Tuesday, July 18, 2023

RAAMAAYANA MAHABHAARATHAM

 RAAMAAYANA MAHABHAARATHAM

இராமாயண மஹாபாரதம்

ராமாயணம் தெரியும், மஹாபாரதம் தெரியும் இது என்ன இராமாயண மஹாபாரதம் ? இவனோடு பெரிய தொல்லையாக இருக்கும்போலிருக்கிறதே , லேசில் விடமாட்டான் போலும் , ஐயோ இப்படி மாட்டிக்கொண்டேனே என்று கலங்க வேண்டாம் .கலங்காதே என்பதுதானே இவ்விரு இதிகாசங்களின் முத்தாய்ப்பு . சரி தொடங்கிய தலைப்புக்கு வருவோம் .

ஆம் இறுதி மதிப்பீட்டுக்கு உட்படுத்தினால் "ரெங்கா ரெங்கா", "சாமிகள் சங்கமம்"  இரண்டு தொடர்களும் அவ்வப்போது ஒன்றை ஒன்று தழுவிக்கடக்கும் தண்டவாளங்கள் போல கதாபாத்திரங்கள் இங்கும் அங்கும் காட்சிப்படுத்தப்பட்ட தனால் இது "சாமிகள்" கதையா அன்றி "ரெங்கா ரெங்கா " கதையா என்று தீர்மானிப்பதில் தடுமாற்றம் உண்டாவது இயல்பு.

எனவே இந்த நிகழ்வுகளைபின்னோக்கிப்பார்த்தால் இந்தத்தலைப்பு  [இராமாயண மஹாபாரதம்]  ஏற்புடைய ஒன்றுதான் என்று தோன்றும். குறைந்த பட்சம் எனக்கு அப்படித்தோன்றுகிறது.. சரி நீ என்ன பெரிய வ்யாஸரா அல்லது கம்பனா? வெறும் வம்பன் --நீ என்ன இராமாயண மஹாபாரதம் என்று பேருவகை கொள்ளப்பார்க்கிறாய் என்று கோபம் கொள்ள வேண்டாம்.                         அவ்வப்போது க்ரிஷ்ணபரமாத்மா, ராவணன் , அனுமன், குகன், இவர்களுடன் திடீரென்று கலைவாணி அர்ஜுனன், விதுரன் சிலநேரங்களில் பீஷ்மர், குருக்ஷேத்ரம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. என்னவோ தெரியவில்லை குறில் பெயர் சகுனி மற்றும் நெடில் பெயர் கூனி இரண்டும் இக்கதையில் தோன்றவில்லை; ஆனால் கூனி நிகர்த்த கிழவி காரியத்தைக்கெடுக்கும் பாத்திரமாக இடம் பெற்றுள்ளதை குறிப்பிடலாம்.

