Tuesday, July 4, 2023

SAMIs COME TOGETHER -54

 SAMIs COME TOGETHER -54

சாமிகள் சங்கமம் -54

சுபத்திரா மேடம் வழங்கிய மற்றும் அந்தத்துறை சார்ந்த பேராசிரியர்களும் அவ்வப்போது வழங்கிய வழிகாட்டுதல் முறைகளையும் உணர்ந்து படித்து முதலாம் ஆண்டின் இரண்டாம் பருவ [II SEMESTER ] ந் தேர்வுகளை எளிதாக /திறம்பட எழுதி பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

“அடுத்த பருவம் துவங்கியதும் பயிற்சிப்பட்டறை[WORK SHOP]துவங்கிவிடும்; எனவே அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்திற்கு 2 நாள் முன்னதாக அனைவரும் வந்து விடுங்கள்;நீங்கள் தான் வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் வழங்கப்போகிறீர்கள் . மேடையின் கீழே அமர்ந்து கொண்டு கிக்கி பிக்கி என்று சிரித்துவிட்டு அவ்வப்போது காபி/டீ /உணவு , டிபன் என்று வயிற்றை நிரப்பிக்கொண்டு போய்விட முடியாது. பொறுப்புகளை ஈடேற்றுவது என்றால் என்ன என்று பழகிக்கொள்ளுங்கள் .நாளை நீங்கள் வேறு வேறு ஊர்களில் பணி யில் அமர்ந்தவுடன் உங்கள் மீது பொறுப்புகள் சுமத்தப்படும் ; அப்போது இந்த சுபத்திரா ஒன்றும் பயிற்சியே தரவில்லை என்று புலம்பக்கூடாது. இந்த வாய்ப்பை சரியாகப்பயன் படுத்துவதும் தவற விடுவதும் உங்கள் கையில்” என்று லேசாக புளியைக்கரைத்தார் . மேலும்உங்கள் மொபைல் எண்ணை எனது டேபிளில் உள்ள சிவப்பு அட்டை கொண்ட கையேட்டில் 3ம் பக்கத்தில் பெயருடன் எழுதி எந்த  ஊர் என்றும் தெளிவாக எழுதி வையுங்கள்.. நான் திடீரென்று கூப்பிடுவேன் -எச்சரிக்கை என்றார். மேலும் பகல் வெயிலில் ஊர் சுற்றாமல் TRAVEL எனும் ஆங்கில சேனலில் நல்ல நிகழ்ச்சிகள் வரும் அவற்றைப்பாருங்கள் முடிந்தால் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். ஆங்கில விளக்கம் புரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேளுங்கள் அல்லது ஆடுகள் போல் விழியுங்கள். ஆங்கிலப்பயிற்சிகளை கற்றுக்கொள்ளாததன் பலனை உணருங்கள். இனியாவது கற்றுக்கொள்ளுங்கள். ஊரில் மகிழ்ச்சியாக பொறுப்பாக விடுமுறையைக்கழியுங்கள்  குட் லக்” என்றார் மேடம்.

ஓராண்டிற்குள் எவ்வளவு நட்பு வளர்ந்து விட்டது மாணவ மாணவியர் இடையே . சுகன்யா வும் கௌரியும் உள்ளூர் வாசிகள் அதனால் விடுமுறை இங்கேயே தான். ஆனால் ஒவ்வொருவர் ஊருக்குப்போகும் போதும் இருவரும் வழி அனுப்பி வைத்து பிற மாணவர்கள்  இவர்கள் இருவரும் வகுப்பிலேயே முதல் வருபவர்கள் ஆனால் கொஞ்சமும் தலைக்கனம் இல்லாமல் வந்து வழி அனுப்பி வைக்கிறார்கள் .இது போன்ற பண்புகளை கற்றுக்கொள்ள வழி ஏற்படுத்திய சுபத்திரா மேடத்துக்கு எப்படி நன்றி சொல்வது. அடுத்த ஆண்டில் மேடம் சொல்வதை இம்மி பிசகாமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனத்திலும் வியாபித்தது.இவ்விடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும் .                                                                                                                                                        ஆம் விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டுமே , ஆசிரியர்களுக்கு அல்ல. ஆனால் சமுதாயத்தில்  , "ஆசிரியர்களுக்கு என்ன எப்போது பார்த்தாலும் விடுமுறை தான் " என்று ஆசிரியர்கள் சுக வாழ்வு வாழ்வதாக எண்ணுகிறார்கள். உண்மை அது வல்ல. 10ம் வகுப்புக்கு மேல்  எந்த நிலையிலும்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் உண்மையான விடுமுறை என்பது 10அல்லது 12 நாட்களை தாண்டாது. அதுவும் சேர்ந்தாற்போல் கிடைப்பது அரிது.அதிலும் துறைத்தலைவர், சீனியர் லெக்ச்சரர் நிலை நபர்களுக்கு ஒன்று மாற்றி ஒன்று பொறுப்புகள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதாவது விடைத்தாள் மதிப்பீடு செய்தல், சிலபஸ் கமிட்டி , புதிய ஆண்டில் காலண்டரில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்கு என்று உருவாக்கப்படும் குழுவில் பணிகள், கல்லூரி அல்லது பல்கலைக்கு மேற்பார்வை நிமித்தம் வரும் குழுக்களுக்கான தகவல் தொகுப்பு [REPORT ]தயார் செய்தல் , புது ஆண்டின் விண்ணப்ப படிவங்கள் தயார் செய்தல், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் [DISCIPLINE COMMITTEE ] பரிந்துரைகளின் படி எவருக்கேனும் தண்டனை வழங்கல் குறித்த தகவல் தொகுப்பு, , மற்றும் பல்வேறு குழுக்களை மாற்றி அமைக்கும் போது , யார் யார் எந்தெந்த பணிகளில் இணைக்கப்படலாம் போன்ற ஆலோசனை வழங்குதல் போன்ற கூட்டங்கள் 4 நாட்களுக்கு ஒரு முறை கூட்டப்படும் .இப்படியே போய்க்கொண்டு ஜூன் மாத முதல் வாரம் வந்து விடும். சற்று இளைப்பாறும் நேரத்தில் குழந்தைகளுக்கு பள்ளி துவங்கிவிடும் , தப்பித்தவறி வெளியூர் சென்றிருந்தால் கூட 4, 5 நாட்களில் பணியிடம் திரும்ப நேரிடும். இதெல்லாம் பொது மக்களுக்கு தெரியாது . வாத்யார் னாலே லீவு தான் என்று கிண்டல் பேச்சு வேறு சகஜம் .மற்றோர் கிண்டல் "அவருக்கென்ன 'வாத்யார்' -படிக்கணுமா எழுதணுமா ஒரு கவலை இல்லை " என்பார்கள். ஆனால் மிகச்சிறப்பாக காலூன்ற நினைக்கும் பேராசிரியர் எவராயினும் அவ்வப்போது தகவல் மேம்பாடு எனும் updating செய்யவில்லை என்றால் மாணவர் மத்தியில் கேவலமான பிறவியாகப்பார்க்கப்படுவதை சுமந்து தான் ஆக வேண்டும் . இவ்வாறெனில் சுபத்திரா போன்றோரின் நிலை எப்படி இருக்கும் சற்று சிந்தியுங்கள் .அவர் போன்றோர் வினாடி கூட அசட்டையாக இருக்க இயலாது . இருந்தால் சந்தி சிரிக்கும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய அவலமாகிவிடும் .

தொடரும் அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...