Thursday, July 13, 2023

RENGAA RENGAA- 58

 RENGAA RENGAA- 58

ரெங்கா ரெங்கா -58

சில நாட்களாக சிலர் அன்றாட உரையாடலில் கூட என்னிடம் "என்ன கஸ்தூரி ரெங்கனை யே காணோம் " என்று கேட்கும்போது தொனிக்கும் கவலை எங்காவது .ரெ வை அந்தரத்தில் விட்டு விட்டு கதையை "முற்றும்" என்று போட்டுவிடப்போகிறான், இவன் என்பது போல் தோன்றும்.                            அப்படிக்கூட கதை எழுத முடியுமா ? எனில் முடியும் -திரைப்பட கதாசிரியர்களுக்கு -அவர்களுக்கு  இருவர் மணமுடிப்பதே கதையின் தலையாய  நோக்கம் .அதாவது ஏழை -பணக்காரன் , கிராம -நகர , ஜாதி ஏற்றத்தாழ்வு அடிப்படை இதைவைத்து கதை பண்ணி ,பணமும் பண்ணி ஏழை ஸ்விட்ஸ்ர்லாந்து நகரில் காதலிப்பான் ;விமான டிக்கட் வாங்க வசதி இல்லை எனவே தரையிலிருந்து எழும்பிய ஸ்விட்ஸ்ர்லாந்து விமானத்தின் சக்கரத்தை பற்றிக்கொண்டு தொங்கி, பின்னர் தலைகீழாகத்தொங்கி ,ஸுரிக் [zurich] விமான நிலைய வெளிப்பகுதியில் புல்லின் மீது விழ நீண்ட நெடிய அனகோண்டா இவன் காலைசுற்றிக்கொள்ள , பாரடா தமிழன் வீரம் பாரடா , நெஞ்சம் பாறைடா என்று பாம்பை கையால் 25 அடி நீளமும் கிழித்துப்போட்டுவிட்டு  , ஏர்போர்ட் வாசலில் காதலியை தூக்கிக்கொண்டு ஓடி,  மஹாபலி புரத்தில் கொளுத்தும் வெய்யிலில் கற்பாறைமீது 300 பேர் ஆடும் காதல் காட்சி

                                                      தலையில  பார்  சும்மாடு

                                                   தரையில   பார் வெள்ளாடு

                                                       கூடையில  கருவாடு

                     கூட்டத்துல விளையாடு 

என்று அசுரத்தனமாக நடனம் ஆடி திருமணம் செய்து கொள்ள -ஆஹா என்னே படம்? . எந்த விமரிசகனும் விமரிசிப்பதில்லை அனகோண்டா அபாரம் , பச்சைப்புல் பசுமையாக இருக்கிறது , பீட்டரின் கேமரா அபாரம் என்று மாய்ந்து மாய்ந்து எழுதி ஹீரோவின் நற் புத்தகத்தில் [good books ] இடம் பிடிப்பர்.

கஸ்தூரி ரெங்கன் ஒரு புத்திசாலி ஏழை

வெறும் ஏழையானால் சினிமாவில் சேர்ந்து விடலாம். அவன்  தலை எழுத்து , அவனுக்கு புத்தி இருக்கிறதே--- எனவே வேலைதேடுவது தான் அவனுக்கிருக்கும் ஒரே பாதை. ; எப்படியோ தட்டுத்தடுமாறி பலர் தயவால் இப்போது குண்டூரில் ரயில்வே டிரெயினீ யாக இதுவரை 80 நாட்களை ஒட்டி விட்டான் .இன்னும் 10நாள் பயிற்சி .பின்னர் தேர்வு எழுதி வெற்றி அடைந்து , ரயில்வேயில் காலி இடம் எத்துணை , போட்டியாளர் எத்துணை இதெல்லாம் கடந்து கால் பதிக்கவேண்டும்.. எந்த ஊரில் பணியில் அமர்த்துவார்களோ? ஆஹா சென்னை எழும்பூர் நிலையத்தில் வேலை கிடைத்தால் ? என்று கற்பனை விரிய , சார் சார் என்று அலறி கஸ்தூரிரெங்கனை கற்பனை வானிலிருந்து தரை இறக்கினான் சுப்பிரமணி.

