Thursday, July 6, 2023

SAMIs COME TOGETHER -55

 SAMIs COME TOGETHER -55

சாமிகள் சங்கமம் -55

இதோ தனது தீவிர பங்களிப்பை தொடங்கிவிட்டார் டாக்டர் சுபத்திரா . அடுத்த கல்வியாண்டு என்று துவங்கும் , முதலாம் ஆண்டுக்கான அட்மிஷன் அனேகமாக ஜூலை 20-22 தேதி வாக்கில் முடிந்துவிடும் என்பதை உறுதி செய்துகொண்டு இரு முக்கிய பேச்சாளர்களுக்கு கடிதம் அனுப்பி -ஒருவர் துவக்க உரை [INAUGURAL ADDRESS ], இன்னொருவர் நிறைவு உரை [VALEDICTORY ADDRESS ] ஒப்புதல் வாங்கிக்கொண்டு சரியான தேதி சுமார் 20-25 நாட்களுக்கு முன் e -mail மூலம் உறுதி செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே முக்கிய சர்வதேச அமைப்புகளான CONSULATE /EMBASSY போன்ற அமைப்புகளுக்கு நிகழ்ச்சி குறித்து இந்திய கலைகள் குறித்த செயல் பட்டறை நடக்க இருக்கிறது உங்கள் அதிகாரிகள் கலந்து கொண்டால் இரு சாராருக்கும் பயனளிக்கும் என்று தெரிவித்து ஜெர்மனி , பிரான்ஸ் , ரஷ்யா மற்றும் ஸ்பெயின் நாட்டு தூதரகங்கள் தலா  ஒருவர் பங்கேற்பர் என்று உறுதி தெரிவித்திருந்தனர்.

பேச்சாளர்கள் யார் யார் என்பதை முறைப்படுத்திவிட்டு , வரவேற்புரை /நன்றியுரை இவற்றில் பங்கேற்க 12 மாணவ மாணவியர் பெயர்களை யம் + 4 பேர் standby எனவும் தீர்மானித்திருந்தார். வர இருக்கும் I  PG  யில் பெரும்பாலானோருக்கு சிறு சிறு பணிகள் என்பதாக பக்கா திட்டம் போட்டு வைத்துக்கொண்டார் .

