Wednesday, July 12, 2023

SAMIs COME TOGETHER- 58

SAMIs COME TOGETHER- 58

சாமிகள் சங்கமம் -58

கௌரி மட்டும் சுட்ட அப்பளம் கேட்டாள் [அவள் அதிகமாக சுட்ட அப்பளம் சாப்பிட்டதில்லை ] பழைய கௌரி எனில் பேசி இருக்க மாட்டாள் , இந்த கௌரி அவள் அல்ல ஆனால் பண்பு குறையாமல் இருப்பவள்.

சாரதாவுக்கென்று குழம்பு, ரசம், அப்பளம், காய் , எல்லாம் தனியே வைத்துவிட்டு , நீ அந்த மெயின் ஸ்டோர்   கை வெக்காத உனக்கு மட்டுமே உன் முன்னாலேயே இருக்கு என்றார் மேடம். கௌரிக்கு 4 சுட்ட அப்பளம் தந்தார். சில நொடிகளில் 3 அப்பள ங்களை கருக் ,முருக் என்று தின்று விட்டாள் கௌரி.      மூணு அப்பளம்  ஸ்வாஹாவா ? என்றார் மேடம் .கௌரி விழித்தாள் .மூணே நிமிஷத்துல 3 அப்பளத்தை மொசுக்கியாச்சான்னேன்  என்றார் மேடம். நல்ல டேஸ்ட்டா இருந்தது அதுனால தின்னுட்டேன் மேடம் என்று வெட்கப்பட்டு சாரி மேடம் என்றாள் . அதுக்கு எதுக்கு சாரி சாப்பிடத்தானே  வெச்சிருக்கு என்று சொல்லி உள்ளே போய் இன்னும் 4 சுட்ட அப்பளங்களை கொண்டுவந்தார் மேடம் .

வெறும் அப்பளமா தின்னா ஏவ் ஏவ்  னு ஏப்பமா வரும் , வேற ஐட்டங்களோட சேர்த்து சாப்பிட்டா நல்ல ஜாலியா இருக்கும் . உங்களுக்கு சாப்பிடக்கூட சொல்லித்தரவேண்டியிருக்கு.                                                                                                     இந்த சாரதாவைப்பாரு கருமமே கண்ணாயினார் னு குழம்பு பாத்திரமே தொடச்சு வெச்சிருக்கு பாருங்க என்று காண்பித்தார் மேடம்.           

 சாரதா "இல்ல மேடம் இதோ ரசமும் காலி" என்று இன்னொரு பாத்திரத்தை காட்டினாள். மீண்டும் இரண்டையும் கொண்டுவந்தார் மேடம் உள்ளிருந்து.. நீ வரப்போற னு   கௌரி சொன்னா நான் அதுனால தயாராயிட்டேன் என்று மேடம் சொன்னார். என்னடி சும்மா இருக்கீங்க சீக்கிரம் சாப்பிடுங்க இல்லீன்னா இந்த சாரதா அந்தக்காலத்து குண்டுக்கண்ணம்மா மாதிரி உங்க பங்கையும் பிடுங்கிடுவா. சாரதா எது வேணும் னாலும்  கேளு , நல்லா சாப்பிடு என்று மேடம் சாரதாவை நன்கு சாப்பிட வைத்தாள் . கௌரிக்கு ஒரே ஆச்சரியம் ஒரே மேடம் கோயில்ல ஒருமாதிரி நடந்துக்கறாங்க , வீட்டுல ஒரு மாதிரி, சாப்பிடும் போ து வேறமாதிரி ., டிபார் ட்மென்ட் பயங்கர தோரணையா இருப்பாங்க , தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா சவுக்கு எடுத்து விளாசுவாங்க -really  multi-faceted  என்று இங்கிலீஷில வேற மனதுக்குள் மதிப்பீடு செய்தாள் . ஒரு மொழி கை வந்துவிட்டால் அப்புறம் ஒரே ஸ்விம்மிங் அண்ட் diving தான். கௌரி மட்டும் என்ன விதிவிலக்கா ? . அனைவரும் மதிய உணவில் திளைத்து திக்கு முக்காடி பாரம்பரிய சாப்பாடு எவ்வளவு ருசி என்று சப்புக்கொட்டினர்..கௌரி ரெசிபி கேட்க மேடம் "சமைத்துப்பார் " மீனாக்ஷி அம்மாள் -1955 -சென்னை -4 [பின்கோடு இல்லாத கால ப்புத்தகம்] கொடுத்தார் . கௌரி நமஸ்கரித்து வாங்கிக்கொண்டாள்.  சரி டான்ஸ் , பிரெஞ்சு ஜெர்மன் --லாம் ஜரூரா புதுப்பிச்சு வெச்சுக்கோ , அடுத்த அகாடெமிக் இயர் ல முழுவதும் ஸ்டூடண்ட்ஸ் தான் நடத்தணும் அதுனால கவனம் என்று உஷார்படுத்தி மாலை காபிக்குப்பின் அனைவரும் வீடு திரும்பினர்..

என்னம்மா ஒரு  நாள் பொழுது ஓடிடுச்சே என்றார் கௌரியின் தாய் . ஆமாம்மா நெறைய வேலை டான்ஸ் பயிற்சி , சாப்பாடு எல்லாம் முடிஞ்சு இப்பதான் எல்லாருமே திரும்பி வரோம் என்றாள் கௌரி அது ஒரு புறமிருக்க , கௌரி மேலும் 3 நாட்டியப்பாடல்களைத்தேர்வு செய்து தினம் 6 பாடல்களையும் காலை மாலை தலா 30-40 நிமிட பயிற்சி மேற்கொண்டாள். ஒரு வேளை 3க்கு மேற்பட்ட நடனங்களை ஆட வேண்டி வந்தால் அதிக சிரமம் இல்லாமல் செய்து விடலாம். அவ்வப்போது பிரேமா-கௌரி பிரெஞ்சில் பேசிக்கொள்ள அவளது பிரெஞ்சு மொழி செயல் பாடு மேம்பட்டது.ஜெர்மன் மொழிக்கு?. திடீரென்று ம்ருணாளினி ஜெர்மன் மொழியில் டிப்ளமோ தகுதி பெற்றவர் என்பது நினைவுக்கு வர கௌரியின் பயிற்சிக்கான முயற்சி மிக எளிதாயிற்று. இருவரும் நன்றாக பேசிப்பேசி விரைவாக ஜெர்மன் மொழி மீதான ஆளுமையையும் வலுப்படுத்திக்கொண்டாள் கௌரி.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...