Sunday, July 2, 2023

SAMIs COME TOGETHER -53

 SAMIs COME TOGETHER -53

சாமிகள் சங்கமம் -53

மேடம் காட்டிய கண்டிப்பில் அனைவரும் , இனியும் கவனக்குறைவாக இருந்தால் மேடம் சும்மா விடமாட்டார் ,அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது எனவே மிகுந்த கவனமாகப்படிக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டனர். வாரா வாரம் பேராசியர் சந்திப்பு ஒரு அரு மருந்தாக வேலை செய்தது .6 பேர் நீங்கலாக மீதமிருந்தோரில் சிலர் நாமும் பேராசிரியரை சந்தித்து விளக்கம் கேட்டால் நல்லது தானே என்று யோசித்தனர். கௌரி சொன்னாள் "அது போல் செய்வதற்கு முன் மேடம் அவர்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டால் நல்லது. மேலும் நாம் படிப்பில் ஆர்வம் கொண்டுள்ளோம் எனில் மேடமே  மேலும் சில வரைமுறைகளை சொல்லித்தருவார் மிகுந்த ஈடு பாடு கொள்வார்.அது நல்லது" என்றாள் .  அவ்வாறே முயற்சி மேற்கொண்டதும் மேடம் மேலும் சில மாணவர்களை வேறு பேராசிரியர்களின் பொறுப்பிலும்,. சிலரை தன்  பொறுப்பிலும் சேர்த்துக்கொண்டு , கிட்டத்தட்ட அனைவருமே கற்கும் உத்திகளை நன்றாக புரிந்து கொண்டனர் . உரிய கற்கும் முறைகளை, கீழ் வகுப்புகளில் முறையாக வகுத்துக்கொள்ளாமல் பட்டமேற்படிப்புக்கு வந்ததும் கடலில் நீந்துவது போல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் கற்பது எவ்வாறு என்பதை முதலில் கற்கவேண்டும் அதாவது FORMULA FOR LEARNING  என்பது மையக்கருத்தை புரிந்து கொள்ளுதல் + நுணுக்கமான தகவல்களை மையக்கருத்துடன் தொடர்பு படுத்திப்பார்த்தல் + MNEMONICS  என்னும் முறையான குறுக்கு வழி அறிதல். அதாவது MNEMONICS ஒரு சொல்லாகவோ , சில சொற்களின் தொகுப்பாகவோ , ஒரு வாசகமாகவோ அமைக்கப்பட்டு , அது ஒரு நீண்ட தகவலை உணர்த்தும் உத்தியாகப்பயன் படுவது.  இவற்றை க்கற்றுக்கொண்டால் பின்னாளில் லெக்ச்சரர் தொழிலில் பிரகாசிக்கவும் பேராசிரியர்களாக பரிமளிக்கவும் பெரிதும் உதவும்.

உதாரணமாக 12 ராசிகளையும், முறையான வரிசையில் நினைவில் கொள்ள ஒரு   MNEMONIC

A  Tense Grey Cat Lays Very Low Sneaking Slowly Contemplating A  Pounce    

A= ARIES, T= TAURUS, C=CANCER, L=LEO, V=VIRGO, L=LIBRA, S=SCORPIO,S=SAGITTARIUS C=Capricorn. A=AQUARIUS,P= PISCES   [THE SIGNS OF ZODIAC]       பல நீண்ட பகுதிகளை நினைவில் கொள்ள MNEMONIC SYSTEM அனைத்து பாடப்பிரிவுகளிலும்  உருவாக்கப்பட்டு வெகுவாகப் பயனளிக்கிறது.                                                                         இது போன்ற செயல் நுணுக்கங்கள்,  கற்றலை எளிதாக்குவதுடன், கற்பதில் ஆர்வத்தையும் அதிகரிக்க வல்லவை .                                                                                                                                                                   எந்த செயல் வெற்றிக்கும் ஆர்வம் தான் அடிப்படை ;எனவே கற்பிக்கும் முறைகளில் மற்றும் கற்றலில் ஆர்வம் விதைக்கப்பட்ட வேண்டும் . பிறிதொரு செயல் முறை "பேச்சாற்றல்” சார்ந்தது. சிறப்பான பேச்சாற்றல் கொண்ட ஆசான்கள், மாணவர்களை எளிதாக கவர்ந்து கட்டிப்போட்டு விடுவார்கள்.  அதன் பின்னர், மாணவர்கள் PIED PIPER OF HAMELIN எனும் கதையில் வரும் எலிகள் போல ஆசிரியரின் பின்னே அணிவகுக்கத்தலைப்படுவர். அதுபோன்ற திறமைசாலிகள் சுபத்திரா மேடம் குழுவில் இடம் பெற்றிருப்பதால் அவர்களின் துறை சிறப்பாக இயங்குகிறது மாணவர்கள் அனைவரும் சிறப்பாகப்பயின்று வெற்றி ஈட்ட இருக்கின்றனர்.                                                             தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...