Monday, July 17, 2023

RENGAA RENGAA-60

 RENGAA RENGAA-60

ரெங்கா ரெங்கா -60

குரங்கு மனம் --ஒரு நிலை கொள்ளாமல் அவ்வப்போது படுத்துகிறது .ரெ . சென்னையில் வேலை க்கு போகலாம் என்றால் ஒருத்தர் கூட ஆதரவாக சொல்லவில்லையே.

இந்த சுப்பிரமணி இந்தக்காசில் காபி தான் சாப்பிடமுடியும் என்று சென்னை வாசி மாதிரி பேசி என் தைரியத்தைக் குலைக்கிறான் . வேறொன்றுமில்லை விரக்தியில் இருந்த ராமசாமி ஒரு முறை நீ என்ன வேண்டுமானுலும் செய் அண்ணாநகர் சொந்தங்களோடு பழகினாலும் எனக்கொன்றுமில்லை என்று சொன்னார் அல்லவா , குரங்கு குதிக்கிறது வேறென்ன ? ஹார்மோன் விளையாட்டு அதிகம் ஆகிவிட்டது , இன்னொருமுறை ராமசாமி ஊர்ஜிதம் செய்தால் பாத யாத்திரை போய்விடுவான் அண்ணா நகருக்கு. -ஆனால் இந்த சுப்பிரமணி என்னவோ சென்னைக்காரன் மாதிரி அறிவுரை சொல்கிறது எனக்கு பிடிக்கவில்லை என்று உள்மனம் கொந்தளிக்கிறது. நேரடியாக கேட்டு விட வேண்டியது தான் என்று தீர்மானித்தான்.பல்லைக்கடித்துக்கொண்டு பரிட்சைகளை சிறப்பாக எழுதினான் .

கடைசிப்பரிட்சை அன்று சினிமாவுக்கு போகலாமா என்று ரெ , சுப்பிரமணியிடம் கேட்க அவன் சொன்னான் .நான் போஸ்டர் ஒட்டுன காலத்திலியே , இந்த சினிமாக்காரங்க நல்லா ஏமாத்தி வாழறாங்க னு தெரிஞ்சுடுச்சு .அப்பவே சினிமா பாக்கறதை விட்டுட்டேன் ;நீங்களும் காசை வேஸ்ட் பண்ணாம நல்லா வயித்துக்கு சாப்பிடுங்க என்று ரெ வின் சினிமா ஆசையில் மண்ணைப்போட்டான்.

ஆமாம் நீங்க சேலம் தானே ? பின்ன சென்னைல இந்த சம்பளம் காபி சாப்பிடத்தான் போதும் னு எப்பிடி சொல்றீங்க ? என்றான் .ரெ . “சார் நான் சேலம் தான் ஆனாலும் சென்னையை பாத்து தெரிஞ்சுக்கிட்டேன்”.

ஒரு 3, 31/2 வருஷம் முன்னாடி கே சார் தாயார் இறந்துட்டாங்க . அப்போ எல்லாரும் சென்னையில போய் , அந்த பாட்டிக்கு எல்லா இறுதிச்சடங்குகளும் செஞ்சார் நீ யும்வா னு   என்ன கூட்டிக்கிட்டுப்போயிருந்தார் - கடை கண்ணிக்கு போய் இலை மளிகை , கரும்பு இன்னும் டெய்லி என்னவோ லிஸ்ட் போட் டு வாங்கிக்கிட்டு வாசொல்வர் ;நான் போய் வாங்கியிருக்கேன் எந்த பொருளும் மூணு மடங்கு வெலை .அவர் அதிகாரி தாக்குப்பிடிப்பார்

நம்ம ஊட்டுல யாரவது செத்துட்டா கிஷ்ணகிரி , தருமபுரி பக்கம் போனா சடங்கு செய்யலாம் இல்லைன்னா நம்மளே ஒருவழியா சாக வேண்டியது தான் 14, 15 நாள் தொடர்ந்து டெய்லி மதியம் வரை ஈரத்துணியோட மந்திரம் ஹோமம் எல்லாம் பண்ணி ஏகப்பட்ட செலவு செஞ்சார். அய்யருங்க வீட்டுல இவ்வளவு நடைமுறை இருக்குனு எனக்கு அப்பதான் தெரிஞ்சுது. நான் ஒரு ஆர்வக்கோளாறில சார் நீங்க மொட்டை போட மாட்டிங்களா னு கேட்டேன். அப்ப சார் சொன்னார் "தினமும் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கு , காசு தண்ணியா போய்க்கிட்டுருக்கு , இப்பவே மொட்டை தான் தலைல வேற மொட்டையா? என்றார். சேலத்துல இளநி 4 ரூவா 5 ரூவா வித்தப்ப சென்னைல 12 ரூவா ;ஏதோ ஒருநாள் விசேஷத்துக்கு நெறையா இளநி வாங்கினார் -இளநி க்கே ஏகப்பட்ட ரூவா செலவாச்சு 3 வருசத்துக்கு முன்னயே . இப்ப இன்னும் அதிகமா இருக்கும். கொஞ்சம் யோசிச்சா புரியும் சார் , இதுக்கு  மெட்றாஸ் போய் குடியிருக்கணுமா என்ன ? சார் உங்களோட ட்ரெய்னிங்க்ல இருக்காரே பாஷ்யம்[தெலுங்கு] மெட்றாஸ் காரர் தான் மெட்றாஸ்ல வாடகை , ஓட்டல் டிபன் ரேட் என்னனு கேளுங்க -தமிழ் நல்ல பேசுறார் ;நான் சொன்னா நம்ப மாட்டீங்க ,அவரைக்கேளுங்க உங்களுக்கே புரியும் , கஷ்டத்துல போய் மாட்டிடாதீங்க னு சொல்றேன் . க ரே வுக்கு இன்னும்நம்பிக்கை இல்லை  பாஷ்யத்தை கேட்க அவன் இந்த சம்பளத்துக்கு கும்முடிப் பூண்டி இல்லாட்டி கூடுவாஞ்சேரி லிருந்து 4 -  5 மணி நேரம் . எலக்ட்ரிக் ட்ரெயின் ல போய் வந்தா சமாளிக்கலாம் , மழை காலத்துல ரொம்பக்கஷ்டம். Bachelor ஆ இருந்தாலே திணறும், கல்யாணம் பண்ணிக்கிட்டா , எலக்ட்ரிக் ட்ரெய்ன்ல பிச்ச எடுத்துக்கிட்டே ஆபீஸ் போகவேண்டியது தான்.என்று விளக்கினார்.

