SAMIs COME TOGETHER-59
சாமிகள் சங்கமம் -59
கோடை விடுமுறை முடிவடையும் முன்னரே தேர்வு முடிவுகள் வெளியாயின. கௌரியின் வகுப்பில் அனைவரும் தேர்ச்சிபெற்றனர். வகுப்பு அன்பர்கள் போன் மூலம் பேசி நேரே மேடத்தை வீட்டில் சந்திப்பது என்று முடிவெடுத்தனர். வீட்டிற்கு போன அனைவரையும் காய்ச்சி எடுத்துவிட்டார் HOD மேடம் . இது என்ன பழக்கம் ? நீங்கள் இதற்கு முன் பரிட்சையில் பாஸ் ஆனதே கிடையாதா ? எதற்காக இங்கே வருகிறீர்கள் ? சுகன்யாவும் கௌரியும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, "நீங்க நல்லா சொல்லிக்கொடுத்ததுனால , நாங்கல்லாம் பாஸ் ஆயிட்டோம் -அதுக்காக நன்றி சொல்ல வந்தோம் என்று சமாளித்தனர்.
மேடம் "நான் ஒருத்தி தான் சொல்லிக்கொடுத்தேனா ? வேறு பேராசிரியர்கள் , வேறு டிபார்ட்மென்ட் பேராசிரியர்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லப்போவது யார்?
சரி யாரவது சிலர் FAIL ஆகியிருந்தால் அவர்கள் வந்து, நீங்க சொல்லிக்கொடுத்ததுனால நாங்கல்லாம் நல்லா FAIL ஆயிட்டோம் னு வந்து நிப்பீங்களா . அப்படி நின்னா நான் என்ன சந்தோஷமாவா இருப்பேன். வெற்றி தோல்வி உங்கள் உழைப்பின் பலன் . அதுல ஆசிரியர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தோல்விக்கு நான் [நாங்க] எப்பிடி பொறுப்பாகமுடியாதோ அதே போல தான் வெற்றிக்கும் எங்களுக்கும் நேரடி தொடர்பு கிடையாது. அதுனால இந்த காக்கா பிடிக்கிற வேலையை விட்டுட்டு ஒழுங்கா சொல்ற வேலையே செய்யுங்க. தயவு செய்து சாக்லேட் வாங்கிகிட்டு வாத்யார் வீட்டுக்கு அலையாதீங்க .
நீங்கரெண்டு பேரும் தான் லீடராடி? என்று சுகன்யா/ கௌரி இருவரையும் முறைத்தார்
HOD .
ஐயோ இல்ல மேடம் , உங்கள பாக்கணும் னு சொன்னாங்க
அதுனால கூட வந்தோம் என்று பதறிப்போனார்கள். எந்த ஆசிரியரோடும் ACADEMIC
INTERACTION மட்டும் 4, 5 பேரா போய் பண்ணுங்க தேவையில்லாத ஸ்கேண்டல் [கிசு கிசு] கிளம்பாது
. மொதல்ல என்ன செய்யலாம், கூடாது னு புரிஞ்சுக்குங்க. வாங்கின மிட்டாய் எல்லாம் நீங்களே
போய் தின்னுட்டு வேற வேலையைப்பாருங்க. ஸெகண்ட் இயர் நல்லபடியா முடியணு மே , நல்ல இடத்துல PLACEMENT கிடைக்கணுமே னு நான்
அலையறேன் ;நீங்க என்னடான் னா லாலிபாப் வாங்கலாமா,
பலாச்சுளை வாங்கலாமான்னு மீட்டிங் போட்டுக்கிட்டு வீடு வீடா அலையறீங்க. இந்த பொழப்பை
விட்டுட்டு முன்னேற வழியப்பாருங்க, போய் ட்டு
. வாங்க என்று துரத்தி அடித்தார் மேடம் . அய்யா சாமி ஆளை விடு என்று அனைவரும் சிதறி ஓடினர் . சுகன்யாவும் கௌரியும் பேயறைந்த மாதிரி
வெளிறிப்போய் இருந்தனர்..
மாலையில் சுகன்யாவும்,கௌரியும் மேடம் வீட்டில் போய் அவரை சாந்தப்படுத்த வேண்டும் என்று கிளம்பி சென்றனர். மேடம் குதறி விடுவாரோ என்று உள்ளூர பயம் வேறு.. மேடத்தைப்பார்த்ததும் கௌரி சடாரென்று பாய்ந்து நமஸ்கரித்தாள் .எழுந்திருக்காமலே "மன்னிச்சுக்கங்க மேடம் காலைலே தெரியுமா தப்பு நடந்துடுச்சு என்றாள் அழாக்குறையாக. நல்ல வேளை நீங்க ரெண்டு பேர் தான் இருக்கீங்க சொல்றதை கவனமா கேட்டுக்குங்க.யூனிவர்சிட்டி டிபார்ட்மென்ட் ல 1 வருஷம் ஆச்சுன்னு குருட்டு தைரியம் வந்து அங்கேயும் இங்கயும் பசங்களோட சுத்துவீங்க .யாராவது கேட்டா சார பாக்கப்போறோம்னு சொல்லுவீங்க. தேவை இல்லாத friends வருவாங்க , படிக்காம மத்த வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு II இயர் ல ஸ்கோர் குறையும் , வெளி இடங்கள் ல போட்டி போட முடியாது . மேடம் சரியா கவனிக்கல னு எனக்கு அர்ச்சனை விழும். HIGHER STUDIES ல ரொம்ப கவனமா இருக்கணும் ;இல்லைன்னா நல்ல வாய்ப்புகள் நழுவிப்போகும் . யாரோடு பழகினாலும் ஒரு லிமிட் ல இருப்பது நல்லது.
ஐயோ மேடம் எவ்வளவு FAR -REACHING ஆ யோசிக்கறாங்க என்று வியந்து நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.
எதிர்பார்த்தபடியே முதல் ஆண்டு PG [புதிய மாணவர்கள்] தேர்வு சென்ற ஆண்டு போலவே நடைபெற்று இம்முறை 4 பேர் முழு உதவித்தொகை , 4 பேர் பாதி உதவி த் தொகை பெற்று இவர்கள் கௌரி வகுப்பு உறுப்பினர்களை விட அதிகத்திறன் கொண்டவர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் கௌரி மற்றும் அவர் வகுப்பு மாணவர்கள் கடும் உழைப்பாளிகள். எனினும் I PG அதிகத்திறன் கொண்டவர்கள் என்பதால் சுபத்திரா மேடத்துக்கு அவர்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. மேடம் இவர்களை திறமையாகக்கையாள் வார் , எனினும் பொறுப்பு அதிகமாகிறது. இவற்றை நன்றாக கணித்து விட்ட மேடம் பெரும்பாலான மாணவ மாணவியருக்கு [II / I PG ] பயிற்சி பட்டறையில் , பங்களிப்பு பொறுப்புகளை பிரித்துக்கொடுத்து மேற்பார்வையை தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளார்.
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment