Monday, July 3, 2023

RENGAA RENGAA-53

 RENGAA RENGAA-53

ரெங்கா ரெங்கா-53

CERTIFICATE OF MERIT

The Assessment Committee constituted under the aegis of The Indian Railways for the exclusive purpose of assessing perfformance under specific conditions , deems it fit to place on record its APPRECIATION of the exemplary dedication  displayed by                                                                                                        

                                             Shri . J G R   MADASAMI                         

[Senior Travelling Ticket Examiner of Tiruchirappalli Division -Southern Railway], that helped the Railways in presenting fool–proof evidence [against a wilful malafide  intent of misleading the authority and enjoying the ultimate pecuniary advantage by a passenger] in a legal suit [filed by the passenger] against the Railways , decreed in favour of the Railways by the HONOURABLE MADRAS HIGH COURT, Chennai recently. We express our earnest appreciation of Shri. J G R MADASAMI for all his alacrity  and sincerity of purpose and assure  him of our support whenever required.                                        

25-06-2023                                                        Sd. K.L Malhotra              

                                                                       Chief Vigilance Officer,

                                                                                     INDIAN RAILWAYS

கவரில் முத்திரையைப்பார்த்து கதி கலங்கிய திருச்சி DRM திரு.              சிவபிரசாத்  அவர்களுக்கு , கடிதத்தையும், சான்றிதழையும் பார்த்தபின் தான் இயல்பான மூச்சு இயக்கம் மீண்டும் துவங்கியது. உடனே போனில் ரிசெர்வெஷன் பிரிவினரை தொடர்புகொண்டு      மாடசாமி காலை 12.00 மணிக்கு   DRM அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார். அப்போதுதான் தனது டைரி குறிப்புகளை முடித்திருந்த மாசா விற்கு    DRM அழைக்கிறார் என்ற செய்தி சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது .ஒரு வேளை யார் எப்படிப்போனால் உனக்கென்ன நீ ஏன் கோர்ட் வாதங்களுக்கு தகவல் திரட்டித்தருகிறாய் ? என்று கோபித்துக்கொள்வாரோ அல்லது உனக்கும் பஞ்சாபகேசனுக்கும் என்ன தொடர்/பு    ? என்று கேட்பாரோ ஒன்றும் புரியவில்லையே என்று உள்ளூர ஒரு கலக்கம் தோன்றியது. சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம். ஏதாவது குதர்க்கம் பேசினால் ஊழலுக்கு எதிராக செயல் பட்டால் உங்களுக்கு ஏன் படபடக்கிறது என்று கேட்டு விட வேண்டியது தான் ;தேவைப்பட்டால் பஞ்சாப கேசன் சாரின் காதில் போட்டு விட வேண்டியது தான்; அவர் போன்றவர்களிடம் ஊழல் மனிதர்கள் பேசவே நடுங்குவர் என்று நினைத்துக்கொண்டே டீ சாப்பிட க்கிளம்பினார்  மா சா. வழியில் எதிர்ப்பட்டார் ராமசாமி . டேய் 12 மணிக்கு DRM என்னைக்கூப்பிட்டிருக்கிறார் என்றார் மாசா . எதுக்கு சம்பந்தம் பேசப்போறீங்களா என்று கிண்டல் அடித்த ராமசாமி    உடனே டேய் அவர் ஆந்திராவோ கர்நாடகாவோ -நீ என்ன சம்பந்தம் பேச முடியும் என்றார்  ராமசாமி. மாடசாமிக்கு சிறிது எரிச்சல் வந்தது டேய் நீ சரியான தரகன் டா ஆபிஸ் வந்து சம்பந்தம் பேசறது , ஊதுபத்தி , எலி மருந்து , அப்பளம் விக்கிறது இதெல்லாம் உனக்கு தாண்டா  ஐடியா  வரும், சரி வா போய் டீயை சாப்பிடுவோம் என்று கேன்டீன் போனால் அங்கே ஜெயப்ரகாஷும் கேப்ரியல் சாரும் டீ சாப்பிட அமர்ந்திருந்தனர். அதனால் வேறு டேபிள் நோக்கி நகர , கேப்ரியல்இன்னா மேன் ஓடுறீங்கோ இப்பிடி வாங்கோ அல்லாரும் டீ சாப்பிட தானே வந்திருக்கோம் , நம்ப வேலையே அதுதானே ஹஹ் ஹ் ஹா என்று சிரித்தார். ஜெயப்ரகாஷ் மாடசாமிக்கு செக்ஷன் தலைவர் எனவே மாசா தயங்க, பரவா இல்ல வாங்க சார் என்று ஜெயப்ரகாஷ் அழைத்தார். 2 சாமிகளும்  அதே டேபிளில்     அமர்ந்தனர். குண்டூர் பையன் பேசறானா என்றார் கேப்ரியல் ராமசாமி தலை ஆட்டினார்.நல்ல ஸ்மார்ட் பாய் சூப்பரா வந்துடுவான் அங்கயே எங்கனா இருக்க சொல்லுங்கோ இங்கே வந்தா சோம்பேறி ஆயி தூங்கு மூஞ்சிங்கோ மாதிரி ஆய்டுவான் ஹஹ் ஹ் ஹா என்று சிரித்தார்.

