபவன். ஆழ்ந்த ஞானத்தில் விதுரன், பஞ்சாபகேசனின் பக்தன், கஸ்தூரிரெங்கனுக்கு கிடைத்த தன்னலமில்லா பண்பாளன் . இவனது பங்களிப்பை ,குறைத்து மதிப்பிட இயலாது. நமது கதையில் இவன் ஒரு அங்கம். ஆம் விதுரன் எனும் மஹாபாரத பாத்திரம் போன்றவன்     

கலைவாணி  [அன்னை ஸரஸ்வதி போல போற்றுதலுக்குரியவர் ]

கழுகார் கண்டெடுத்த  நல் முத்து  , பெண் வடிவில் இயங்கிவரும் அதீத ஆளுமை சுபத்திரா எனும் பேராசிரியை ;பேருக்கு ஆசிரியை அல்ல பேராற்றல் கொண்ட ஆசிரியை; எந்த முரடனையும் அடித்து துவைத்து சல்லி சல்லியாக கிழித்துவிடுவாள். நேர்மை எனும் மையப்புள்ளியிலியே நின்றவள் நிற்கிறவள்  நிற்பாள். திட்டமிடுதலில் அற்புதத்திறன் கொண்டவள். ராமசாமியின் சொல்லுக்கு கட்டுப்படும் வேங்கை எனில் மிகை அன்று. இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் அளவுக்கு பலருக்கும் நன் மை  செய்தவள்  . செயல் திறனால் அகில இந்திய ளவில்   புகழ் ஈட்டியவள் ;அதே சமயம் தீயோருக்கு ஈட்டி -அவள் . பல கலை அறிந்து சமையல் முதல் சமயம் வரை அவளின் ஆளுமை வெளிப்படாத இடமே இல்லை எனலாம். பேராசிரியை என்று தீர்க்கமாக நிறுவும் ஆங்கிலப்புலமை, மிகக் குறுகிய நேரத்தில் முடிவெடுத்து செயல் படுத்தும் வேகமும் விவேகமும் சுபத்திராவின் அக்மார்க் முத்திரைகள் அன்றோ ?

இவ்விரு கதைகளிலும், சகுனியும் கூனியும் இல்லை.

 மையக்கருத்தாக  சொல்ல விழைந்தது, எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்வோம், பிறர்க்கு உதவுவோம் அமைதியான செயல் நீண்டஆயுள்தரும்.ஆசிரியப்பணிஎளிதன்று நல்லாசிரியர்கள் இந்நாட்டிற்கு மிகவும் தேவை. நமது அனைத்து புலன்களையும் கூர்மையாக வைத்திருந்தால், இதிஹாச மனங்கள் நம்மிடையே இன்றும் உலா வருவதை உணரலாம் மொத்தம் 120 பகுதிகளிலும் எனது பயணத்தில் பொறுமையுடன் பெருமையாக   பங்கேற்ற . அனைவர்க்கும் நன்றி                                                                

    வணக்கம்                  அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

SALEM SUNDARI -26

SALEM SUNDARI -26 சேலம் சுந்தரி -26 மாலை 5.05 மெல்ல அலுவல் முடிந்து கீழிறங்கி முன் வாயில் வழியே சுந்தரி   வெளியேறி ராமசாமி - ம...