Saturday, July 8, 2023

SAMIsCOME TOGETHER -56

 SAMIsCOME TOGETHER -56

சாமிகள் சங்கமம் -56

நாளை மேடத்தை ப்பார்க்கப்போகலாம் என்று முடிவு செய்தனர். இந்த தடவை நானே மேடத்துடன் பேசி fix பண்ணிடறேன் என்று கௌரி முன் வந்தாள் .அட இவளைப்பாருடீ எவ்வளவு இம்ப்ரூவ் மெண்ட் என்று வியந்தனர் சாரதா மற்றும் பிரேமா. அங்கிருந்தே போன் செய்தாள் கௌரி.mam We [PREMA MAM , SARADHA MAM AND MYSELF ] intend  calling on  you tomorrow  ,if you endorse so என்றாள் .சாரதா வியக்க , பிரேமா காலரைத்தூக்கி விட்டுக்கொள்ளாத குறையாக இருந்தாள் .Mam --"fine please make it by 11.30 am and join me for a traditional lunch 'free of 'any  offensive மசாலா என்றார். thank  you mam என்றாள் கௌரி.வரலாம் , மசாலா இல்லாத பாரம்பரிய சாப்பாடு காலை 11.30 சுமாருக்கு வர சொன்னாங்க என்றாள் கௌரி. மசாலா இல்லாத பாரம்பரிய சாப்பாடு ன்னா நான் 10.00 மணிக்கே போய் நின்றுவேன் ;மேடம் செய்யற ட்ரடிஷனல் ரெசிபி சும்மா பட்டைய கிளப்பும் , நான் வரேன்னு சொல்லிருக்க இல்ல அப்பதான் நெறைய செஞ்சு வெப்பாங்க நான் ஒரு வெட்டு வெட்டுவேன் னு மேடத்துக்கு தெரியும். திடீரென்று மேடத்திடம் இருந்து போன் கௌரிக்கு நல்ல டான்ஸ் பாட்டா கொண்டு வா ஒரு மூணு டான்ஸ் நீ ஆடு . இப்ப அவங்க கிட்ட சொல்லாத , சர் ப்ரைஸா  பண்ணலாம் என்றார் மேடம் ..ok என்றாள் கௌரி. என்ன போன் என்றனர்.  வீட்டுலேருந்து -கடைக்குப்போறாங்களாம் அதுனால சீக்கிரம் வர சொல்றாங்க -பாட்டியை பாத்துக்க என்று ஒரே போடாய் போட்டாள் கௌரி. உனக்கு வேணும்னா நாளைக்கு  நோட் புக் கொண்டு வா நல்ல நல்ல ரெசிபி மேடத்துகிட்ட கேட்டு குறிச்சுக்க , உனக்கு கல்யாணம் ஆனாலும் இல்ல foreign போனாலும் பயன்படும் என்றாள்  சாரதா கௌரியின் இப்போதைய கவலை எந்த 3, 4 பாட்டு என்று தேர்வு செய்து கொண்டுபோவது? சரி மேடம் காரணம் இல்லாமல் இப்படி கேட்கமாட்டார்கள் ;எதுவாக இருந்தாலும் சுமார் 4 நிமிடங்களில் முடிக்கும் ஐட்டம் தான்          எடுபடும்  . சரி ஒரு 6 ஐட்டம் கொண்டுபோகலாம் சோலோ-2, ஜோடி -2 [பெண்கள்], ஜோடி-2 [ஆண் -பெண்] மேடம் எதை வேண்டுமானாலும் தீர்மானிக்கட்டும் என்று spot decision எடுத்தாள் கௌரி . நல்ல வேளையாக அது போல் 2 தொகுப்புகள் ஏற்கனவே CD யில் பதிவிட்டிருந்தாள் . நல்ல வேளை 4 மினிட் ஐட்டம்ஸ் எல்லாமே நன்றாக நினைவில் இருப்பவை , REHEARSAL தேவை இல்லை -அப்பாடா என்று நிம்மதி கொண்டாள் , குறிப்பிட்ட CD , நோட் , பேனா  எல்லாம் இரவே சேகரித்து வைத்துக்கொண்டாள் . உடனே தோசை ஊத்த [அவர்கள் சொல் வழக்கில் ] கிளம்பிவிட்டாள் . மாமா இரவு 7.30க்கு வந்தார் சிவந்த கண்களுடன் . அக்கா “என்னடா உடம்பு சரியில்லையா’ என்றார். மாமா பேசாமல் காகித குழலை அக்காவிடம் தந்து காலைத்தொட்டுக்கும்பிட்டார் . அக்கா பேப்பரை பிரித்தார் ஆங்கிலத்தில் ஏதோ எழுதி இருந்தது .இது என்னடா? என்றார். மாமா காகிதத்தை வாங்கி கௌரியிடம் தந்தார். அடுப்பில் இருந்த தோசை தயார் ஆனதும், அடுப்பை நிறுத்தி விட்டு கைகளை நன்றாக சுத்தம் செய்து கொண்டு பேப்பரை பிரித்துப்படித்தவள் மாமா என்று கை  கூப்பி , மாமாவின் கால்களில் நமஸ்கரித்தாள். . மாறி மாறி க் கும்பிட்டுக்கிட்டு இருக்கீங்க என்னனு தான் சொல்லுங்கப்பா என்றாள் கௌரியின் தாய்.. கௌரியின் விளக்கம் இதோ : “அம்மா  -- மாமாவின் சேவையைப்பாராட்டி ரயில்வேயில சட்டிபிக்கே ட்  கொடுத்திருக்காங்க. அதுக்குதான் நான் மாமாவுக்கு கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கினேன். “கௌரி,, அதைபாட்டிகிட்ட குடு” என்று சொல்லி மாடசாமி தனது தாயின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் . பாட்டிக்கு எதுவும் புரியவில்லை . கௌரி விளக்கியதும் பாட்டி கண்கள் ஈரப்பட்டன. அவங்க அப்[பாரு இருந்தா சந்தோசப்பட்டிருப்பாங்க , அவன் ஒருத்தனா இருந்து எல்லா பாரத்தையும் சொமக்கறான் , ஒரு நாள் கூட அவன் அதப்பத்தி பேசுனதே இல்ல. இப்பிடி ஒரு மவன் இல்லாம போயிருந்தா என்ன ஆயிருக்கும் , யோசிக்கக்கூட எனக்கு தெம்பு இல்ல . நீ நல்லா  இருப்படா  உங்க அப்பாரும், மாரியாத்தாளும் உனக்கு துணை இருப்பாங்க எல்லாம் நல்லதே நடக்கும் என்று மாடசாமியின் கைகளைப்பற்றியபடியே நல்லாசி வழங்கினார். .இயல்பு நிலைக்கு திரும்பியதும் மாடசாமி சொன்னார் ஒரு சின்ன விழா ஏற்பாடு பண்ணி ORIGINAL CERTIFICATE தருவாங்க இது சும்மா காப்பி தான் என்றார்.

கௌரி,  மாமாவிடம் “நாளைக்கு மேடம் வீட்டுக்கு போயிட்டு வரணும் கொஞ்சம் வேலை இருக்கு , சாப்பாடு கூட அங்க தான் காலை 10.00 மணி வாக்கிலே போயிட்டு வர்றேன்” என்றாள் . சரி என்றனர் பெரியவர்கள்

தொடரும் அன்பன் ராமன் .

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...