Sunday, July 9, 2023

RENGAA RENGAA -56

 RENGAA RENGAA -56

ரெங்கா ரெங்கா -56

அனைத்து பிரிவுக்கும் சுற்றறிக்கை வந்தது -சனிக்கிழமை மாலை [08-07-2023] 3.30 மணி அளவில் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  திரு மாடசாமி [சீனியர் TTE ]அவர்களின் சிறப்பான பங்களிப்பு குறித்து தேனீர் விருந்துடன் பாராட்டுக்சுடிதம் வழங்கப்பட உள்ளது . அனைவரையும் பங்கேற்க அழைக்கிறேன்  பேச விரும்புவோர் சனிக்கிழமை காலை 12.00 மணிக்குள் பெயரை DRM -PA   திரு .மொய்லி இடம் தெரிவித்து பதிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன் . நிகழ்ச்சி DRM சேம்பர் அருகில் உள்ள AC அரங்கில் நடைபெறும் . நன்றி

04-07- 2023                           Sd .SHIVAPRASAD  [ DRM ]

மாடசாமிக்கு பராட்டாமில்ல, சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்துருக்காங்க; முந்தியெல்லாம் அதிகாரிங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி நல்லா டிபனை தின்னுட்டு போவாங்க. இவரு பரவால்ல கீழ் மட்டத்துல நேர்மையான ஒருத்தரை பாராட்டணும் னா, பரந்த மனசும் , நல்ல பண்பும் வேணும் . ஏதாவது நல்லது  நடந்தா சரி -என்று ஆங்காங்கே பேசிக்கொண்டனர் . பாராட்டு விழாவில் பேச 4 பேர் பெயர் கொடுத்திருந்தனர். -திரு ஜெயப்ரகாஷ் , திரு. கேப்ரியல் , திரு. ராமசாமி, திரு. வெங்கடாச்சலம்

விழா அரங்கில் கரும்பலகையில் நிகழ்ச்சி நிரல் எழுதப்பட்டிருந்தது

1 வரவேற்பு -DRM

1 a தேநீர் விருந்து

2 அறிமுக உரை -ரயில்வே ஊழியர் சங்க திருச்சி செயலர்               திரு. வீரபாண்டியன் 

3 பாராட்டு திரு. ஜெயப்ரகாஷ்

4 திரு கேப்ரியல்

5 திரு ராமசாமி

6. திரு. வெங்கடாச்சலம்

7 ஏற்புரை -திரு மாடசாமி

8 தேசீய கீதம்

குறித்த நேரத்தில் விழா துவங்கியது . வரவேற்புரை வழங்கிய திரு சிவப்ரசாத் ஆங்கிலத்தில் பேச அவரது உதவியாளர் செல்வி நான்சி -தமிழில் மிகச்சரியாக மொழி பெயர்த்தாள்

அவரது உரை : திரு மாடசாமி அவர்களின் செயல் திறன் இந்திய ரயில்வேயின் உயர் மட்ட அதிகாரிகளை ஈர்த்து பெரும் பாராட்டுதலை ஈர்த்துள்ளது. அவரின் மிகத்துல்லியமாக செய ல்பாடுகள் நீண்ட காலமாக ஏற்பட்டுவந்த இழப்பையும் ஒரு முறைகேட்டினையும்  முற்றிலும் அகற்றிட சரியான வழிமுறைகளை ஏற்படுத்திட உதவி இருக்கிறது. இதனை ரயிலே துறை யின் விஜிலன்ஸ் தலைவர் அங்கீகரித்து , திரு மாடசாமி க்கு பாராட்டுக்கடிதம் வழங்கி , ஒரு தேநீர் விருந்தில் அதை அனைவர் முன் வழங்கிட அறிவுறுத்தியுள்ளார். அனைவரின் சார்பிலும் அக்கடிதத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரு மாடசாமி அவர்களுக்கு அனைத்து நலன்களும் உண்டாக இறைவனை வேண்டி உங்கள் அனைவர் சார்பிலும் கடிதம் வழங்கப்படுகிறது . உடனே மேடை மீது ஏறி மாடசாமி மிகுந்த பணிவுடன் பாராட்டுக்கடிதத்தைப்பெற்றுக்கொண்டார்.