இதற்கிடையில் கௌரி, சுகன்யா , மேலும் மாணவர்கள் ஆனந்தன், பாலன், டேவிட் , கிருஷ்ணகுமார் ---- இவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு FOREIGN LANGUAGE DIPLOMA வில் கற்றதை நன்றாக மீண்டும் புதுப்பித்துக்கொண்டு வரச்சொல்லி கிட்டத்தட்ட கட்டளை பிறப்பித்துவிட்டார் . பிறகென்ன முழு கவனத்துடன் மீண்டும் தங்கள் டிப்ளமோ ஞானத்தை மிகச்சரியாக புதுப்பித்துக்கொண்டதுடன் அவர்களே அம்மொழிகளில் ஒருவரோடொருவர் உரையாடி நன்றாகத்தயார் செய்துகொண்டனர். கௌரிக்கு பிரெஞ்ச் , ஜெர்மன் இரண்டையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதாயிற்று ஆயினும் எளிதில் செய்துவிட்டாள் .இப்போது பிரேமா திருச்சியில் கோடை விடுமுறையில். பிரேமா வந்திருப்பதை அறிந்த சாரதாவும் பிரேமாவின் வீட்டிற்கு வந்துவிட கலகலப்புக்கு பஞ்சமே இல்லை.,பிரேமாவும் கௌரியும் பிரெஞ்சில் பேசிக்கொள்கின்றனர் , ஆங்கிலத்திற்காக நட்புகொண்டோர் இப்போது அவசியத்திற்காக பிரெஞ்சில் பேச இதைப்பார்த்த சாரதாபோங்கடி நீங்க இங்கிலீஷில் பேசினாலே எனக்கு கடுப்பா இருக்கும் இப்ப பிரெஞ்சு வேற எங்கயோ  பாண்டிச்சேரியில போய் செட்டில் ஆகப்போறவளுக மாதிரி” என்று கொக்கரித்த சாரதாவைப்பார்த்து  ஆஅ என்று வாயைக்கோணிக்கொண்டு பிரேமா வலக்கை ஆள் காட்டி விரலை கொக்கிபோல் வளைத்து வளைத்து கேலி செய்தாள். கௌரிக்கு சிரிப்பு வந்தது ஆனால் வயதில் மூத்தவள் சாராத என்பதால் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.. கௌரியும் பிரேமாவும் மேடம் சுபத்திரா வை அவர் வீட்டில் சந்திப்போம் என்று தீர்மானித்து , சாரதா நீயும் வரியா என்றாள் பிரேமா . நான் யோசித்துதான் சொல்ல முடியும்; நீங்க பிரெஞ்சுல பேசி கழுத்த அறுப்பீங்க , மேடம் வேற திடீர்னு ஹீப்ரூ வில் பேச அரம்பிச்சாங்கன்னா அவ்வளவுதான் மண்டை சுத்தி கீழ விழுந்து வலிப்பு வந்திரும் ஐயோ என்றாள் சாரதா . என்னது ஹீப்ரூ வா? என்று இரட்டை நாயனம் போல் ஒலித்தனர் கௌரியும் , பிரேமாவும். . மேடம் சூப்பரா ஹீப்ரூ பேசுவாங்க -உங்களுக்கெல்லாம் தெரியாதா ? ய்யய்ய  என்னமோ மேடத்தோட ஸ்டுடென்ட்டு மேடத்தோட ஸ்டுடென்ட்டு னு [ அதான்  எனக்கு தெரியுமே அதான் எனக்கு தெரியுமே முத்துலட்சுமி மாதிரி] ஒருநாளைக்கு 7 தடவை புலம்புறீங்க , இதுவே தெரியாதா போங்கடீ போய் மேடத்துகிட்டயே கேளுங்க , நான் சொன்னா  நம்ப மாட்டீங்க. அதுமட்டும் இல்ல சௌத் இண்டியன் லாங்குவேஜஸ் 4 ம் பேசுவாங்க தமிழ், மலையாளம் எழுத படிக்க தெரியும். இதெல்லாம் நான் யூனிவர்சிட்டி யில படிக்கும் போதே  கவனிச்சுருக்கேன் , இப்ப என்னென்ன தெரிஞ்சு வெச்சிருக்காங்களோ ? கடவுளுக்கு தான் வெளிச்சம். நீங்க பிரெஞ்சு பேச மாட்டோம் னு கைல அடிச்சு சத்தியம் பண்ணினா தான் நான் உங்க கூட மேடம் வீட்டுக்கு வருவேன் இல்லேன்னா இந்த ரம்பத்தை தாங்கற சக்தி எனக்கு இல்லை என்று சடாரென்று கீழே உட்கார சாரதாவின் சுடிதார் பாட்டம்டர்’ ரென்று கிழிந்து விட்டது  . பிரேமா உன்கிட்ட வேற சுடிதார் இருக்குமில்ல என்று சாரதா ஆரம்பிக்க , பிரேமா சொன்னாள் அதெல்லாம் உனக்கு எங்கயோ ஆகாயத்துல இருக்கும் நீ மூலவர் விக்கிரஹம் . மாதிரி இருக்க , வேணும்னா சாரி  தரேன்  யூஸ் பண்ணிக்க என்றாள் பிரேமா. சரி என்றுசாரி’ யை உடுத்திக்கொண்டு சுடிதார் டாப் பை சாரிக்குள்  விட்டுக்கொண்டு ப்ளௌஸ் போல் அணிந்து கொண்டாள் . அந்தக்காலத்து சரோஜா தேவி மாதிரி வயிறு தெரியாத பிளவுஸ் அணிந்த சாரதா பாரீர் என்று கத்திக்கொண்டே, பிரேமா  ஆண்ட்ராய்டு போனில் 2, 3 போட்டோ பிடித்தாள் சாரதாவை .

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...