Saturday, July 15, 2023

RENGAA RENGAA-59

 RENGAA RENGAA-59

ரெங்கா ரெங்கா -59

ஆயிற்று 88 நாள்கள் பறந்தோடி , இன்னும் 2 நாள் தான் குண்டூரில் --அப்புறம் ? யாருக்கு தெரியும் . சரி எந்த ஊர் நல்லதுன்னு மாடசாமி சார் கிட்ட கேக்க வேண்டியது தான் என்று மாசா வை போனில் அழைத்தான் .மணி மாலை 4.20. தம்பி நான் சார்ட் செக் பண்ணிக்கிட்டு இருக்கேன் 5.00 மணிக்கு பேசலாமா ? என்றார் மாசா. சரி சார் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தால் பக்கத்தில் சுப்பிரமணி. என்ன சார் யோசனை? எதுவும் யோசிக்காதாங்க .        கே சார்கிட்ட சொல்லி வையுங்க நல்ல ஊர்ல வாங்கிக்குடுங்க னு. அவர் பார்த்து செய்வார். ஊர் நல்லா  இருந்தாலும் அதிகாரி மோசமா இருந்தார்னா ரொம்ப கஷ்டம் சார்.பாதிப்பேருக்கு வேலை தெரியாது , இல்லைனா ஒரே ஊழல் இப்பிடித்தான் இருக்காங்க. நீங்க அக்கவுண்ட்ஸ் இருக்கறவுங்க ரொம்ப கவனம் சார் அதுனால தான்          சொல்றே ன் . நீங்க சார்கிட்ட சொல்லிட்டு பேசாம இருங்க நல்லதே  நடக்கும்.

இருந்தாலும் நம்மளும் யோசிக்கணும் இல்லையா என்றான் ரெ . யோசிச்சு என்ன பண்ணுவீங்க , சார் இதெல்லாம் மனிதர்கள் சம்பத்தப்பட்ட விஷயம், சொந்த ஊரே கிடைச்சாலும் அதிகாரி கிறுக்கனா இருந்தா  அவரை நீங்க என்ன செய்ய முடியும்? சொன்னதை செய் னு மிரட்டுவாங்க , இல்லேனா வேலை சரியா செய்யல னு கம்ப்ளெயிண்ட் எழுதி தொந்தரவு பண்ணுவானுங்க சார். சரி உங்களுக்கு வெளியூர் போகணும் னு ஆசையா இருக்கு, சுப்பிரமணி பஞ்சாப கேசன் எல்லாம் போரடிச்சுப்போச்சு --எனக்கு நல்லா புரியுது -சரி போயிட்டு வாங்க .உங்களைத்தடுக்க நான் யாரு ? நீங்க நல்லா இருந்த அது போதும் சார் எனக்கு .சரி சார் நான் போயிட்டு 6.30க்கு வரேன் அப்புறமா மெஸ்ஸுக்கு போவோம் என்றான் சுப்பிரமணி மணி 5.03

இப்போது கூப்பிட்டதும் மாடசாமி லைனில் வந்தார். சொல்லுங்க தம்பி என்றார் . சார் இந்த வாரம் ட்ரெயினிங் முடிஞ்சுடும் அப்புறம் எங்க போடுவாங்கனு தெரியல்ல அதான் உங்கள கேட்டா தெரியுமே னு கூப்பிட்டன் என்றான் . ரெ . நான் இங்க இருந்துகிட்டு ஐடியா சொல்ல முடியாது. மேலும் எங்க VACANCY  இருக்கு னு தெரியாது. பேசாம . கே சார் கிட்டயே ஒட்டிக்குங்க .அவரை விட நல்ல அதிகாரிகள் இல்லைனே சொல்லலாம்.. சரி சார் அவர் என்னை எடுத்துப்பாரா ? தெரியலியே என்றான் ரெ .

சரி எடுத்துக்கமாட்டேன் னு     சொல்லிட்டா ரா?   இல்லையில்ல . அப்புறம் என்ன ?

என்னைக்கேட்டா நீங்க அவர்கிட்ட இருக்கிறதுதான் உங்களுக்கு நல்லது. அவ்வளவு ஏன் ? கேப்ரியல் சார் -உங்களை திருசிப்பக்கம் வர வேணாம் னு சொல்றார் , இங்க வந்தா சோம்பேறி ஆயிடுவீங்களாம் -ரொம்ப கவலையா இருக்கார். கே சார் கிட்ட கிடைச்சா கும்பிடு போட்டு அங்கேயே ஜாயின் பண்ணிருங்க . ராமசாமி சாரும் அதைத்தான் சொல்லுவார். என்றார் மாடசாமி.

ஊர்ல அம்மா இருக்காளே ? என்றான் ரெ . இன்னும் 1 or 2 மாசத்துல அம்மாவையும் உங்க கூட வெச்சுக்கர மாதிரி வீடு புடியுங்க , சாப்பாட்டு பிரச்னையும் . தீர்ந்துரும் . திரும்ப சொல்றேன் பஞ்சாபகேசன் சார் அதிகாரி மட்டும் இல்ல தகப்பனார் மாதிரி -மிகப்பெரிய ஆபீசர் தம்பி -அவரை மிஸ் பண்ணிடாம அங்கேயே கன்டினியூ பண்ணுங்க ; கண்டிப்பா உங்கள எடுத்துப்பார் தம்பி -கவலையே படாதீங்க -வாழ்த்துக்கள் என்றார் மாடசாமி.

என்ன சார் சொல்றாரு என்றான் சுப்பிரமணி. நீங்க சொன்ன மாதிரிதான் சொல்றாரு. பேசாம குண்டூரிலியே கே சார் கிட்டயே இருங்க அதுதான்       நல்லதுனு சொல்றார். பாத்தீங்களா-- விவரம் தெரிஞ்ச யாரும் அப்பிடித்தான் சொல்லுவாங்க. கண்ட ஊர்லயும் போய் இருக்க முடியாது சார். நிம்மதி இழந்தாச்சுன்னா வேலை செய்ய முடியாது சார் என்றான் சுப்பிரமணி.                 இவர்  என்ன  திரிகால ஞானி மாதிரி பேசறார் வ்வளவு தெளிவா சொல்றார். என்று சுப்ரமணியின் யோசிக்கும் திறன் பற்றி வியந்தான் ரெ

இறுதி பரிட்சைகளுக்காக முழு கவனத்துடன் தயார் செய்து கொண்டான் ரெ. இது வரை சிறப்பாக செய்து வந்துள்ளபடியால் அதே போல் செய்ய வேண்டுமல்லவா ? அந்த பயம்/ கவனம் அவனுக்கு. குண்டூர் ஆஞ்சநேயர் அவனுக்கு உதவுவார். அவனுக்கு புரிந்து விட்டது, பலரும் அவன் குண்டூரில் தொடர்வதை தான் விரும்புகிறார்கள் .அதனால் பெருமாள் மீது பாரத்தை போட்டுவிட்டு நமது உழைப்பை கவனிப்போம் என்று முடிவு செய்தான் .

தொடரும் அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...