க்ரிஷ்ணபரமாத்மா  ஆபத்பாந்தவன் -சாக்ஷாத் ராமசாமியே  தான் . அவனுக்கில்லாத கோபியர் கூட்டமா?.அவனது கோபியர் வட்டத்தில் இளவட்டங்களும், முகவாட்டம் கண்ட பெண்டிரும் உண்டு. அவன் அசைவுக்கு கட்டுப்படாதவர் உண்டோ ? நினைவு கூறுங்கள் டிவி காரர்களுக்கு பேட்டி தரக்கூடாது என்று நடுத்தர வயது அம்மணிகளை , நொடியில்  தடுத்ததாகட்டும், உன் பெயர் என்ன என்று கேட்டு லாவண்யா பெயர் சொல்லி வெட்கி மறைந்ததும், என்ன? பாதரட்சையை கோயிலுக்குள் கொண்டு வந்தாயா ? என்று சென்னைப்பெண்ணை சிக்கவைத்து ஊருக்கு திரும்பினால் போதும்  என்றுஅவளை  அழ வைத்தபங்கென்ன, பாங்கென்ன ? வத்சலா கதையில் நடந்ததை வீட்டில் சொல்லி விட்டு, கோவிந்தசாமி , கோவிந்தா அபயம் என்று மடங்கி முடங்கியதென்ன , சென்னை பார்த்தசாரதி கோயில் பட்டர் ராமசாமியின் சொல்லுக்கு கட்டுப்பட்டதென்ன,   இந்த கஸ்தூரி  ரெங்கனுக்கு  வாழ்வுக்கு வழி செய் என்று வேதாந்தத்திற்கு ASSIGNMENT கொடுத்ததென்ன , அதே வேதாந்தற்கு மடிசார் நம்மளே கட்டிவிடலாம் என்று இரண்டு முறை விடாமல் சொல்லி வேதாந்தத்தை கதி கலங்க வைத்ததென்ன , பின்னர் மிகச்சிறப்பாக மடிசார் அணிவிக்க சுபாத்ராவை ஏற்பாடு செய்து , அம்ஜம் இது என்ன புதுசா ஒருத்தி என்று தலை சுற்றியதென்ன, பின்னர் கேப்ரியல் உயர் அதிகாரிகளிடம் சின்னாபின்னப்பட்டிருக்கவேண்டிய நிலையில் ஆபத்பாந்தவனாக ரெவை சென்னைக்கு அனுப்பி கேப்ரியல் மன உளைச்சலில் இருந்து மீண்டதென்ன ? .க ரெ சென்னையில் தேர்வெழுத வேண்டிய நிலையில் அறிமுக மானவர், புஸ்தி மீசை மாடசாமி .அனுமன் போல் அனைத்து தேவைகளையும் கி. பரமாத்மா வுக்கென  நிறைவேற்றியதால் ராமாயண மகாபாரதம் ஆனது

க்ரிஷ்ணபரமாத்மாவின் பராக்ரமம் சொல்லில் அடங்குமோ ? புடவை உடுத்த வந்தவள் டெல்லியில் G 20 யில் கோலோச்சி ,கரகாட்டத்தை காட்டி வடஇந்தியர்கள் செல்வகணேசனையும் , மீனாட்சியையும் -சிவன் பார்வதி எனவும் மணிகண்டனை விநாயகனாகவும் ரசித்து , சுபத்ரா அடைந்த புகழ் சாமான்யமானதா?. அதில் ஒரு வேடிக்கை இந்த க்ரிஷ்ணபரமாத்மா தான் "கழுகு" என்ற  அடைமொழி பெற்றவர். பள்ளி நாட்களில் ஜோதிட விற்பன்னர் போல ஆசிரியர்கள் வயிற்றில் புளியைக்கரைத்தவர் . கேப்டன் குக் , காசிம் , லாவண்யா , கோவிந்தசாமி அனைவருக்கும் உரிய நேரத்தில் உதவி செய்தவர் --ஏன் செல்லத்துரைக்கு கூட ரயில்வே பள்ளியில் இடம் வாங்கித்தந்தவர்.   இவ்வளவு செய்தவர் மாடசாமியை விட்டுவிடுவாரா? கௌரியின் இன்றைய நிலைக்கு  கி. பரமாத்மா எடுத்த முயற்சி லேசானதா? எப்படிப்பார்த்தாலும் கதாபாத்திரங்கள் யாவரும் லாப நஷ்டம் பார்க்காமல் உதவிக்கரம் நீட்டி பெரும் மதிப்பிற்குரியவர்களாக வலம் வந்தனர்

தொடரும்      அன்பன் ராமன்

1 comment:

  1. கிருஷ்ணபரமாத்மா ராமசாமியானால் பகவத்கீதையும் ராமாயணமாகும்

    ReplyDelete

Teacher –Beyond your Image- 3

  Teacher –Beyond your Image- 3 ஆசியர் -- உங்கள்   பிம்பத்தை தாண்டி -3 ஆசிரியயப்பணியில் கையால் ஆகாதவர்களை , அவர்களே தங்களை மாற்றிக...