SAMIs COME TOGETHER-60
சாமிகள் சங்கமம் -60
அனைத்து ஏற்பாடுகளும் மிக கவனமாக செய்யப்பட்டு , ஒர்க் ஷாப் எனும் பயிற்சிப்பட்டறையில் இந்திய பாரம்பரியக்கலைகள் 6 பிரிவுகளாக வழங்கப்பட்டது. தொழில் முறை க்கலைஞர்கள் செயல் முறையில் விளக்கினார் , 3 நாள் -பயிற்சியில் 6 வித பயிற்சி கள் -1 கலைகளின் பிரிவுகளும் விமரிசனங்களும் ,மாணவி அகிலா வரவேற்றார் , முடிவில் மாணவர் டேவிட் நன்றியுரை 2 கலைநயம் விளக்குதல் -மொழி , அபிநய முத்திரைகள் , கண் அசைவுகள் , பார்வை நுணுக்கங்கள் ,குறிப்புகள் தயாரித்தல் வரவேற்புரை -கௌரிகல்யாணி , நன்றியுரை சுகன்யா 3.சிற்பக்கலை , அடிப்படை நுணுக்கங்கள் ,சிற்ப சாஸ்திர விதிமுறைகள் மற்றும் மர ச்சிற்பங்கள் வரவேற்புரை அபிராமி I PG , நன்றியுரை ஆனந்தன் -ii PG 4. ஒரிகாமி என்னும் காகித மலர் ஆக்கங்கள் , தத்துவம், உணர்த்தும் மனோநிலைகள் [பேரா .திருமதி மியமோ ஜப்பான்] வரவேற்புரை விஜய் ii PG , நன்றியுரை சுந்தரி -I PG 5 மட்பாண்டக்கலை மற்றும் டெர்ரகோட்டா நுணுக்கங்கள்வரவேற்புரை -விசாலாக்ஷி -I PG , நன்றியுரை -விக்டோரியா II PG 6 பேப்பர் மஷே சிற்பங்கள் [ENVIRONMENTAL SAFETY ] வரவேற்புரை சுபாஷ் I PG ,நன்றியுரை கண்ணன் II PG என்று தேர்வுசெய்யப்பட்டு 40 மணி நேரத்தில் பயிற்சி பெற்றனர். மேடத்தின் செயல் நுணுக்கம் /கூர்மை தெரியாத சில முதல் ஆண்டு மாணவியர் வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டு மூலையில் மூக்கைசிந்த , கௌரியும் சுகன்யாவும் அவர்களை சரிசெய்து வழிக்குக்கொண்டு வந்து "அன்பு அக்கா ' என்று பெயர்பெற்றனர் ; அவர்களிருவரும் .மேடத்திடம் சரியாக செஞ்சுருவாங்க மேடம் என்று பொறுப்பேற்றுக்கொண்டு .சரியாக நிர்வகித்தனர்.
இவற்றை விட, மேடத்தின் நிர்வாகத்திறமை மற்றும் கூர்மை சிறப்பாக வெளிப்பட்ட இடம் யாதெனில் ஒவ்வொரு ,நிகழ்விலும் பிரெஞ்சு, ஜெர்மன் , ஸ்பானிஷ், ரஷ்யன் , என்று மாணவ மாணவியரைக்கொண்டு நிதானமாக .விளக்கச்சொல்லியிருந்தார் மேடம். இது மேல் நாட்டு தூதரக சார்பில் வந்திருந்த பிரதிநிதிகளை வெகுவாக ஈர்த்தது .அவர்களை தனித்தனியே சந்தித்து இம்மாணவ மாணவியர்களின் திறமைகளை மேடமே விளக்கி அவர்கள்மனத்தில் ஒரு தாக்கத்தை .உண்டாக்கினார். அதாவது உங்கள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிற்கு வரும்பொழுது இவர்கள் இந்தியக்கலைகள் குறித்து தெளிவாக உங்கள் மொழியிலேயே விளக்குவர் . எனவே இவர்களை உங்கள் தூதரகங்களில் பணியமர்த்திக்கொண்டால் , மிகுந்த பயன் அடையலாம் என்று ஒரு எண்ணத்தை விதைத்துவிட்டார். இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு ஏனெனில் மொழியும் கலை யும் . பயின்றவர்கள் அரிது என்று அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஒரு CAMPUS INTERVIEW போல பயன்படுத்திக்கொண்டார் சுபத்திரா மேடம்.. அனைத்து முக்கிய மான தகவல்களும் பரிமாற ப்பட்டுவிட்டன. அடுத்த 7-8 மாதங்களில் விருப்பமான தூதரகத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்னும் அளவுக்கு திறமையான மாணவர்களுக்கான முன்னேற்பாடுகளை முடித்துவிட்டார் மேடம்.
இந்திய அரசினரின் சுற்றுலாத்துறையினரை மேடம் நேரடியாக தொடர்பு கொண்டு முக்கிய சுற்றுலாத்தலங்கள் குறித்த நம்பகமான குறிப்புகள் .எனப்படும் PAMPHLET ஒவ்வொன்றிலும் 30 பிரதிகள் வாங்கிவிட்டார். இவற்றை மாணவர்ளுக்கு எந்த ஊர் சென்றாலும் உபயோகித்துக்கொள்ள பயன்படும் என்று ஒவ்வொருவருக்கும் கையில் கொடுத்து விட்டார்.
திரும்பிப்பார்க்கும்முன் இரண்டாம் ஆண்டு விரைவாக உருண்டோடி தேர்வுகளனைத்தும் நடந்தேறி அனைவரும் தேர்ச்சிபெற்றனர் . இனி வேலை தேடும் படலம் என்ற நிலை மாறி , வேலை இவர்களைத்தேடி வந்தது . 8 பேர் சுற்றுலாத்துறையில் பணி அமர்ந்திட , 4 பேர் வெவ்வேறு கல்லூரி/பல்கலைகளில் ட்ரடிஷனல் ஆர்ட் துறைகளில் லெக்ச்சரர்களுக்காக தேர்ச்சியும் பெற்று பணி அமர்ந்து விட்டன ர்.
கௌரி சென்னையில் ஜெர்மன் தூதரகத்தின் சுற்றுலாப்பிரிவிலும், சுகன்யா அதே பதவியில் மும்பையிலும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். .
மும்பையை, டெல்லியா , சென்னையா என்ற கேள்வியே இல்லாமல் மேடத்துக்கென்னவோ அதே திருச்சி தான் . ஏணி,தோணி வகையினர் தானே ஆசிரியர்கள் ? வாத்திகளுக்கு பிறகென்ன கிடைக்கும் என்கிறீர்களா ?
சுபம்
No comments:
Post a Comment