Monday, July 10, 2023

SAMIs COME TOGETHER- 57

 SAMIs COME TOGETHER- 57

சாமிகள் சங்கமம் -57

திட்டமிட்டபடி ,பிரேமா ,சாரதா ,கௌரி முவரும் மேடம் வீட்டில் சந்தித்தனர். .12.00 மணிக்கு தான் சோறு நடுவுல எவளாவது பசிக்குதுன்னா சொல்லுங்க என்று மேடம் முடிக்குமுன் "எனக்கு பசிக்குது என்றாள்  சாரதா . "அப்படியா இதோ இரு பழையசாதம் தரேன் சாப்பிடு , வெயிலுக்கும் நல்லது என்று உள்ளே கிளம்பினார் மேடம் . மேடம் பழையசாதம்வேண்டாம் நான் சும்மா சொன்னேன் என்று ஜகா வாங்கினாள் சாரதா. சோம்பேறி இப்ப உங்களுக்கு ஒரு வேலை இருக்கு. இந்தா பேப்பர் பேனா . இப்ப கௌரி ஒரு மூணு ஐட்டம் டான்ஸ் ஆடப்போறா அதை நீங்க தனித்தனியே மார்க் போடணும் பின் வரும் நுணுக்கங்கள் அடிப்படையில் . அதாவது, 1] பொருத்தமான வேகம் 2] சரியான கால் அசைவுகள் [foot work  ] 3 தாளத்துக்கேற்ற ஆட்டம் [dance in tune with percussion ] 4 poise என்னும் முறையான நளினம் 5] பாவங்களின் பொருத்தம் [perfection of expression ].இவை ஒவ்வொன்றுக்கும் 10 மார்க் வீதம் மதிப்பீடு செய்து 3 ட்டங்களில் மிகச்சிறந்தது என்பதை தனித்தனியே கணித்துச்சொல்லுங்கள். அதில் மிகச்சிறந்த இரண்டை பொருத்தமான நாளில் இடம்பெறச்செய்ய வேண்டும் அதனால் மிகுந்த கவனத்துடன் பார்த்து சொல்லுங்கள் என்று பொறுப்பு வழங்கினார் மேடம்.  

CD யை ஓடவிட்டு நாட்டியம் ஆடினாள்  கௌரி . கொடுக்கப்பட்டிருந்த 5 அம்சங்களையும் நன்கு கவனித்து மதிப்பீடு செய்தனர் . ஆனால் இருவரது கணிப்பும் வேறு வேறாக இருந்தது. அதாவது யார் எந்த அம்சத்திற்கு எவ்வளவு மார்க் வழங்குவது என்பதிலும் , மொத்த மதிப்பெண் அடிப்படையில் 1, 2, 3 வரிசையை நிர்ணயிப்பதிலும் பிரேமா ட்டம் 1=28, 2= 42, 3= 40 எனவும் சாரதா           ட்டம் 1=36, 2=39, 3= 37 எனவும் மதிப்பிட்டிருந்தனர். . சரி சராசரி [average ] படி              ட்டம் 1= 32, 2= 40.5, 3= 38.5 என்று மேடம் தீர்மானித்தார் . எனவே பாடல் 2ம் 3ம் நடனத்திற்கு தேர்வாயின . அது எந்தப்பாடல் என்று தெளிவாக குறிக்கச்சொல்லி மேடம் தன்  வசம் ஒரு பட்டியலை வைத்துக்கொண்டார். பின்னர் வந்து எந்த மாற்றமும் தவறுதலாக நிகழ்ந்து விடக்கூடாது என்பதாக.

ஏய் நீ நல்லா தாண்டீ ஆடற என்றனர் பிரேமாவும், சாரதாவும்."என்னடி சொல்றீங்க அவ ரொம்ப meticulous தெரியுமா" என்றார் மேடம் ;ஒரு கணம் கௌரி திக்கு முக்காடிப்போனாள் தனக்கு இவ்வளவு மதிப்பு    தராங்களா மேடம் என்று !

சிறிது இளைப்பாறிய பின் மேடம் கேட்டார் "பிரெஞ்சு ஜெர்மன் இதெல்லாம் எந்த மட்டில் இருக்கிறது" என்று. உடனே சாரதா "நான் கிளம்பறேன் மேடம்" என்றாள் . உடனே மேடம் "ஏன் உன் பையன் அழறானா இல்ல உன்  மாமியார் . .அடியே சாரதா சீக்கிரம் வா னு கூப்புடுறாங்களா" என்று கிண்டல் அடிக்க ஆஹா இவ birth டே அன்னிக்கு என்ன மிரட்டியது கூட மேடத்துகிட்ட borrow பண்ணினது தானா இருடி  ஒன்ன கவனிச்சுக்கறேன் என்று உள்ளூர கறுவினாள் பிரேமா..  "இந்த language எல்லாம் எனக்கு அலர்ஜி " என்றாள் சாரதா.

"ஆமாம் ஒனக்கு  ரெட்டை நரியைத்தவிர [அதான் பைனரி language ] எல்லாமே அலர்ஜி தான்".என்று முரட்டு கிண்டல் செய்தார் மேடம். . என்ன சாப்பிடலாமா என்ற மேடம் அப்பளம் dry or  fry ? என்றார். அப்படீன்னா என்றனர் . dry = சுட்டது , fry =எண்ணெயில் பொரித்தது.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...