எல்லாருமா சேர்ந்து FUSE ஐயே பிடுங்கறா யாரும் தைரியம் குடுக்க மாட்டேங்கறா என்று குமுறினான். அண்ணா நகர் அவனைப்பாடாய் படுத்துகிறது . இன்னும் ஒருவர் பாக்கி -பஞ்சாபகேசன் சார்                       

மாலை 3.30 மணி அளவில் ப.கே அமர்ந்திருந்ததைக்கண்ட க ரெ  , வணக்கம் தெரிவித்து சார் சென்னைல போஸ்டிங் கிடைக்குமா என்றான்.. கிடைக்கும் ஆனா உன்னால தாக்குப்பிடிக்க முடியாது . இல்ல சார் நன் நல்லா தாக்குப்பிடிப்பேன் என்றான் க ரெ. அங்க உனக்கு மேல 13 பேர் இருக்கான் , எல்லாரும் வேலையை உன் தலைலைகட்டுவான் , ஏதாவது பேசினா disobedience னு remark எழுதுவான் . உன் தலை ல வேலையைக்கட்டிட்டு, கிரிக்கெட் மேட்ச் பாக்க போவானுங்க ; உன்ன லீவ் எடுக்கவே விடமாட்டானுங்க -இதெல்லாம் ஆஃபீஸ் தொல்லை, வாடகை விலை வாசி எல்லாம் ரொம்ப அதிகம் -மாடசாமி உன்கிட்ட சொல்லலியா என்றார் . இவன் இல்லை என்றான் . ப கே வுக்கு புரிந்து விட்டது , இவன் நடிக்கிறான் என்று. ப கே மாடசாமி க்கு போன் பேசினார்  . "மா சா" --உன் சிஷ்யன் மெட்ராஸ் போகணுமாம் -நீ ஒன்னும் சொல்லலியா என்றார். சொல்லிருக்கேனே சார் என்றார் மாசா. சரி இந்தாங்க பேசுங்க என்று போனை க ரெ விடம்  கொடுத்தார் . மாசா "தம்பி சென்னை லாயக்குப்படாது, செலவும் அதிகம், நாங்களே சென்னைல வேலைன்னா நிறைய யோசிப்போம் , அதுனால சார் சொல்றதை பின்பற்றுங்க”.             ப கே அஸ்திரத்தை பிரயோகித்தார் . இங்க ஜாயின் பண்ண விரும்பினால் நானே appointment order வழங்க உடனே ஏற்பாடு செய்ய முடியும். அடுத்த 1 ம் தேதி வேலை துவங்கலாம். வேறு ஏதாவது ஊர் என்றால் அங்கிருந்து ஆர்டர் வந்தால்   நீ அங்க போய் ஜாயின் பண்ணிக்கலாம். அதுவரை ஊர்ல தான் இருக்க முடியும் இங்க ரெஸ்ட் ஹவுஸ் ல தங்க முடியாது . ஊருக்கு போயிட்டு அப்புறம் ஆர்டர் எங்கிருந்து வருதோ அந்த ஊருக்கு போங்க . நாளைக்கு சொல்லுங்க finalise  பண்ணிடலாம் காலை 11.00 மணிக்கு என்ன முடிவு னு சொன்னா நான் என்ன செய்யலாமோ அதை செய்வேன் என்று புளியைக்கரைத்தார்.

சுப்ரமணி மீண்டும் சென்னை வேண்டாம் என்று சொன்னான். மாலை ஆஞ்சநேயர் முன் சீட்டுக்குலுக்கி போட --குண்டூர் என்று வந்தது.ஒரு வழியாக,  1 ம் தேதி முதல் குண்டூரில் சேரச்சொல்லிமூன்று நாட்களில்  உத்தரவு வழங்கினார்  ப கே . முழு நேர ரயில்வே ஊழியனாக ப கே சார் நிழலில் பத்திரமாக இருக்கிறான் கஸ்தூரிரெங்கன். ரா சா, வேதாந்தம், மா சா உதவியினால் ஒரு நிரந்தர வேலை யில்  சேர்ந்துவிட்டான் கஸ்தூரிரெங்கன்            

நன்றி அன்பன் ராமன் 

                              சுபம் 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...