டீ வைபவம் முடிந்து அவரவர் செக்ஷன் திரும்பினர். செக்ஷனில் மாசா , JP இடம் சார் DRM என்னை வரச்சொன்னாராம் என்றார். தெரியும் கொஞ்ச முன்னால செக்ஷன் சுப்பரின்டென்டென்ட் சதாசிவம் சொன்னார் போயிட்டு வாங்க என்றார். சரியாக 12.00 மணிக்கு . DRM இன் PA  இடம் தன் பெயர் சொல்லி அனுமதி       கேட்டார் மாசா . யெஸ் கம் இன் என்ற கீச்சுக்குரல் ஒலிக்க , கூப்பிய கரங்களுடன் ஆஜானுபாகுவாய் உள்ளே நுழைந்தார் புஸ்தி மீசை மாடசாமி . YOU ARE              Mr .மாடசாமி ? என்றார் DRM , YES SIR என்று சிரித்தார் மாடசாமி .ப்ளீஸ் டேக் யுவர் சீட் என்றார் DRM . தயங்கியபடியே நின்றார் மாடசாமி .எழுந்து வந்த DRM .உரிமையுடன் மாடசாமியின் தோள்களை கீழ் நோக்கி அழுத்தி ஒரு சேரில் அமரவைத்து CONGRATULATIONS , YOU HAVE DONE PROUD TO OUR DIVISION , I AM VERY HAPPY என்று சொல்லிக்கொண்டே மல்ஹோத்ராவிடம் இருந்து வந்த கவரை மாடசாமியிடம் தந்தார். . உள்ளிருந்த கடிதம் Dear Shri Shivaprasad என்று துவங்கியிருந்ததைப்பார்த்து , இட் ஐஸ் யுவர் லெட்டர் என்றார் மாசா. yes , you can read --no problem என்றார் சிவபிரசாத் . கூடவே இருந்த பாராட்டுக்கடிதம் கண்ட மாடசாமி , மனதினுள் மாரியம்மனை வழிபட்டார்.தயங்கியபடியே மாடசாமி --சார் can I get a  copy  என்று பாராட்டுக்கடிதம் காண்பித்துக்கேட்டார். sure என்று சொல்லிய DRM , NANCY என்றழைத்தார் ;உடனே NANCYஓடி வந்தாள் . PLEASE MAKE 2 PHOTOCOPIES என்று பாராட்டுக்கடிதத்தை அவளிடம் கொடுத்தார். அடுத்த நிமிடம் 2 காபிகள்+ஒரிஜினல் DRM இடம் தந்து விட்டு தனது இருக்கை நோக்கி நடந்தாள் [.அவள் கௌரியின் கிளாஸ் மேட் +2 வரை ]. 2 காப்பிகளை மாடசாமியிடம் கொடுத்து இன்னும் 4 தினங்களில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து டீ பார்ட்டி வைத்து, முறைப்படி இந்த பாராட்டு கடிதத்தை மேடையில் எல்லோர் முன்னிலையில் வழங்க இருக்கிறேன். சனிக்கிழமை மாலை இந்த AC ஹாலில் இருக்கும் .எல்லா பிரிவுக்கும் கடிதம் அனுப்புகிறேன் ;உங்கள் செக்ஷன் ஸ்டாப் , நண்பர்களை வரச்சொல்லுங்கள் வாழ்த்துகள் என்று கை குலுக்கி விடைகொடுத்தனுப்பினார் DRM

தொடரும்  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...