அருகில் இருந்த ஒரு நல்ல ஹோட்டலில் இருந்து இனிப்பு காரம் வரவழைத்திருந்தார் DRM . தேநீர் /காபி கேன்டீனில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அனைவர்க்கும் அவரவர் இடத்திலேயே வழங்கப்பட்டன. 10 நிமிடம் இடைவெளி விட்டு மீண்டும் நிகழ்ச்சி தொடங்கிட ,

அறிமுக உரை : திரு வீர பாண்டியன்.

திருச்சி ஜங்க்சன் ல மாடசாமி சாரை தெரியாத யாரும் இருக்க மாட்டாங்க. அவருக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனாலும் சுருக்கமா சொல்றேன் எளிமை, பண்பு, ஊழலுக்கு உலை வைக்கும் நேர்மை, கடமை தவறாமை, தவறை கண்டிக்கும் அஞ்சாநெஞ்சம் இவைதான் திரு மாடசாமி சார். எல்லாரும் அவரைப்போல இருந்துட்டா தொழிற்ச்சங்கங்களுக்கு வேலையே  இருக்காது.அவரை வாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன் என்று கை கூப்பினார்.

ஜெயப்ரகாஷ் மாடசாமி இதே அலுவலகத்தில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர். செய்யும் தொழிலில் ஆழ்ந்த அக்கறை செலுத்துபவர். எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார். அவர் போல அலுவலக நடைமுறைகள் அறிந்தவர் வெகுசிலரே. எனது துறையில் இருப்பது எனக்குப்பெருமை.என்று வாழ்த்தி கை கூப்பினார்.

கேப்ரியல் : மாடசாமிக்கி அல்லா எஸ்பிரியன்ஸும்  இருக்கி . அவரு ஸ்ட்ரெய்ட் போர்வேர்ட் ஆளு .ஒரு நாள் கூட டூட்டிக்கு லேட் வந்ததில்லே. மெஜாரிட்டி TTE 35-45 மினிட் முன்னே தான் வருவாங்கோ. மாடசாமி 3-4 HOURS  முன்னே வந்திடும். சார்ட் இருந்த காலத்திலே அல்லா என்ட்ரிஸ் செக் பண்ணி எந்தெந்த ஸ்டேஷன்ஸ் லே பாசஞ்சர் புக் ஆயிருக்கு , எத்தினி பெர்த் ஓபன் இருக்கு அல்லாம் தரோவா பிங்கர் ட்டிப்ஸ் லே வெச்சிருக்கும் . நானே நெறய வாட்டி பாத்திருக்கேன் அவரு டூட்டி பாக்கறது ரொம்ப நீட் , பாஸ்ட்டெஸ்ட் செக்கிங் ;எந்த ஸ்க்வாடும் மாடசாமிகிட்டே ஒண்ணும் செய்யமுடியாது. நியாயம் பாத்தா மாடசாமி  .ட்ராக் ரெக்காட் க்கி இப்போ அவரு ஸ்க்வாட் CHIEF ஆயிருக்கணும் . ஆனா குடுக்கமாட்டாங்கோ .அவரு CHIEF ஆனா நெறைய பிராட் [FRAUD] TTE ங்கோ வீட்டுக்கி / ஜெயில்கி போயிருக்கும் . SUCH A STIFF OFFICIAL HE IS; MAY GOD BLESS  YOU என்று கண்ணில் நீர் மல்க  வாழ்த்தினார். மாடசாமி எழுந்து நின்று கை  கூப்ப கரகோஷம் வானைப்பிளந்தது

ராமசாமி ; 7 வயது முதலே நானும் மாடசாமியும் நீண்ட நட்பு உடையவர்கள். எனவே அவன் இவன் என்று பேசுவது எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி தரும். யாரும் அவமரியாதையாகப்பேசுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் நட்பின் ஆழம் மகத்தானது. எந்த சூழலிலும் மனம் கலங்கவோ , மதி மயங்கவோ மாட்டான்.எந்த முறை கேட்டையும் அனுமதிக்கவோ, துணை போகவோ அவனால் முடியாது .தேவைப்பட்டால் வேலையை விட்டு விடுவான் விலை போகவே மாட்டான் என் நண்பன் . எனக்கு அதிகம் பேச வராது ஆனால் எவ்வளவு பேசினாலும் மாடசாமியின் பண்புகளை முற்றிலும் விளக்க முடியாது. அவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ இறைவனை வேண்டி நிற்கிறேன் என்று கை கூப்பி வணங்கினார் ராமசாமி. 

தொடரும்  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...