Friday, July 7, 2023

RENGAA RENGAA -55

 RENGAA RENGAA -55

ரெங்கா ரெங்கா -55

. இங்கே கொண்டா என்று அழைத்து வாழைப்பூவில் முதல் 2 மடல்களை முற்றிலும் ஒதுக்கி விட்டு ஒரு டெமோ செய்தார் ராமசாமி  . மடலின் உள்ளிருந்த மலர்க்கொத்தை இடது கையில் மைக் பிடிப்பது போல் பாதி பூவின் வாய்ப்பகுதி மேலே இருக்கும் படி வைத்து இறுக பிடித்துக்கொண்டு, வலது உள்ளங்கையினால் பூக்களின் தலையில் எண்ணை   தேய்ப்பது போல் முன் பின்னாக தேய்க்க , திடீரென்று ஒரே மொட்டைத்தலைகளாக வெளிப்பட, இந்த மொட்டை தான் கள்ளன் என்று ஒவ்வொன்றாக மெல்ல இழுத்து நீள கம்பிபோல் அகற்றி மீதம் இருந்த பூக்களை முறத்தில் கூறு கூறாக வைக்கச்சொன்னார். . இப்படியே பெரும் பகுதி பூக்கள் அகற்றப்பட்டதும் உள்ளே சிறிய சென்ட் பாட்டில் போல் இளம் மஞ்சள் நிறத்தில் பூவின் மையப்பகுதி மேலும் பிரிக்க இயலாத அளவுக்கு அழுத்தமாக இருந்தது..

அதுதான் “கூச்சு” , குறுக்காக வெட்டி சாப்பிட்டு விடு என்றார்   ராமசாமி. அவர் சொன்னபடியே மென்றாள். நறுக் நறுக் என்று இளம் வாழையின் மணம் ரம்யமாக இருந்தது. அத்தனை பூக்களையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விடு என்றார்.அவ்வாறே செய்ய சுமார் முக்கால் படி பூக்குவியல் கிடைத்தது. வெளியில் வந்த அம்ஜம், அட எல்லாம் ரெடியா என்றார்.      சார் தான் சொல்லிக்கொடுத்தாங்க என்றாள் கௌரி. கோபம் கொப்பளிக்க அம்ஜம் முறைத்தாள் ராமசாமியை; இத்தனை நாளா எனக்கு கள்ளன் எடுக்கத்தெரியாதுனு ஏமாத்திண்டே இருந்தேளே என்று கொதித்தாள் .

கழுகு அசருமா என்ன? இன்னிக்கு தான் நானே தெரிஞ்சுண்டேன் என்று சமாளித்து. தப்பித்துவிட்டது. கௌரிக்கு அடக்க முடியாத சிரிப்பு சுவற்றுப்புறம் திரும்பிக்கொண்டாள் . ஐயோ இதென்ன கையெல்லாம் ஒரே கறுப்பு என்று திகைத்தாள் கௌரி. அது tannin என்றார் அம்ஜம் . நீ கெமிஸ்ட்ரி தானே -ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ல alkaloids .flavonoids னு வருமே tannin ஒரு alkaloid என்று-- தான் யார் என்று அச்சுறுத்தினாள் அம்ஜம்.இப்போது கௌரிக்கு ஞாபகம் வந்து விட்டது கொஞ்சம் எண்ணெயை தடவி சோப்பு போட்டா போய்டும் கவலைப்படாதே என்றார் அம்ஜம் .

அம்ஜம் ஒரு புடவை அணிந்த நளன் , துவையல், உசிலி, ரசம் எல்லாம் கன  கச்சிதம் சுவையில் தேவலோகபதார்த்தங்கள் என்று அனைவரும் வியந்தனர்.. எல்லாவற்றுக்கும் ரெசிபி வாங்கிக்கொண்டாள் கௌரி.    தாய் -மகள் போன்ற பிணைப்பு இருவருக்கும் வந்து விட்டது  அதாவது நட்பு பிற உறவினர்களிடையே படர்கிறது

ராஜாங்க ரகசியத்தின் நுட்பங்களை மாடசாமி ராமசாமிக்கு தெரிவித்து , இங்கிருந்து போன நுணுக்கமான தகவலால் தான் அந்த ஊழல் ஆசாமி ;வகையாக மாட்டிக்கொண்டு சஸ்பென்ஷனில் இருக்கிறார். சுமார் 7 லட்ச ரூபாய் இப்படியே அடிச்சிருக்கார். . பூராத்தையும் திருப்பிக்கட்டினா தான் பென்ஷன் பேப்பர் பரீசீலனைக்கே போகும்.

