Tuesday, July 11, 2023

RENGAA RENGAA- 57

 RENGAA RENGAA- 57

ரெங்கா ரெங்கா -57

வெங்கடாச்சலம் ; எல்லாரும் மன்னிக்கணும் இத்தினி பெரிய அதிகாரிங்க   .முன்னால நான் பேசலாமா னு தெரியல ,ஆனா மாடசாமி சார் ஒருத்தர் இருக்கறதும் 30 கம்பியூட்டர் இருக்கறதும் ஒண்ணுதான். கம்பியூட்டரை ஏமாத்த முடியாதாமே ? எத்தினி முயற்சி பண்ணினாலும் மாடசாமி சாரை யாராலயும் ஏமாத்த முடியாது. அப்பழுக்கில்லாத நேர்மை. என்னை போன்ற சாதாரண ஆளுங்களுக்கு ரெக்கார்ட் மெய்ன்டன்ஸ் எப்படி செய்யணும் , எப்பிடி பிரிச்சு அடுக்கணும் எல்லாம் நீட்டா சொல்லிகுடுத்து வழி           காட்டிருக்கார். அவர் நல்ல இருக்கணும் கும்புடறேன் என்று வணங்கினார் .

ஏற்புரை : திரு மாடசாமி

நான் பெரிதாக எதையும் சாதிக்கல . சொல்லப்போனா இருக்கிற முக்கியமான தகவலைத்திரட்டியது மட்டுமே நான் செய்தது.  எனக்கு கிடைத்திருக்கும் இந்த பாராட்டுக்கடிதம் திரு கோகுல் [TTE  அவர்கள் போட்ட பிள்ளையார் சுழியினால் கிடைத்தது   என்பதே உண்மை. கோகுலை மேடைக்கு அழைத்தார் மாடசாமி.

தயங்கியபடியே மேடைக்கு வந்தார் கோகுல். மாடசாமி சொன்னார் : இவர் தான் ஏதோ தில்லு மு ல்லு நடை பெறுவது புரிகிறது ஆனால் எப்படி பிடிப்பது என்று தெரியவில்லை என்று தொடர்ந்து ஆதங்கப்பட்டார். எப்படி எல்லாம் முறைகேடு நடைபெறும் என்று யோசித்தேன், ஒன்றும் புரியவில்லை.

தற்செயலாக ஒருநாள் ஒருவர் டிக்கட் கேன்சல் செய்துவிட்டு யாருக்கோ போன் செய்து "அதை கேன்சல் செய்யுமுன் அதே வண்டியில் அதே தேதிக்கு III ஸ்லீப்பர் வாங்கிட்டேன்" என்று கேன்டீனில் சொல்லிக்கொண்டிருந்தார்.  இதில் ஏதோ பித்தலாட்டம் இருக்குமோ என தோன்றியது .

மண்டையை கசக்கி யோசித்தால் ஒரு பொறி தட்டியது. III ஸ்லீப்பர் ரிசெர்வேஷனிலும் I AC  கான்செலேஷன் லிஸ்ட்டிலும் இருக்கும் ஒரே பெயரைப்பிடித்தால் தான் அந்த நபர் யார் என்று தேட முடியும் என்று தொடர்ந்து உயர் வகுப்பு CANCELLATION LIST விடாமல் வற்புறுத்தி வாங்கினேன். ஒரு கம்பியூட்டர் உதவியாளர் சொன்னார் "போன் நம்பர் SEARCH செய்தால் பிற தகவல்களைத்திரட்டி விடலாம் என்றார். அதே போல் தேடி ஒரு குறிப்பிட்ட நபர் 68 முறை இதே போல் செய்துள்ளது தெரிந்தது.

மற்றொரு ACCOUNTS OFFICER  திரு. பஞ்சாபகேசன் அவர்கள் மிக நுணுக்கமாக துருவி, அந்த நபர் 2 முறை ஒவ்வொரு டிக்கட்டு க்கும் REFUND பெறுகிறார் என்று கண்டுபிடித்ததனால் வேறு புதிய முறையில் ORIGINAL டிக்கெட் கொடுத்துதான் REFUND பெறலாம் என்ற மாற்றம் கொண்டு வரச்சொல்லி புதிய விதிமுறைக்கு ஏற்பாடு செய்ய உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

புதிய முறை பரிசீலனையில் இருப்பதை எதிர்த்து அதே பயணி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத்தொடர்ந்து ரயில்வே யின் புதிய அணுகுமுறை க்கு எதிர்ப்பு காட்டினார். பழையமுறை, முறைகேடு செய்வோருக்கு ஏதுவாக இருக்கிறது --  XEROX பிரதிகளைக்கொடுத்து பணம் பெறுகின்றனர் [ஏற்கனவே ஒரு முறை டிக்கட்டை திருப்பிக்கொடுத்து பணம் பெற்ற  பின்] 2ம் முறை பணம் பெறுகின்றனர் சிலர் .என்று அனைத்து புள்ளி விவரங்களுடனும் தொகுத்தளித்தேன்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் உதவியால் 67 முறை SECOND PAYMENT FOR XEROX என்று கோர்ட்டில் நிரூபித்து ஊழல் நபர் தண்டனை பெற்றுள்ளார்.. உயர் அதிகாரி திரு. பஞ்சாபகேசன் அவர்கள் நேரடியாக நீதி மன்ற விவாதத்தில் அசைக்கமுடியாத புள்ளிவிவரங்கள் மூலம் ரயில்வேக்கு வெற்றி ஈட்டித்தந்துள்ளார். அவரின் விடாமுயற்சிக்கு உங்கள் பாராட்டை கைத்தட்டல் மூலம் தருவீர் என்றதும் மிகுந்த தீவிர கை தட்டல் அரங்கேறியது. மாடசாமி அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றார் பாராட்டுக்கடிதத்துடன்.

ஏண்டா இவ்வளவு நடந்திருக்கு ஒண்ணுமே சொல்லாம கமுக்கமா இருந்துட்ட என்றார் ராமசாமி. மாடசாமி சொன்னார் :

 இது  டேஞ்சர் சமாச்சாரம். நம்ப தகவல் திரட்டறோம்னு தெரிஞ்சா கை , கால் போகும் ஏன் உயிரே கூட போகும் எதுவும் சொல்ல முடியாதுடா. வர வர ஊழல் உலகத்தை விட பெரிசா இருக்கு. நேர்மையாளர்களை விட ஊழல் வாதிகள், அதிகாரிகள், போலீஸ், அரசியல் வாதிகள் எல்லோரும் ஒரு NETWORK வெச்சுகிட்டு சட்டத்தின் சந்து பொந்துல புகுந்து தப்பிச்சிடுவாங்க. இல்ல, வாய்தா மேல வாய்தா வாங்கி ரிட்டையர்  ஆகி பென்ஷனும் வாங்கி செத்தும் போய் --கேஸ் ஒண்ணுமில்லாம போகும்.

எல்லா தகவலும் முறையா குடுத்திட்டதால கேஸ் இழுத்தடிக்காம ஒரே வாரத்தில முடிஞ்சு , மேல் முறையீடுக்கு இடமே இல்லைனு இறுதித்தீர்ப்பே கிடைச்சிருக்கு.  இதுல SECRECY FOR SECURITY REASONS, வேற ஒன்னும் இல்லை என்ன மன்னிச்சுடு என்றார் மாடசாமி.

இப்ப புரியுதுடா என்றார் ராமசாமி கலங்கிய கண்களுடன்.

தொடரும்  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...