ரெ சுப்ரமணியிடம் , எனக்கு சென்னையில வேலை கிடைச்சா?  என்றான்.                                                            வேலை கிடைச்சா உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்து ஆபீஸ் வேலை முடிச்சுட்டு நீங்க ரெண்டு பே ரும் -டெய்லி சாணி தட்டி வித்தாக்கூட வருமானம் பத்தாது சார். அப்புறமும் கடன் வாங்கித்தான் வீட்டு வாடகை , பஸ் , ரயில்னு செலழிச்சு மேலும் கடன் வாங்கணும். இந்த சம்பளமெல்லாம், குண்டூர், திண்டிவனம், ஜலகண்டேஸ்வரபுரம், பிட்சாண்டார் கோயில் இப்படி ஊர்களுக்கு தான் சரிப்படும் .எங்கயாவது மெட்றாஸ்ல போய் மாட்டிக்காதீங்க அப்புறம் காப்பி மட்டும் தான் சாப்பிடமுடியும்.;எத்தினி நாளைக்கு காப்பியே சாப்பிட முடியும். சார் பஞ்சாபகேசன் சார் உங்களுக்கு எது நல்லதுன்னு யோசிச்சு செய்வார். அவசரப்படாதீங்க . நீங்களும் கிளம்பிட்டீங்கன்னா என் கதி ? இன்னொரு தமிழ்க்காரர் ட்ரெய்னிங்ன்னு வந்ததுதான் உண்டு: இல்லைன்னா பகலில் பஞ்சாபகேசன் மாலையில் அஞ்சனை மைந்தன் அவ்வளவு தான் சார்.                  எங்க போனாலும் இந்த சுப்பிரமணிய மறந்துராதீங்க.

என்ன இப்படி சொல்றீங்க மறக்கறதாவது என்றார் கஸ்தூரிரெங்கன் . 10 வருஷம் போனா சுப்ரமணியா? அப்பிடினு கேக்கத்தான் போறீங்க. . மனித வாழ்வு அவ்வளவு தான் சார்  நீங்க மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா. கால ஓட்டத்துல மறந்தது தான் சார் அதிகம் . சரி இன்னும் 10 நாள் இருக்கு அப்போதைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ஆனா ஒன்னு---- சார் சொல்றத கேளுங்க , சரியான இடத்துல உங்களை உக்காத்திருவாரு.கவலையை விடுங்க நான் போ ய் சாப்பாடு எடுத்திட்டு வரேன் என்று கிளம்பினான் சுப்பிரமணி .

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மாடசாமியே பஞ்சாபகேசன் சாருக்கு போன் செய்து பாராட்டு விழாபற்றி பேசி பரிபூர்ண மரியாதையுடன் கே சாருக்கு நன்றி சொன்னார்.

அப்புறம் சார் . ரெங்கனுக்கு ட்ரெயினிங் இன்னும் கொஞ்சம் தானே இருக்கும். அவனுக்கு ஏதாவது நல்ல இடத்துல பெர்மனெண்ட் போஸ்டிங் வாங்கிக்குடுத்  துடுங்க சார். ஒரு குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் சார் அதுனால ஒரு நல்ல இடமா பார்த்து அவனுக்கு வாங்கிக்குடுங்க சார் என்றார் மாசா.

பஞ்சாபகேசன் “மாடசாமி--- நான் அவனுக்கு எங்கயும் தேடி அலையப்போறதில்லை . எங்களுக்கே ஆள் வேணும்னு தானே சுந்தரம் சார்கிட்ட சொல்லி இவனுக்கு குண் டூர்ல ட்ரெயின் பண்ணிக்கிட்டுஇருக்கேன்.. இன்னும் 12-14 நாள் இன்னொரு vacancy வரப்போகுது. ஏற்கனவே ஒன்னு இருக்கு. பேசாம இருங்க நான் அவனை இங்கயே வெச்சுக்கணும் னு பாக்கறேன். அவன் எங்கயாவது போறேன் , கீறேன் னு கிளம்பினான்னா பேசாம இங்கயே இருக்க சொல்லுங்க. எனக்கு ஒரு 3 வருஷம் 7 மாசம் சர்வீஸ் இருக்கு , அதுக்குள்ள எல்லாம் செட் பண்ணி அவனை உக்கார வெச்சுடறேன் போதுமா”? என்றார் கே.

“இதுக்கு மேல அவனுக்கு என்ன சார் வேணும் ? இதுக்கே அவன் ஏகப்பட்ட புண்ணியம் பண்ணிருக்கணும் . ரொம்ப நன்றி சார்”. என்று குரல் தழுதழுக்க விடை பெற்றார் மாடசாமி. மேலும் ராமசாமியிடம் இவற்றை எல்லாம் விரிவாகச்சொல்லிவிட்டார் மாடசாமி.

தொடரும் அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...