ராமசாமி "ஏண்டா அன்னிக்கு பேப்பர்ல போட்டிருக்கான் னு சொன்னப்ப நீ ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி என் வாயப்பாத்துக்கிட்டே இருந்தயே , எத்தன்  டா நீ என்றார். மாடசாமி "போடா --அதான் எனக்கு தெரியுமே னு கத்த முடியுமா ? சும்மா நண்டு மாதிரி இருந்துற வேண்டியது தான்.

பஞ்சாபகேசன் சார் தான் கோர்ட்ல அவனுகள நாறடிச்சிட்டாரு.. பக்கா டீடெய்ல்ஸ் குடுத்திருந்தோம்  , அவனுங்களால தப்பிக்கவே முடியல , உடனேயே final judgement குடுத்து கேஸ்  ஒரே வாரத்துல முடிஞ்சிருச்சு.. அதுனால தான் நம்ப பையனை  [க ரெ]  அவர்கிட்டயே [ப கே இடமே] vacancy பாக்க சொல்லணும் , பக்காவா தயார் பண்ணிருவாரு; அந்த மாதிரி ஆபீசர்கள் கிடைக்கறதே கஷ்டம் ;இவனுக்கு அதிர்ஷ்டம் அதுனால தான் அவர்கிட்ட ட்ரைனிங் கிடைச்சிருக்கு..

அவனை கொத்திக்கிட்டு போக பாப்பானுங்க.; சார் [ப கே] பாத்து என்ன சொல்றரோ அப்படியே செய்ய  சொல்லு.. நானும் சார் கிட்ட சொல்றேன் ;ரொம்ப அற்புதமான ஆள்றா -சும்மா சிங்கம் டா அவர் பேரைக்கேட்டாலே மேலதிகாரிங்களே நடுங்குவானுங்க . கிளீன் ரெக்கார்ட் அவருக்கு, எவனும் டச் பண்ண முடியாது .இன்னொரு 3 -4 வருஷம் தான் இருக்கும் ;ஆனா எக்ஸ்டென்ஷன்     கொடுக்கமாட்டானுங்க ஊழல் பண்றவனுக்கு எக்ஸ்டென்ஷன், பிரமோஷன் எல்லாம் தந்து சாமரம் வீசுவானுங்க  என்று வேதனையுடன் பேசினார் மாடசாமி.

ஐயோ இவன் சாதாரண எத்தன்  இல்ல எத்தாதி எத்தன் ,எவ்வளவு அமைதியா அணுகுண்டு வெச்சிருக்கான் அம்மாடி ! அதுவும் எப்படி வெளியூர்ல அதுனால தான் குண்டூர் னு பேர் வெச்சானுங்க போல இருக்கு . இவன் எப்படி பஞ்சாபகேசனைப்பிடிச்சான் , இல்ல அவர் இவனை பிடிச்சாரா?  எப்படியோ ரெண்டும் சேர்ந்து ஒரு மாபெரும் முறைகேட்டுக்கு பெரிய முற்றுப்புள்ளியா வெச்சு இப்ப அவனவன் நடுங்கறான்.

டிக்கட் வாங்க கூட பியூன் ,டிரைவர் , பி ஏ னு அனுப்பறா னுக. மொத்தத்துல டயரியா வந்தவன் மாதிரி விழுந்தடிச்சு ஓடறானுங்க.நல்ல வேளை நம்ம சீட்டுல ஊழல் பண்ண வாய்ப்பே இல்ல , இல்லேன்னா எவனாவது ஊழல் பண்ணிட்டு நம்ம மேல வெச்சுருவானுக . ரெங்கநாதா மாடசாமிக்கு நீண்ட பரிபூரண ஆயுள் ஆரோக்கியத்தை கொடுப்பா என்று பிரார்த்தித்தார் ராமசாமி .

தொடரும்  அன்பன் ராமன்   

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...